உச்சநீதிமன்றம் செம்ம குட்டு- 7 தமிழரை விடுவிக்க உடனே கையெழுத்து போடுங்க- ஆளுருக்கு ராமதாஸ் அட்வைஸ்
சென்னை: உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்கு உள்ளாகிவிட்ட நிலையில் இனியும் தாமதிக்காமல் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழரை உடனே விடுதலை செய்யும் கோப்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தம்மை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றம் மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஷ்வர ராவ் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழரை விடுதலை செய்ய முடிவு செய்த தமிழக அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டதற்கு உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்தது.

மத்திய அரசு நிலைப்பாடு
மேலும் நாடு விடுதலை அடைந்த பின்னர் முதல் முறையாக குற்றவியல் சட்டப் பிரிவு 302-ன் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரது விடுதலைக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வாதிட்டு வருவதையும் பேரறிவாளன் தரப்பு சுட்டிக்காட்டியது. மத்திய அரசின் நிலைப்பாட்டை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டால் இனி 302-வது பிரிவின் கீழ் தண்டனை பெறும் அனைவரையும் விடுதலை செய்யும் முடிவு மத்திய அரசு சென்றுவிடும்; இது மோசமான நிர்வாக சீர்குலைவுக்கு வழிவகுக்கும் எனவும் பேரறிவாளன் தரப்பில் வாதிடப்பட்டது.

விளாசிய நீதிமன்றம்
உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசாரணையின் போதும், மாநில அமைச்சரவை முடிவை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறதா? என்றெல்லாம் சராமரியாக கேள்வி கேட்கப்பட்டன. மேலும் ஆளுநரின் செயல்பாடுகள் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானதாக சீர்குலைப்பதாக சாடினர் நீதிபதிகள்.

ராமதாஸ் ட்வீட்
இது தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பேரறிவாளன் வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், 7 தமிழர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்காததற்காக தமிழக ஆளுனர் மாளிகையை கடுமையாக விமர்சித்திருக்கிறது. ஆளுனரின் நிலை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று கண்டித்திருக்கிறது. உச்சநீதிமன்றம் இப்படி விமர்சிக்கும் நிலையை தமிழக ஆளுனர் மாளிகை ஏற்படுத்தியிருக்கக்கூடாது. 7 தமிழர் விடுதலை குறித்து ஆளுனர் மாளிகை முன்கூட்டியே முடிவெடுத்திருக்க வேண்டும். ஆளுனர் 4 நாட்களில் சரியான பதிலளிக்கவில்லை என்றால் பேரறிவாளனை உச்சநீதிமன்றமே விடுதலை செய்யக்கூடும்.

விடுதலை கோப்பில் கையெழுத்திடுக
பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தால் அது ஆளுனர் மாளிகைக்கு அவப்பெயர் தேடித்தரும். அந்த நிலையை தவிர்த்து ஆளுனர் மாளிகையின் மாண்பை காக்க பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான கோப்பில் ஆளுனர் உடனடியாக கையெழுத்திட வேண்டும்!. இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications