க்ளைமாக்ஸுக்கு வந்த பாஜக.. எடப்பாடிக்கு சைஸா "காட்டிய" மெசேஜ்.. பெரிய தலை போட்ட ஸ்கெட்ச்.. போச்சா
எடப்பாடி பழனிசாமிக்கு 2 விதமான நெருக்கடிகளை தருவதற்கு பாஜக தரப்பு துவங்கி உள்ளதாம்
சென்னை: 2 விதமான மறைமுக நெருக்கடிகளை எடப்பாடி பழனிசாமி மீது பாஜக மேலிடம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.. இதற்கு எடப்பாடி பழனிசாமி பணிவாரா? வழக்கம்போல் அசராமல் நிற்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது..!!
ஒன்றுபட்ட அதிமுகவை விரும்பும் பாஜக மேலிடம், கடந்த சில மாதங்களாகவே, உட்கட்சி விவகாரங்களில் தலையிடாமல் இருந்தது.. கடந்த சில நாட்களாகத்தான், எடப்பாடி & ஓபிஎஸ் இரு தரப்பையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்காக மறைமுக அழுத்தம் தரப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
பாஜக தலையிட துவங்கியதாக தகவல்கள் கசிந்ததுமே, ஓபிஎஸ் டெல்லிக்கு செல்கிறார் என்றும், பிரதமர் மோடி, அமித்ஷா இருவரையும் சந்தித்து பேச போவதாகவும், வைத்தியலிங்கம் கூறியிருந்தார்.

டரியல் ப்ளான்
ஏற்கனவே, தாம் மேற்கொண்ட முயற்சிகள் எல்லாமே தோல்வியில் முடிவடைந்துவிட்ட நிலையில், வழக்குகள், விசாரணைகள் கழுத்தை நெரிக்கும் நிலையில், பாஜகவின் மறைமுக பிரஷர் எகிறி வரும் நிலையில்கூட அசராமல்தான் இருந்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதைவிட முக்கியமாக, உச்சநீதிமன்ற உத்தரவு, பின்னடைவாகிவிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி அப்செட்டில் இருப்பதாகவும், அதனாலேயே சேலத்துக்கு உடனடியாக கிளம்பிவிட்டதாகவும் சொல்லப்பட்டது..

குருமூர்த்தி
ஆனால், சேலத்திற்கு சென்ற பிறகுதான், "அதிமுகவிற்கு எதிராக செயல்படுபவர்களை இனி கட்சியில் சேர்க்க வாய்ப்பே இல்லை... அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது... ஒரு கட்சி விவகாரத்தில் இன்னொரு கட்சி தலையிட முடியாது என்று தி்ட்டவட்டமாக சொன்னது, ஓபிஎஸ் + பாஜக என இரு தரப்புக்குமே தரப்பட்ட மெசேஜ் போல பார்க்கப்பட்டது... அதேசமயம், திமுகவைவிட அதிக ஓட்டு வங்கியை பெற்றுள்ள அதிமுக, எடப்பாடி விஷயத்தை லேசில் விடாது என்கிறார்கள்.. எப்படியாவது கட்சியை ஒன்றிணைக்கவே பார்க்கும் என்றும், அதற்காக எந்த முயற்சியையும் கையில் எடுக்கும் என்றும் சொல்கிறார்கள்..

ஸ்கெட்ச் A
குருமூர்த்தி நேற்று முன்தினம் பேசிய பேச்சின் அனல் இன்னும் குறையவில்லை.. "அதிமுக தொடர்ந்து இதே போல் இருந்தால் அது சின்ன கட்சியாக மாறிவிடும். அதிமுகவின் அடையாளமாக எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே இருந்தால் அதிமுக சின்னக்கட்சி ஆக மாறிவிடும்" என்று கூறியுள்ளது எடப்பாடிக்கான மறைமுக உத்தரவாகவே பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, மைத்ரேயன் விஷயத்திலும் மேலிட பாஜகவின் அரசியல் இருக்கவே செய்கிறது என்கிறார்கள்..

ஸ்கெட்ச் B
ஒற்றைத் தலைமை பிரச்சினை வெடித்தபோது, யாருமே கூப்பிடாமல் போய் எடப்பாடியை சந்தித்து ஆதரவு தந்தவர் மைத்ரேயன்... அவர் இன்று தடாலடியாக ஓபிஎஸ் பக்கம் தாவி உள்ளதன் பின்னணியும் அலசப்பட்டு வருகிறது.. இத்தனை முறை டெல்லி சென்றும், எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக தரப்பில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காத நிலையில்தான், மைத்ரேயன் வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் பக்கம் வந்திருக்கிறார் என்கிறார்கள்.. ஆரம்பம் முதலே ஓபிஎஸ்ஸுடன் நெருக்கமாக மைத்ரேயன் இருந்தாலும், அதைவிட நெருக்கமாக மேலிட பாஜகவிடம் நெருங்கி உள்ளார்.. அமித்ஷா சிக்னல் கொடுத்ததாலேயே ஓபிஎஸ் பக்கம் மைத்ரேன் சென்றுள்ளதாக ஒரு தகவல் வட்டமடித்து வருகிறது. எனினும், இதற்கும் எடப்பாடி அசராமல் உள்ளதாகவே தெரிகிறது.

குஷி தேனி
பொறுமையாக சொல்லி சொல்லி மேலிட பாஜக, இன்னும் எத்தனை விதமான நெருக்கடிகளை எடப்பாடிக்கு தரப் போகிறதே தெரியவில்லை.. இப்படித்தான், மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே - ஏக்நாத் ஷிண்டே முட்டிக் கொண்டு, சிவசேனா கட்சியின் சின்னமே முடக்கப்பட்டுவிட்டது.. பாஜக நினைத்தால் எதையும் செய்யும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.. இத்தனைக்கும் பெரும்பான்மையை வைத்திருப்பவர் ஏக்நாத் ஷிண்டே.. ஆனால், பாஜகவோ சிவசேனாவின் சின்னத்தை முடக்கிவிட்டது.. அந்தவகையில், இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கிவிட்டால், அதை எடப்பாடி எப்படி கையாள்வார் என்று தெரியவில்லை.. ஆகமொத்தம், மகாராஷ்டிராவில் நடந்த சின்னம் முடக்கம் விவகாரம் தேனியில் செம குஷியை ஏற்படுத்தி உள்ளதாம்..!!

வலையோ வலை
இன்னொரு தகவலும் வட்டமடிக்கிறது.. தற்போது அதிமுகவுக்குள் குழப்ப மனநிலையில், சோர்ந்து போய் உள்ள அதிருப்தியாளர்களுக்கு வலையை வீச பாஜக முயற்சித்து வருகிறதாம்.. இதுதான் அதற்கான சமயம் என்றும் யோசித்து, இதற்காகவே ஒரு டீமையும் உள்ளே இறக்க உள்ளதாக தெரிகிறது.. இப்படியா? அப்படியா? என்ற மதில்மேல் பூனையாக உள்ளவர்கள் யாரென்பதை கண்டறிந்து அவர்களை கட்டம் கட்ட முயற்சி நடக்கிறதாம்.. இதுபோக, வழக்கு விசரணைகளில் சிக்கி உள்ளவர்கள் யார் என்பதை பார்த்து அவர்களையும் குறி வைத்து நகர தொடங்கி உள்ளதாம்.. அதிமுக பலவீனமடைந்தால் இனி வரும் காலங்களில் அதன் ஆதரவாளர்கள் பாஜக பக்கம் நகரக்கூடும் என்று ஏற்கனவே அரசியல் நோக்கர்கள் எச்சரித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications