‘டாப்’ தலையே குடைசாயுதே.. 2 லீடர்களும் இல்லாத நேரத்தில் மாஜிக்கள் தீவிர ‘டிஸ்கஸ்’! என்ன மேட்டர்?
சென்னை : சட்டப்பேரவையில் நேற்று ஓபிஎஸ், ஈபிஎஸ் பங்கேற்காத நிலையில், ஓபிஎஸ் அணியின் வைத்திலிங்கம், ஈபிஎஸ் அணியின் விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் அருகருகே அமர்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வைத்திலிங்கத்தை தங்கள் அணிக்கு கொண்டு வர எடப்பாடி தரப்பு முயற்சிகளை மேற்கொண்டு வந்ததாக கூறப்பட்ட நிலையில், இந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்க உள்ள நிலையில், ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகளைச் சேர்ந்த 2 முக்கிய நிர்வாகிகள் சட்டசபையில் ஒன்றாகப் பேசிக் கொண்டிருந்தனர்.
கடந்த ஜூன் மாதம் தொடங்கிய அதிமுக மோதலைத் தொடர்ந்து, இரு தரப்பினரும், மாற்று அணியினரை மிகவும் கடுமையாக விமர்சித்துப் பேசி வருகின்றனர். இந்நிலையில், விஜயபாஸ்கர் - வைத்திலிங்கம் உரையாடல் கவனம் பெற்றுள்ளது.

வைத்திலிங்கம்
டெல்டா மண்டலத்தில் மிகுந்த செல்வாக்கு பெற்றவர் வைத்திலிங்கம். அவருக்கு ஜெயலலிதாவிடமும் நல்ல செல்வாக்கு இருந்தது. அதனால் தான் நால்வர் அணியிலும் அப்போது இடம்பிடித்தார் வைத்திலிங்கம். 2011ல் அமைச்சரவையில் இடம்பெற்ற வைத்திலிங்கத்தால் அடுத்த முறை வெற்றி வாகை சூட முடியவில்லை. 2016 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த சில நாட்களிலேயே அவருக்கு உடனடியாக ராஜ்யசபா எம்.பி பதவியை வழங்கினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் பார்வை இருந்ததால் சோழ மண்டலத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் வைத்திலிங்கம்.

ஓபிஎஸ் அணியில்
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமியும் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அதனால் கட்சியின் முக்கிய பொறுப்புக்கும் வந்தார். ஆனால், ஈபிஎஸ் அணியில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியதால், ஓபிஎஸ் பக்கம் சாய்ந்தார். கடந்த ஜூன் மாதம், ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டி ஒற்றைத் தலைமைக்கு வர எடப்பாடி பழனிசாமி முயன்றதுமே, ஓபிஎஸ்ஸுக்கு நம்பிக்கை கொடுத்து, அவருக்கு பக்கபலமாக நின்றவர்களில் முக்கியமானவர், முதன்மையானவர் வைத்திலிங்கம் தான்.

தங்கள் பக்கம் இழுக்க
தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு எதிராகக் களமாடிய வைத்திலிங்கம், சசிகலாவுடன் ஓபிஎஸ்ஸை இணைத்து வைக்கவும் பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். தங்களுக்கு குடைச்சலாக இருக்கும் வைத்திலிங்கத்தை தங்கள் பக்கம் கொண்டு வந்தால் ஓபிஎஸ் ஆட்டத்தை காலி செய்துவிடலாம் என தீவிரமாக முயன்றது எடப்பாடி பழனிசாமி தரப்பு. ஆனால், ஈபிஎஸ்ஸின் இந்த திட்டத்தை, ஈபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகிகள் பலரே விரும்பவில்லை எனக் கூறப்பட்டது. வைத்திலிங்கம் தங்கள் அணிக்கு வந்தால் முக்கிய பதவியை கேட்பார், குழப்பம் வரும் என தவிர்த்ததாக கூறப்பட்டது.

வைத்திலிங்கத்துடன் பேச்சுவார்த்தை
இந்நிலையில், வைத்திலிங்கத்துடன் ஈபிஎஸ் அணியினர் தொடர்ச்சியாகப் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தில் விரைவில் வரவிருக்கும் பொதுக்குழு வழக்கு தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்கிற பின்னணியில் வைத்திலிங்கத்திடம் பேசி வருகின்றனராம். ஒருவேளை ஈபிஎஸ் அணிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்து, தேர்தல் ஆணையத்திலும் அதுவே உறுதியானால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலானது தான் உண்மையான அதிமுக என்ற நிலை வரும். கட்சி தாவல் தடை சட்டத்தின் அடிப்படையில் ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களின் பதவி பறிபோகும்.

பேசிக் கொள்வதில்லை
இதையெல்லாம் மனதில் வைத்து வைத்திலிங்கம் ஈபிஎஸ் தரப்பின் பேச்சுகளுக்கு செவி கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது அ.தி.மு.க இரு அணிகளாக பிளவுபட்டுள்ளதால், எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வேண்டும் என ஈபிஎஸ் அணியினர் சபாநாயகருக்கு கடிதம் கொடுத்துள்ளனர். ஆனாலும், சபாநாயகர் இதில் எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை. இதனால் தமிழ்நாடு சட்டசபையில் ஓபிஎஸ் இருக்கை மாற்றப்படாமல் ஈபிஎஸ் இருக்கை அருகேதான் உள்ளது. இருவரும் அருகருகே இருந்தாலும் பேசிக் கொள்வதில்லை. அதேபோல, இரு அணிகளைச் சேர்ந்தவருகளும் ஒருவொருக்கொருவர் பேசிக் கொள்வதில்லை.

உரையாடிய 2 அணி மாஜிக்கள்
முதல் சட்டப் பேரவைக் கூட்டத்தொடரின் இறுதி நாளான நேற்று, ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவருமே சட்டமன்றத்திற்கு வரவில்லை. இந்த நிலையில் ஈபிஎஸ் அணியின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும், ஓபிஎஸ் அணியின் மாஜி அமைச்சர் வைத்திலிங்கமும் அருகருகே அமர்ந்திருக்கும் நிலையில் நேற்று இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலுக்குப் பிறகு இரண்டு முறை சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுள்ள நிலையில், இதுவரை இல்லாத வகையில் இரு அணியின் மாஜிக்களும் பேசிக்கொண்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அணி மாறுவாரா?
ஏற்கனவே, வைத்திலிங்கத்தை தங்கள் பக்கம் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி தரப்பு மேற்கொண்ட முயற்சிகளும், நேற்று சட்டசபையில் நடந்த விஜயபாஸ்கர் - வைத்திலிங்கம் பேச்சும் அதிமுக தொண்டர்களிடையே பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. ஓபிஎஸ்ஸின் வலது கையாக இருக்கும் வைத்திலிங்கம், அவரைக் கைவிட்டு எதிர் தரப்புக்குத் தாவுவாரா? இல்லை, தனது ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டிலேயே தொடர்வாரா என்பது போகப்போகத் தெரியும்.
-
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
ரூ.10க்கு சோறு, குழம்புடன் சுவையான மதிய உணவு.. 25 ரூபாய்க்கு அசைவ உணவு.. பாமக செம வாக்குறுதி! -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்! -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
ராயபுரத்தை கேட்ட ஆளூர் ஷாநவாஸ்.. டீலில் விட்டது ஏன்? திருமாவளவன் சொன்ன பாயிண்ட்! இதுதான் காரணம் -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
சென்னையின் அடுத்த மேயர் நீங்கள் தானா? கேள்வி வந்ததும் திவ்யா சத்யராஜ் முகத்தில் அவ்வளவு சிரிப்பு! -
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி












Click it and Unblock the Notifications