சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வீட்டு பிரசவங்கள் தாய்க்கும் குழந்தைக்கும் நல்லதா? தீயதா? டேட்டாவுடன் டாக்டர் பரூக் விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: மரபுவழி வீட்டுப் பிரவசங்கள் தாய் சேய் நலனுக்கு நல்லதா? தீயதா? என்பது குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் விளக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: மரபுவழி வீட்டுப் பிரவசங்கள் தாய் சேய் நலனுக்கு நல்லதா? தீயதா? சட்டீஸ்கர் மாநில பாஸ்தார் வாழ் பழங்குடி சமூகங்கள் வழி பார்வை. வீட்டிலேயே மருத்துவ உதவி மற்றும் கண்காணிப்பு ஏதுமின்றி நடக்கும் பிரசவங்கள் - மரபு வழி பிரசவங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தியாவிலும் சரி தமிழ்நாட்டிலும் சரி 1970 களுக்கு முன்பு வரை - மருத்துவச்சி / தாதிகள் பிரசவம் பார்க்க வீட்டிலேயே பிரசவங்கள் நடந்து வந்தன.

அப்போது தற்போது உள்ள அளவு வளர்ச்சி அடைந்த மருத்துவ கட்டமைப்பு இல்லை, மருத்துவர்கள் இல்லை, சிசேரியன் இல்லை. 1970 களில் தமிழ்நாட்டில் ஒரு லட்சம் குழந்தை பிறப்புக்கு 1650 முதல் 1750 தாய்மார்கள் இறந்து வந்தனர் என்கிறது செய்யப்பட்ட ஆய்வு. இப்போது 2017 -2019 தமிழ்நாட்டில் 99.9% பிரசவங்கள் மருத்துவமனைகளில் மருத்துவ கண்காணிப்பில் நடக்கின்றன. இப்போது தமிழ்நாட்டில் ஒரு லட்சம் குழந்தை பிறப்புக்கு 58 தாய்மார்கள் மட்டுமே இறக்கின்றனர்.

கேரளாவில் காய்ச்சலுக்கு மருத்துவமனை வந்த சிறுமிக்கு பாத்ரூமில் பிரசவ வலி.. ஆண் குழந்தை பிறப்பு கேரளாவில் காய்ச்சலுக்கு மருத்துவமனை வந்த சிறுமிக்கு பாத்ரூமில் பிரசவ வலி.. ஆண் குழந்தை பிறப்பு

1500 மரணங்கள்

1500 மரணங்கள்

1970 களில் 1500 மரணங்கள் எங்கு இருக்கிறது. 2020 களில் 58 மரணங்கள் எங்கு இருக்கிறது என்று பாருங்கள். இதற்கான காரணம் கர்ப்பமான உடனே தாய்மார்களைக் கண்டறிந்து தொடர்ந்து அவர்களுக்கு வழங்க வேண்டிய கர்ப்ப கால பரிசோதனைகளைச் செய்து அவர்களது ரத்த அழுத்தம் , ஹீமோகுளோபின், உடல் எடை போன்றவற்றை பரிசோதித்து, அவ்வப்போது ஸ்கேன் செய்து , இத்துடன் சத்தான உணவுப் பழக்கம் கற்றுக்கொடுத்து, அவர்கள் கர்ப்ப காலத்தில் ஓய்வு எடுக்க ஏதுவாக பணப்பயன்கள் கொடுத்து இலவசமாக எந்த வித சொந்த செலவும் செய்யாமல் மருத்துவமனைகளில் இலவசமாக பிறப்புறுப்பு வழி பிரசவமாக இருந்தாலும் சரி சிசேரியன் வழி பிரசவமாக இருந்தாலும் சரி செய்து அவர்களின் பின் பேறுகால கவனிப்பும் செய்து குழந்தைக்கு தடுப்பூசி வழங்கி தொற்றுகளில் இருந்து காக்கும் சேவைகளை அரசும் சுகாதாரத் துறை ஊழியர்களும் தொடர்ந்து செய்து வந்தமையால் தான் இந்த மாற்றம் உண்டாகியது.

1980களில் எப்படி

1980களில் எப்படி

எப்படி 1980 கள் வரை தாக்கம் செய்து கொண்டிருந்த போலியோ நோய் , வருடாந்திர போலியோ சொட்டு மருந்து தினம் மற்றும் போலியோ தடுப்பூசிகளின் பயனால் இப்போது அறவே இல்லையோ அதே போல தாய்மார்களில் 99.9% பேர் தங்களின் முந்தைய சந்ததியினரில் அதிக மரணங்களை ஏற்படுத்தி வந்த மரபு வழி பிரசவங்களை விடுத்து மருத்துவமனைகளில் பிரசவம் பார்த்துக் கொள்ள வந்தனர். அதன் விளைவாக பிரவசங்களின் போது இறப்பு என்பது அரிதினும் அரிதான நிகழ்வாகி விட்டது. சரி இப்போது மீண்டும் மரபு வழி பிரசவத்திற்கு செல்லுமாறு அழைப்புகள் வருகின்றனவே. இது குறித்து எப்படி விழிப்புணர்வு பெறுவது ? இதற்காகத் தான் மரபு வழி பிரசவத்தை அதிகமாக கடைபிடித்து வரும் சத்தீஸ்கர் பாஸ்தார் மாவட்ட பழங்குடி மக்கள் குறித்து அறிய வேண்டும்.

ஒடிஸா மாநிலம்

ஒடிஸா மாநிலம்

சத்தீஸ்கர் என்பது ஒரிசாவுக்கு அருகில் உள்ள மாநிலம் அங்கு பாஸ்தார் எனும் மாவட்டம் உள்ளது . முழுவதும் இயற்கை எழில் கொஞ்சும் மலைகள் அடர்ந்த காடுகள் அருவிகள் அடங்கிய நிலப்பரப்பு அது, இந்திய பழங்குடியினரின் சொர்க்க பூமி என்று அழைக்கப்படும் அங்கு கோண்டு இனம், பத்ரா இனம், முரியா இனம், ஹல்பா இனம், துருவா இனம் என்று பல்வேறு இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுள் 2010 களுக்கு முன்பு வரை பெரும்பாலும் மரபு வழி பிரசவங்கள் மட்டுமே நடந்து வந்தன. அடர்ந்த காடுகளுக்குள் வசிக்கும் இவர்கள் அத்தனை எளிதாக வெளி உலகுக்கு வர மாட்டார்கள். எனவே இவர்களுக்கென்று தனி நம்பிக்கைகள் , தனி பழக்கவழக்கங்கள் என்று இருந்தனர். இந்த நிலையில் 2007 முதல் 2011 வரை பாத்ஸார் மாவட்டத்தின் தலைமை நகரான ஜக்தால்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பம் /பிரசவம் சார்ந்து இறப்புக்குள்ளான பழங்குடியின தாய்மார்கள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வுகள் என்ன

ஆய்வுகள் என்ன

அதில் பல்வேறு செய்திகள் கிடைத்தன. அங்கு கிடைத்த ஆய்வு முடிவுகள் படி 2007-2008 பழங்குடி மக்களிடையே தாய்மார்கள் இறப்பு விகிதம் 1611.876.
2008-2009 - 1615.881
2009-2010 - 1168.325
2010-2011 - 1000
என்ற அளவில் அபாயகரமான அளவில் இருந்தது. இவர்களில் பெரும்பான்மையினர் அப்போது வீட்டில் மரபு வழி பிரசவம் பார்த்தவர்கள் கர்ப்ப காலத்தின் போது எந்த சிகிச்சையும் எடுக்காதவர்கள். கடைசி நேரத்தில் பிரவசத்தில் சிக்கல் என்றவுடன் வண்டியை கட்டிக் கொண்டு மருத்துவமனை நோக்கி வந்து மரணித்தவர்கள் என்பது தெரிந்தது. இதை சரி செய்ய அந்த மாவட்டத்தில் குறிப்பிட்ட ஒரு இடத்தை தேர்வு செய்து ஐந்து ஆண்டுகள் ( 2012 முதல் 2017 வரை) அங்கு அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் பல்வேறு மகப்பேறு நலத் திட்டங்கள் / பெண் கல்வி சார்ந்த முன்னேற்றத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதன் விளைவாக 75% தாய்மார்கள் தங்களது பிரசவத்தை மருத்துவமனைகளில் செய்து கொள்ள வந்தனர்.

பெண் கல்வி

பெண் கல்வி

பெண் கல்வி 17% இல் இருந்து 90.93% ஆக உயர்ந்தது. அதன் விளைவாக 2017இல் பாத்சார் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் ஒரு லட்சம் பிறப்புக்கு 240 மரணங்கள் நடந்து வந்த நிலையில் இத்தகைய சிந்தனை மாற்றங்களுக்கும் சமூக மாற்றங்களுக்கும் தங்களை தகவமைத்துக் கொண்ட அந்த குறிப்பிட்ட ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பகுதியில் 110 என்று மெடர்னல் மார்டாலிட்டி ரேட் குறைந்து இருந்தது. தமிழ்நாட்டிலும் தர்மபுரி மாவட்டத்தில் மிக அதிகமான பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். ஆயினும் பொது சுகாதாரத்துறையின் சீரிய செயல்பாட்டால் அத்தகைய பழங்குடி தாய்மார்களை கர்ப்பத்தின் ஆரம்பத்திலேயே கண்டறிந்து அவர்களுக்கு வழங்க வேண்டிய சேவைகளை செவ்வனே வழங்கி அவர்களது பிரசவங்களை மருத்துவமனைகளில் நிகழ்த்தி பின்பேறு கால கவனிப்பை சிறப்பாக வழங்கி பேறு கால தாய்மார்கள் இறப்பில் தமிழ்நாட்டிலேயே பழனியுடன் சேர்ந்து குறைவாக பதிவு செய்து தர்மபுரி சாதனை செய்துள்ளது.

பழங்குடியின மக்கள்

பழங்குடியின மக்கள்

பழங்குடி இன மக்களும் அவர்களது இடங்களிலேயே நவீன மருத்துவ சேவை மகப்பேறு சேவை அவசர கால சேவை கிடைப்பதை வரவேற்று உபசரித்து ஏற்றுக்கொண்டு மரபு வழி பிரவசங்களில் இருந்து மருத்துவமனை பிரசவங்களுக்கு வந்து கொண்டிருக்கின்றனர் . எனவே மரபு வழி பிரசவம் சிறந்தது என்ற கருத்து ஏற்புடையதல்ல. ஆபத்தானது. பேறு காலத்தில் முறையான கண்காணிப்பு , முறையான சிகிச்சை , தேவையான உணவு ஊட்டச்சத்து, தேவையான ஓய்வு , பிரசவத்தை மருத்துவமனையில் பார்ப்பது இவையனைத்தும் தாய்சேய் நலனைக் காக்கும் செயல்கள். இதை உறுதி செய்வது அரசின் கடமை பெற்றுக் கொள்வது ஒவ்வொரு தாய்மார்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் பொறுப்பு. இவ்வாறு தனது பதிவில் டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

English summary
Sivagangai Hospital Dr Farook Abdulla says about deliveries in home without going to hospital is good or not adviseable?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X