சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீலாங்கரை பீச்சில்.. தனிமையில் "ஜோடி".. சுற்றிலும் கும்மிருட்டு.. டக்குனு பார்த்தால், பக்கத்திலே 3 பேர்

நீலாங்கரை மெரினா கடற்கரைகளில் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன

Google Oneindia Tamil News

சென்னை: மெரினாவை தொடர்ந்து நீலாங்கரை பீச்சில் நடக்கும் சம்பவங்கள், சென்னைவாசிகளை கலங்கடித்து வருகிறது.. இதுகுறித்து போலீசாருக்கும் முக்கிய வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகின்றன.

4 நாட்களுக்கு முன்பு மெரினா பீச்சில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது.. சென்னை சாந்தோம் சர்ச்சுக்கு பின்புறம் உள்ள கடற்கரை பகுதியையொட்டி லூப் ரோடு உள்ளது..

இந்த சாலையில் இரவு 1.30 மணிக்கு நடுத்தர வயதுடைய சாந்தி என்ற பெண்,அவரது உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.. அப்போது மழை அதிகமாக பெய்ததால், டிரைவர் ஒரு ஓரமாக ஆட்டோவை நிறுத்தினார்..

கீறல்கள்

கீறல்கள்

அந்த நேரம் பார்த்து பைக்கில் வந்த 4 பேர் "மழை பெய்வதால், ஆட்டோவில் சிறிது நேரம் உட்கார்ந்து செல்கிறோம்" என்று சொல்லி ஆட்டோவில் உட்கார்ந்து கொண்டனர்.. பிறகு 4 பேருமே, ஆளுக்கொரு கத்தியை ஆட்டோ டிரைவரிடம் நீட்டினார்கள். "சத்தம் போடாமல் இங்கிருந்து ஓடிடு... சத்தம் போட்டால் நீ காலி" என்றதுமே, டிரைவர் ஓடிவிட்டார். சாந்தி மட்டும் தனியாக 4 பேரிடம் மாட்டிக் கொண்டார்.. சாந்தியிடம் நகை, பணத்தை தருமாறு மிரட்டியதுடன், சாந்தியின் முகத்திலும் ஓங்கி கத்தியால் குத்தினர்.. சாந்தியின் கழுத்திலும் கீறல் போட்டனர்...

 சாந்தி சாந்தி

சாந்தி சாந்தி

பிறகு அவரது காதில் இருந்த கம்மல், ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளை கும்பல் பறித்து கொண்டு ஓடியது.. சாந்தி ஆட்டோவில் இருந்து கத்தியதுமே, அந்த வழியாக வந்த ரோந்து போலீசார், கொள்ளையர்களை விரட்ட தொடங்கினர். கொள்ளையர்களில் 3 பேர், தாங்கள் வந்த பைக்கில் ஏறி பறந்தனர்.. ஆனால் ஒருவர் மட்டும் அந்த பைக்கில் அவசரத்தில் ஏற முடியாமல் தவித்து, போலீசில் சிக்கி விடக்கூடாது என்பதற்காகவே, அங்கிருந்து ஓடிச்சென்று கடலில் குதித்தார்.. போலீசாரும் விடாமல் துரத்தி சென்று, அவர்களும் கடலில் குதித்து, கடலில் இருந்து குண்டுகட்டாக கையையும், காலையும் பிடித்து அவரை கரைக்கு தூக்கி வந்து கைது செய்து, மற்றவர்களையும் தேடி பிடித்தனர்.

நீலாங்கரை

நீலாங்கரை

சென்னை போலீசாரின் இந்த அதிரடி செயல் அப்போது மிகுந்த பாராட்டை பெற்றது என்றாலும், மீண்டும் ஒரு கொள்ளை சம்பவம் நீலாங்கரை பீச்சில் நடந்துள்ளது.. அந்த இளைஞர் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர்.. 25 வயதாகிறது.. இவர் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில், நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள பீச்சில் தன்னுடைய காதலியுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்.. அந்த இடம் இருள் சூழ்ந்த பகுதி என்று தெரிகிறது.. 2 பேர் மட்டும் இருள் சூழ்ந்த இடத்தில் இருந்ததை கவனித்த 3 பேர் கொண்ட கும்பல், காதலர்களை சூழ்ந்து கொண்டது..

"போன் பே"

கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் கையில் வைத்திருந்த பைகளை பிடுங்கி கொண்டது.. ஆனால், இருவரது பையிலும், பணம் எதுவும் இல்லை.. இதனால், 3 பேருமே கடுப்பாகிவிட்டனர்.. உடனே காதலர்களின் செல்போனை பிடுங்கி, ஆன்லைன் டிரான்ஸாக்‌ஷனை பார்த்துள்ளனர்.. ஏடிஎம்மில் பணம் இருந்துள்ளதை பார்த்து, 40,000 ரூபாயை உடனே தங்களது அக்கவுண்ட்டுக்கு "போன் பே" செய்து கொண்டு, அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.. பாதிக்கப்பட்ட முகமது உசேன் இதுகுறித்து நீலாங்கரை போலீசில் புகார் அளித்துள்ளார்.

 டிரான்ஸ்சேக்‌ஷன்

டிரான்ஸ்சேக்‌ஷன்

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், கொள்ளையர்களின் வங்கி கணக்கை தீவிரமாக தேடி வருகின்றனர்... அதுமட்டுமல்லாமல், தனிப்படை அமைத்து காதலர்களிடம் ஆன்லைனில் கத்தி முனையில் பணம் பறித்த மூன்று நபர்களை நீலாங்கரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் இரவு 8 மணிக்கு மேல், இருள் சூழ்ந்த இடத்தில், பெரும்பாலான காதலர்கள் தனிமையில் வந்து உட்காருவார்களாம்..

 பீச் பீச்

பீச் பீச்

அவர்களிடமும் இந்த கும்பல் பலமுறை கைவரிசை காட்டி உள்ளது.. பணம், நகைகளை இழந்தவர்கள் போலீசுக்கு போகாமல் இருந்துள்ளனர்.. இந்த விஷயம் தெரியாமல், புது காதல்ஜோடிகள், இதே இடத்தில் அடுத்தடுத்து வந்து உட்காருவது, அந்த கொள்ளை கும்பலுக்கு வசதியாக இருந்துள்ளது.. இதுபோல வேறு சில கொள்ளை கும்பல்களும் பீச்களில் இதே வேலையாக சுற்றி திரிவதாக தெரிகிறது.. காதலர்களிடம் இதுபோன்று கத்தி முனையில் பணம் பறிக்கும் செயல் அதிகளவில் இப்பகுதியில் அரங்கேறி வருவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது.

English summary
ECR Beach: couple threatened at knife point and robbed 40 thousand rupees in chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X