"டேஞ்ச்சரா" போகுதே.. எடப்பாடிக்கு வேற வழியே இல்லையா.. சைக்கிள் கேப்பில் எகிறியடிக்கும் பாஜக.. பலே
தென்மண்டலத்தில் தமிழக பாஜக வாக்கு வங்கியை பலப்படுத்த முனைந்துவிட்டது
சென்னை: தென்மண்டலத்தில் தமிழக பாஜக வாக்கு வங்கியை பலப்படுத்த முனைந்துவிட்டது.. இதற்கும், அதிமுகவில் நிலவும் பலவீனங்களே காரணங்களாக அமைந்துவருவதாக கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பிருந்தே, தேவர் ஜெயந்தி நிகழ்வையொட்டி, பசும்பொன்னுக்கு அஞ்சலி செலுத்த எடப்பாடி பழனிசாமி வருவாரா? அப்படி வந்தால், ஓபிஎஸ் - சசிகலா இணைந்து வருவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழ ஆரம்பித்தது.
இந்த சமயத்தில் சம்பந்தமேயில்லாமல், பிரதமர் மோடி பசும்பொன் வர உள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டது.. மோடி பசும்பொன் வருவது உண்மையா? பசும்பொன்னை நோக்கி வருவதால், இது ஓபிஎஸ்ஸுக்கான ஆதரவாக எடுத்து கொள்வதா? என்பன போன்ற கேள்விகளும் தமிழக அரசியலில் சுழன்றடித்தது..

முற்றுப்புள்ளி
ஆனால், அடுத்த சில தினங்களில் அண்ணாமலை இதுகுறித்து விளக்கம் தந்து, றெக்கை கட்டி வந்த யூகங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.. "அப்படியெல்லாம் எந்தத் திட்டமும் இல்லை... பிரதமரை அனைத்து குருபூஜைக்கும் அழைத்து வர வேண்டும் என்று ஆசைதான். ஆனால், இந்த ஆண்டு அதற்கான வாய்ப்பில்லை. அடுத்த ஆண்டு அவரை அழைத்து வருவோம்" என்று தெளிவுபடுத்தியிருந்தார்.. அப்படியானால், இந்த செய்தியை கிளப்பிவிட்டது யார் என்ற அடுத்த கேள்வியும் கிளம்பியது. யாரோ திட்டமிட்டே இந்த வதந்தியை பாஜகவுக்கு எதிராக கிளப்பிவிட்டதாக சொல்லப்பட்டது.

நச் பேட்டி
ஆனால், மோடி உண்மையிலேயே தேனி வருவதாக ஒரு ப்ளான் இருந்ததாம்.. பசும்பொன்னுக்கு வந்து முக்குலத்தோர் வாக்கு வங்கிக்கு குறி வைத்தாலும், முக்குலத்தோர் வாக்குகளை அவ்வளவு எளிதாக பெற முடியாது.. அதுமட்டுமல்ல, அப்படியே பசும்பொன்னுக்கு வந்தாலும், இதன்மூலம், நாடார், தேவேந்திர குல வேளாளர்களின் ஆதரவையும் இழக்க வேண்டியிருக்கும் என்று டெல்லி மேலிட பொறுப்பாளர்களுக்கு ஒரு தகவல் இங்கிருந்து அனுப்பப்பட்டதாம்.. இதையடுத்துதான், அண்ணாமலை, அப்படி ஒரு பேட்டியை ஏர்போட்டில் தந்தார் என்று சலசலக்கப்பட்டது.

சென்ட்டிமென்ட்
எனினும், மோடி பசும்பொன்னிற்கு வருகை என்று வெளியான பொய்த்தகவலுக்கு பின்னணியில் பலமான அரசியல் இருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதினார்கள்.. காரணம், மதுரை என்பது பாஜகவின் சென்ட்டிமென்ட் தொகுதி.. எந்தஒரு முக்கிய ஆலோசனை, முடிவுகளை எடுப்பதானாலும் மதுரையில் இருந்தே, பாஜக தலைவர்கள் திட்டமிட்டு துவங்குவதால், பசும்பொன்னில் மோடி வந்தால் நன்றாக இருக்கும் என்றே முதலில் நினைக்கப்பட்டதாம். அதேசமயம், பிரதமர் வருவதாக ஒரு தகவலை பரப்பி, பாஜக ஆதரவு எப்படி உள்ளது என்பதற்கான ஆழம் பார்க்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.

தெம்பு சான்ஸ்
எதிர்பார்த்ததைவிட, நல்ல ரிசல்ட் பாஜகவுக்கு சென்றதாம். இதனால் அக்கட்சி தெம்பாகிவிட்டது.. இந்த சான்ஸையே பயன்படுத்தியே, அண்ணாமலை பசும்பொன்னிற்கு வந்து அஞ்சலி செலுத்த முடிவானதாம்.. "தமிழகத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் ஐயா இப்போது மறுபடியும் தேவைப்படுகிறார். அவர் தமிழ் மண் எப்படி இருக்க வேண்டும் என நினைத்தாரோ, அதை நிச்சயமாக பாஜக செயல்படுத்தும். அவரின் எண்ணங்களை நிறைவேற்றும்" என்று அண்ணாமலை பேசிவிட்டு சென்றதுகூட, அந்த நோக்கத்தின் வெளிப்பாடு என்கிறார்கள்.

டேமேஜ்
பாஜகவுடன் நெருக்கமாக உள்ள ஓபிஎஸ்ஸுக்கு இது எந்தவிதமான பாதிப்பையும் தராவிட்டாலும், எடப்பாடி பழனிசாமிக்கு நெருடலை தந்து வருகிறதாம்.. ஏற்கனவே முக்குலத்தோர் சமூகத்தின் அதிருப்தியை அதிகமாக எடப்பாடி சம்பாதித்து வரும் நிலையில், இந்த கேப்பை பாஜக, சரியாக பயன்படுத்தி கொண்டுவிட்டதாகவே பார்க்கப்படுகிறது.. எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பாஜக மேலிடத்திற்கு கட்டுப்படாத நிலையில், அவரது செல்வாக்கையும் டேமேஜ் செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளதாம்.. இப்படி நெருக்கடிகள் தருவதன்மூலம், எடப்பாடி விரைவில் இறங்கி வரக்கூடும் என்றும் மேலிடம் நம்புவதாக தெரிகிறது.

தேவேந்திரா
அதுமட்டுமல்ல, "2015ம் ஆண்டு டெல்லியில் தேவேந்திரகுல வேளாளர்களுடன் சந்திப்பு நடத்தினேன். அப்போது தேவேந்திர என்பதும், நரேந்திர என்கிற என்னுடைய பெயரும் ஒன்றாக இருக்கிறது என்றேன். தேவேந்திர குல வேளாளர் என்பது பெயர் மாற்றம் கிடையாது, அது நீதியானது. தேவேந்திர குல வேளாளர்கள் நாகரிகம் சார்ந்தது" என்று அன்றே பிரதமர் மோடி பேசியிருந்தார். இந்த பேச்சு தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தவர்களின் கவனத்தை தற்போது வரை இழுத்து பிடித்து வைத்து வருகிறது.. தென் மாவட்டங்களிலும் டெல்டா பகுதியிலும் இந்த சமூகத்தை சேர்ந்த பலர் பாஜகவை நோக்கி செல்லவும் வழிவகுத்தது..

"வீக்" எடப்பாடி
புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், அதிமுக ஆகிய கட்சிகள் இந்த சமூக வாக்குகளை அதிகமாக பங்கிட்டு வந்த நிலையில் பாஜகவும் அதில் இணைந்ததை மறுக்க முடியாத நிலையில், தற்போது அடுத்த கட்ட முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.. வரப்போகும் எம்பி தேர்தலில் தேவர் சமுதாய மக்கள் மட்டுமல்லாமல், நாடார்கள், தேவேந்திர குல வேளாளர்கள் அடர்த்தியாக இருக்கும் விருதுநகர், தென்காசி, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்காக ஒரு கணக்கை தமிழக பாஜக போட்டு வருகிறது... இவை அனைத்துமே எடப்பாடி பழனிசாமிக்கு சறுக்கலை தந்துள்ளது.. ஆக, எங்கெல்லாம் எடப்பாடியின் செல்வாக்கு வீக் ஆகி வருகிறதோ, அங்கெல்லாம் பாஜக தன் செல்வாக்கை நிலைநாட்டி கொண்டிருக்கிறதாம்..!!!
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications