திருமாவளவன் போதுமே.. "இதுக்கே" திமுக ஓட்டு காலி.. தைலாபுரத்துக்கு கேட்டுச்சா.. அட "மாஸ்டர்" எடப்பாடி
சென்னை: விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. இதில் அதிமுகவுடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணி வைக்க போகின்றன என்கிற எதிர்பார்ப்புகள் கிளம்பி உள்ளன. அந்தவகையில், நமக்கு சில பிரத்யேகமான தகவல்கள் கிடைத்துள்ளன.
சில நாட்களுக்கு முன்பு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு ஒரு பேட்டி தந்திருந்தார். வழக்கம்போல், எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து, தன்னுடைய கருத்துக்களை கூறியிருந்தார்.

"பெரம்பலூரில் இருந்து கன்னியாகுமரி வரைக்கும், அதிமுகவுக்கு மொத்தமே 10 சதவீதம் வாக்கு உள்ளது.. சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காற்காடு, தென் ஆற்காடு, தருமபுரி, சேலத்தில் 10 சதவீத வாக்கு உள்ளன.
கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், நாமக்கல், ஈரோடு தொகுதிகளில் 15 சதவீதம் மட்டுமே உள்ளன.. பாமக இல்லாமல் வட தமிழகத்தில் அதிமுகவால் வாக்கு பெற முடியாது. எடப்பாடி தொகுதியிலேயே பாமக ஆதரவால் தான் பழனிசாமி வெற்றி பெற்றார்" என்று கூறியிருந்தார்.
பாமக கொங்கு: கொங்குவிலேயே எடப்பாடி பழனிசாமிக்கு வாக்கு வங்கி பலமாக இல்லை என்பது, ஈரோடு இடைத்தேர்தலில் நிரூபணமானாலும், தினகரன் சொல்வது போல், பாமகவை தவிர்த்துவிட்டு, "அதிமுக கொங்கு"வை எடை போட முடியாது என்று அரசியல் விமர்சகர்களும் கருத்து கூறியிருந்தனர்.
அப்படியானால், இந்த முறையும் பாமகவுடன் அதிமுக கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.. அதுவரை, திமுகவுடன் பாமக கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்ட நிலையில், நெய்வேலி போராட்டத்தை அன்புமணி முன்னெடுத்ததுமே, அந்த கணிப்பும் தகர்ந்து கீழே விழுந்தது. இதனால், அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகும் என்று அரசியல் கணக்கு போடப்பட்டது. ஆனால், இந்த கணக்கும் நொறுங்கிவிட்டது.. இதை நொறுக்கியவர் சாட்சாத் எடப்பாடி பழனிசாமியேதானாம்..
திமுக & பாமக: பாமகவே கூட்டணிக்கு வேண்டாம் என்ற முடிவுக்கும் வந்துவிட்டாராம்.. இதற்கு என்ன காரணம்? இதுகுறித்துதான் நமக்கு சில பிரத்யேகமான தகவல்கள் கிடைத்துள்ளன.
அதாவது, அதிமுக தலைவர்களிடம், தொடர்ச்சியாக ஆலோசனை செய்தபடி இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. ஒரே நாடு ஒரே தேர்தல், உதயநிதியின் சனாதன எதிர்ப்பு பேச்சு, அதனால் அதிகரித்துக்கு வரும் திமுகவுக்கு எதிரான அரசியல் என நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்கிறாராம் எடப்பாடி... அதேசமயம், பாமகவை பற்றியும் எடப்பாடி அதிகம் பேசுகிறாராம்.
பாமக கூட்டணி: "அதிமுக கூட்டணியில் இனி பாமகவை சேர்த்துக் கொள்ளக் கூடாது. 2019-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் நமக்கு பாமகவால் எந்த பலனும் இல்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு 10 .5 சதவீதம் கொடுத்தோம்.
மேலும் கோடிக்கணக்கான பணமும் கொடுத்தோம். ஆனால், வட மாவட்டங்களில் அதிமுகவிற்கு பெரிய அளவில் வெற்றியை பெற்று தரவில்லை பாமக. அத்துடன், அ.தி.மு.கவை சேர்ந்த அமைச்சர்கள் 3 பேரும் தோல்வி அடைந்தார்கள்.
பாமக வெற்றிபெற்ற 4 தொகுகளில், கொங்கு மண்டலமான தர்மபுரி மாவட்டத்தில் பென்னகரத்திலும், சேலம் மாவட்டம் மேட்டூர், சேலம் மேற்கு தொகுதியிலும் தான் பாமக வெற்றிப்பெற்றது. சேலம் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதியை தவிர, மொத்த தொகுதியும் 2016-ல், பாமக கூட்டணியில்லாமலேயே அதிமுக வெற்றிபெற்றது.
பென்னாகரம்: தர்மபுரி, பென்னாகரம் தொகுதியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இப்பொழுது ஜி.கே.மணி வெற்றிபெற்றது நம்முடைய கூட்டணியால்தான். விழுப்புரம் மாவட்டத்தில் மைலம் தொகுதியில் சில, பல, கரணங்களால். பாமக வெற்றிபெற்றது. பாமக நம்மளுடன் இருந்தால், பட்டியலின மக்களும், பிற சமூகத்தினரும் வாக்கு அளிக்கவில்லை.
அதிமுக கூட்டணி: கடந்தகால தேர்தல்களில் டாக்டர் ராமதாஸ், அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சிகளிடத்திலும் மறைமுகமாக பேர அரசியல் செய்து ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும். இப்பொழுது பாமகவிற்கான கதவை திமுக முழுவதும் மூடிவிட்டது. எனவே, வன்னியர் வாக்கு வங்கி, திமுக பக்கம் செல்ல வாய்ப்பில்லை. 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை திமுக தான் கெடுத்துவிட்டது.. வன்னியர்களுக்கு நாம் 5 அமைச்சர் பதவிகள் கொடுத்தோம், ஆனால், அவர்களோ 3 அமைச்சர்கள் தான் கொடுத்துள்ளனர்..
வன்னியர்களுக்கு திமுகவில் முக்கியஸ்துவம் தரப்படுவதில்லை.. மேலும் திமுக கூட்டணியில் திருமாவளவன் இருப்பதாலும் வன்னியர் சமூக ஓட்டு திமுகவுக்கு கிடைக்கப்போவதில்லை. அதனால் பாமக மீது கடுப்பில் இருக்கும் வன்னியர்கள், 10.5. உள் இடஒதுக்கீட்டையும் நாம் கொடுத்தோம் என்ற அடிப்படையில், பாமக இல்லாமலேயே, பாமக வாக்குகள் அதிமுகவுக்கு வரும்..
பெருகும் எதிர்பார்ப்பு: 2014 பாராளுமன்ற தேர்தலில் பாமகவை கூட்டணியில் சேர்க்காமல் வன்னியர்கள் அதிக இருக்கும் தொகுதிகளில் அதிமுகவில் உள்ள வன்னியர்களை வேட்பாளர்களாக நிறுத்தி மாபெரும் வெற்றியை புரட்சி தலைவி அம்மா ஜெயித்தது போல் நாமும் வியூகம் அமைக்கலாம். அதனால், நம்முடைய கூட்டணிக்கு பாமக தேவை இல்லை" என்றெல்லாம் சொல்லி வருகிறாராம் எடப்பாடி பழனிச்சாமி. ஆக, கூட்டணி விஷயத்தில் என்ன நடக்க போகிறதென்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்தேனா? நாக்கில் நரம்பிருக்கா பழனிசாமி? ஸ்டாலின் ஆவேசம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications