எடப்பாடிக்கு ‘கிலி’.. ஸ்டாலின் போட்ட ரகசிய கணக்குகள்.. ‘சீக்ரெட்’ ஆலோசனை.. பிளஸ் யாருக்கு?
சென்னை : எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அருணா ஜெகதீசன் கமிட்டி சமர்ப்பித்துள்ள ரிப்போர்ட்டை வைத்து முதல்வர் ஸ்டாலின் பல்வேறு பாசிட்டிவ் - நெகட்டிவ் கணக்குகளைப் போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு சட்ட ரீதியான தண்டனை உறுதி என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையிலேயே தெரிவித்த நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகின்றனர்.
அடுத்ததாக, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பொறுப்பான அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருவது பற்றியும் முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் சில அரசியல் கணக்குகளைப் போட்டிருப்பதாகவும், அதன்படியே அடுத்தடுத்த மூவ்கள் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

தூத்துக்குடி சம்பவம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய அருணா ஜெகதீசன் ஆணையம் சமர்ப்பித்த அறிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை சட்டசபையில் வெளியிடப்பட்டது. ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு படுகொலைகள் தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை, போலீசார், அரசு அதிகாரம் பற்றிய பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது.

டிவியை பார்த்துதான்
அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 'தொலைக்காட்சியைப் பார்த்துதான் துப்பாக்கிச்சூடு பற்றி தெரிந்துகொண்டேன்' எனக் கூறியதும் பொய் என அம்பலப்படுத்தியிருக்கிறது அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை. தூத்துக்குடி போராட்டம், துப்பாக்கிச்சூடு பற்றிய ஒவ்வொரு அப்டேட்டும் முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டது என சாட்சியங்களின் அடிப்படையில் குறிப்பிட்டுள்ளது அருணா ஜெகதீசன் ஆணையம்.

புட்டுப் புட்டு
போராட்டம் நடத்திய மக்கள் மீதே கொடூரமான முறையில் போலீஸை ஏவி 13 உயிர்கள் கொல்லப்பட்ட விவகாரம் அப்போதே கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியது. மக்களின் கோபம் தன் மீது திரும்பி விடக் கூடாது என்பதற்காகவே, தொலைக்காட்சியை பார்த்துத்தான் துப்பாக்கிச்சூடு சம்பவத்தையே தெரிந்துகொண்டேன் என்றார் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், இப்போது, அவர் சொன்னது பொய், ஒவ்வொரு அப்டேட்டும் அவருக்கு சென்று கொண்டிருந்தது என புட்டுப் புட்டு வைத்துள்ளது அருணா ஜெகதீசன் ஆணையம்.

ஸ்டாலின் ஆலோசனை
இப்போது எடப்பாடி பழனிசாமி மீது இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்து வருகிறாராம். தூத்துக்குடி கொடூர சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருவது ஆளுங்கட்சிக்கு எதிராக திரும்பாது என்ற ரிசல்ட்டே கிடைத்திருக்கிறதாம். கொடூரமான முறையில் நடைபெற்ற சம்பவத்தில் ஈபிஎஸ் மீது நடவடிக்கை எடுத்தால், ஆளுங்கட்சிக்கு பாசிட்டிவாகவே அமையும் எனக் கூறப்பட்டுள்ளதாம்.

பாசிட்டிவ் விஷயங்கள்
மற்ற விஷயங்களைப் போல அரசியல் காழ்ப்புணர்ச்சி என இந்த நடவடிக்கையை அதிமுகவினர் விமர்சித்தாலும் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த விவகாரம் மக்கள் மத்தியில் அதிமுகவுக்கு எதிராக கோபத்தை ஏற்படுத்தியது என்பதால், இதில் எடுக்கும் ஆக்ஷன்கள் மக்கள் மத்தியில் திமுகவுக்கு பாசிட்டிவான பலனையே ஏற்படுத்தும் எனக் கூறப்பட்டுள்ளதாம்.

ஆளுங்கட்சிக்கு பலன்
மேலும், இப்போது இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு உள்ளிட்ட எந்த நடவடிக்கை எடுத்தாலும், பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் திமுக அரசு இருப்பதாக தோற்றத்தையே உருவாகும். எளிய மக்களுக்கு திமுக அரசு மீது நம்பிக்கை ஏற்படும். இது அப்படியே அதிமுகவுக்கு எதிரானதாக மாறும். அதனால், விமர்சனங்களைப் பற்றி யோசிக்காமல் எடப்பாடி பழனிசாமி மீதும் வழக்குப்பதிவு செய்யலாம் என ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திட்டமிட்டு செய்தது உறுதி
துப்பாக்கிச்சூடு குறித்து முன் எச்சரிக்கை கொடுக்கப்படவில்லை என்பதும், சுடப்பட்டவர்களில் ஒருவர் கூட முட்டிக்குக் கீழே சுடப்படவில்லை என்பதும் இது திட்டமிட்ட படுகொலை என்பதை உறுதி செய்வதாகவும் ஆணைய அறிக்கை தெரிவித்துள்ளது. போலீசார் ஒளிந்துகொண்டு தப்பித்து ஓடியவர்களையும் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர் என்றும், 17 காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது ஆணையம்.

ஈபிஎஸ்ஸின் பங்கு
ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பின்னர் விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் குற்றம் செய்தது உறுதியானால் டிஸ்மிஸ் செய்யப்படுவதோடு நீதிமன்றத்திலும் தண்டனை பெறுவார்கள். அதேபோல, எடப்பாடி பழனிசாமி மீதும் வழக்குப்பதிவு செய்து, அவரிடமும் விசாரணை நடத்தி அப்போது ஈபிஎஸ் சொன்னது பொய் என்பதையும், இந்த துப்பாக்கிச்சூட்டில் அவரது பங்கையும் நிரூபிக்க அரசு தரப்பு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
-
சேலத்தில் ஸ்டாலின், கமல்ஹாசன் முன்பே.. விஜய்யை பங்கமாக கலாய்த்த பிரேமலதா -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
"எங்க ஏரியாவுக்கு வா"! சுந்தர் சி முன்பே "ஸ்டைல் பாண்டி" டயலாக் சொன்ன எடப்பாடி! குலுங்கிய மதுரை! -
ஜெயலலிதா இருந்தவரை வாலை சுருட்டி இருந்தாங்க.. நான் இருந்திருந்தால்.. கண் சிவந்த சசிகலா -
மீஞ்சூரில் சூறையாடப்பட்ட மாணவி.. வாய் திறப்பாரா ஸ்டாலின்? உச்சகட்ட கோபத்தில் எடப்பாடி பழனிசாமி! -
Delimitation: பொருளாதாரம், நிதி ஆதாரத்தில் பெரிய ஓட்டை விழும்.. தென்னிந்திய மாநிலங்களுக்கு 'இரட்டை தண்டனையா'? -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
கடுகடு ராகுல்.. கண்டு கொள்ளாத ஸ்டாலின்! கரையேறுமா காங்கிரஸ்? தனி ரூட் எடுத்துப் பாயும் அறிவாலயம்! -
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
மாப்ள சிவசங்கர் தான்.. ஆனால் சட்டை செந்தில் பாலாஜியோடது! திமுகவின் போலி கூப்பன்! அன்புமணி அட்டாக்!












Click it and Unblock the Notifications