அவசர அவசரமா "ஹெட்ஆபீஸ்" ஓடும் எடப்பாடி பழனிசாமி..அதென்ன கையில்?.. திமுகவில் "இவருக்கு" சிக்கலா? பரபர
சென்னை: தமிழகத்தில் பெரும் பரபரப்புகள் சூழ்ந்துக்கொண்டுள்ள நிலையில், நாளைய தினம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
எம்பி தேர்தலுக்கு முன்பேயே, பலம்வாய்ந்த திமுகவை வீழ்த்த, பாஜக பக்காவாக காய்களை நகர்த்தி வருகிறது.. முக்கியமாக, அவதூறுகளையும், குற்றச்சாட்டுகளையும் பரப்பி டேமேஜ் செய்வதன் மூலம், திமுக மீதான நன்மதிப்பை குறைக்கும் வியூகத்தை, கடந்த 2 வருட காலமாகவே தமிழக பாஜக முன்னெடுத்து வருகிறது.

லிஸ்ட்: செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டபோதே, டெல்லி டார்கெட் செய்யப்பட்ட லிஸ்ட்டில் மேலும் 5 திமுக அமைச்சர்கள் இருப்பதாகவும், அதிலும், 2 அமைச்சர்கள் பெயர் டாப்பில் உள்ளாகவும் சலசலக்கப்பட்டது.
ஒருவர் கொலை முயற்சி வழக்கில் சிக்கியவராம்.. இன்னொருத்தர் பொறியியல் கல்லூரி வைத்து நடத்தி வருவராம்.. அதனால், இவர்கள் எந்நேரமும் வருமான வரித்துறை, அமலாக்கத் துறையினரின் வளையத்துக்குள் வரக்கூடும் என்கிறார்கள்.. இதுபோக பவர்புல் அமைச்சர் ஒருவரிடம் அடுத்த குறி பாயலாம் என்கிறார்கள். அந்த சமயத்தில்தான் பொன்முடி விவகாரம் சூடுபிடித்தது.
தங்கம் தென்னரசு: பொன்முடி வழக்கின் தீர்ப்பு, மீண்டும் பார்ட் 2- துவங்கிய நிலையில், அனிதா ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், என்று லிஸ்ட் விரிவடைந்துள்ளது..
இப்படி திமுக அரசின் அமைச்சர்களை குறிவைத்து வருமானவரித்துறையும், அமலாக்கத்துறையும் மாறி மாறி இயங்கி வருகின்றன. இவர்களுக்கு கொடுக்கப்படும் அசைண்மெண்ட்படி, தேவைப்படும்போதெல்லாம் ரெய்டுகளும் நடக்கின்றன. ரெய்டுகளுக்கு செல்வதற்கு முன்பு, போதுமான அளவுக்கு ஆதாரங்களை சேகரித்தப்பிறகே ரெய்டுக்கு போகிறார்களாம்.
நேற்றைய தினம்கூட, அமலாக்கத்துறையினர் தமிழ்நாட்டில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, வேலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, திருவள்ளூர் என பல மாவட்டங்களில் மணல் குவாரி அலுவலகங்கள், மணல் விற்பனை செய்யும் இடங்கள், மணல் ஒப்பந்ததார்கள் அலுவலகர்கள் என்று இந்த சோதனைகள் நடந்தன.
யாருக்கு குறி: மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது, வடமாவட்ட அமைச்சர் டார்கெட் செய்வதற்காகத்தான் என்றும் செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில்தான், நாளைய தினம் டெல்லி பறக்கிறார் எடப்பாடி பழனிசாமி.. ஏற்கனவே உதயநிதியின் சனாதன பேச்சை, முன்னெடுத்து பாஜக அரசியல் செய்து வருகிறது.. இதை வைத்தும் திமுக மீதான குறியை அழுத்தமாக விரிவுபடுத்தி வருகிறது..
இதை கண்டித்து தமிழக பாஜக போராட்டம் நடத்திய நிலையில், அதிமுக அந்த அளவுக்கு பெரிதாக ரியாக்ட செய்யவில்லை.. சனாதன பரப்பும், ரெய்டு பரப்புகளும் இன்னும் ஓயாத நிலையில்தான், எடப்பாடி டெல்லி கிளம்புகிறார்.. விரைவில் தேர்தல் வரஉள்ள நிலையில், கூட்டணி முடிவாகி உள்ளதாக தெரிகிறது. ஆனால், கடந்த முறை டெல்லி சென்றபோதே, எடப்பாடி பழனிசாமியிடம் கூட்டணி, சீட் விவகாரம் குறித்து பாஜக மேலிடம் பேச முயன்றதாம்.
டிசம்பர் மாதம்: கடைசி நேரத்தில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இதற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டாராடம்.. தேர்தலுக்கு இன்னும் டைம் இருப்பதால், டிசம்பர் மாத வாக்கில் இதை பற்றி பேசிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டாராம். அதனால், கூட்டணி தவிர, பாஜக + அதிமுக இடையே வேறு எந்த பேச்சுவார்த்தையும் இதுவரை முடிவாகவில்லை.. அதற்கேற்றவாறு, இதுவரை எடப்பாடி + அண்ணாமலை தரப்பில் முழுமையாக இணக்கமாகவில்லை என்றும் தெரிகிறது.
எனினும், சீட், தொகுதி விவகாரங்கள் குறித்து, எடப்பாடி பழனிசாமி நாளைய தினம், பாஜக தலைவர்களிடம் பேசக்கூடும் என தெரிகிறது. இதற்கு நடுவே இன்னொரு செய்தியும் கசிந்துள்ளது.. மொத்தம் 3 திமுக அமைச்சர்கள் மீது ரகசிய ஊழல் பட்டியலை எடப்பாடி பழனிசாமி தயார் செய்துள்ளாராம்.. இதைத்தான், அமித்ஷாவிடம் புகாராக தர போகிறாராம். இதன் முன்னோட்டமாகத்தான் இப்போது தமிழகம் முழுவதும் அமலாக்கத் துறை ரெய்டு நடத்தி வருகிறது என்கிறார்கள்..
எகிறும் எதிர்பார்ப்பு: ஏழரை லட்சம் கோடி ஊழலுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல், ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற பிரச்சனைகளை கிளப்பிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பை கிளப்பி கொண்டிருக்க, திமுக மீதான ஊழல் புகார் லிஸ்ட்டுடன், நாளை டெல்லிக்கு கிளம்புகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.. நாளை அப்படி என்னதான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்...!!!
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications