ஆஹா.. மொத்தமா கிளம்பிட்டாங்களே! பொங்கலுக்கு கிளம்பிய சென்னை வாசிகள்! மூச்சு முட்ட திணறும் தாம்பரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவதற்காக தென் மாவட்டங்களுக்கு சென்னை வாசிகள் கூட்டம் கூட்டமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் படையெடுத்து வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற ஞாயிற்றுக்கிழமை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட இருக்கிறது இதற்கான ஏற்பாடுகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. கழனி வாழ் உழவர் பெருமக்கள் மண்ணுக்கும், மாக்களுக்கும் நன்றி தெரிவிக்க தயாராகி வருகின்றனர்.

பொங்கல் பொருட்களை வாங்க தமிழகத்தின் சென்னை தி.நகர் தொடங்கி கன்னியாகுமரி கல்குளம் வரை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொங்கல் களைகட்டியுள்ளது.

பொங்கல்

பொங்கல்

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக தமிழகத்தின் தலைநகரான சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ரயில் நிலையம் பேருந்து நிலையம் விமான நிலையம் என அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. சனி ஞாயிறு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஞாயிறில் வருவதும் ஒரு பக்கம் பள்ளி மாணவர்களை கவலையடையச் செய்துள்ளது.

 தொடர் விடுமுறை

தொடர் விடுமுறை


அதே நேரத்தில் பொங்கலுக்கு அடுத்த நாள் திருவள்ளுவர் தினமும் வருகிறது. இதனால் சனிக்கிழமையோடு 3 நாட்கள் அடுத்தடுத்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவதற்காக தென் மாவட்டங்களுக்கு சென்னை வாசிகள் கூட்டம் கூட்டமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் படையெடுத்து வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்

மேலும் கார்கள் மூலம் மக்கள் வெளியேறி வருதனால் சென்னை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் தாம்பரம், கிண்டி உள்ளிட்ட பல இடங்களில் வாகன போக்குவரத்து வழக்கத்தை விட அதிகரித்து ஆமை வேகத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. மாலையிலும் போக்குவரத்து வேகமடையாமல் சுணக்கமாகவே இருந்தது. குறிப்பாக அதிகமான வாகனங்கள் வருவதால் பெருங்களத்தூர் பேருந்து நிலையம் அருகே கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மக்கள் அவதி

மக்கள் அவதி

பெருங்களத்தூர் மேம்பாலம் மீதும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தொடர் விடுமுறை பயன்படுத்தி ஆம்னி பேருந்து அதிகமான கட்டணம் வசூலிப்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து தடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதும் மேலும் தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு கட்டண ரயில்களும் இயக்கப்படுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+