ரவுடிகள் டூர் போற மாதிரி சுத்துறாங்க! எல்லா துறைகளிலும் லஞ்சம்! ஓராண்டு ஆட்சியை விமர்சித்த எடப்பாடி
சென்னை : திமுக ஆட்சிக்கு வந்து கடந்த ஓராண்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது எனவும், ஊழல் இல்லாத துறை இல்லை, அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் காவல்நிலையத்தில் இளைஞர் விக்னேஷ் மரணம் அடைந்த நிலையில், அவரது உடலில் காயங்கள் இருப்பதாகவும், போலீசார் அடித்து துன்புறுத்தியதன் காரணமாகவே விக்னேஷ் உயிரிழந்தார் என்றும் புகார் எழுந்தது.
இளைஞர் விக்னேஷின் மரணத்துக்கு பல தரப்பிலிருந்து நீதி கேட்டு வரும் நிலையில், தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அதிமுக இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றம் வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறது. இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்திலும் இவ்விவகாரம் எதிரொலித்தது.
சட்டசபையில் இதுகுறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயங்கள் இருந்தது, பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. எனவே இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறிய நிலையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதிமுக வெளிநடப்பு
வெளிநடப்புக்குப் பிறகு கோட்டை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "விக்னேஷ் மரணம் தொடர்பான சிபிஐ விசாரணை நடத்தினால், நேர்மையாக நியாயமாக இருக்கும். இந்த மரணம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் கூறினார். போலீசார் விசாரணை நடத்தினால் நியாயம் கிடைக்காது. தருமபுர ஆதினத்தில் பல ஆண்டுகளாக பட்டின பிரவேச நிகழ்ச்சி நடக்கிறது. இது ஆன்மிக நிகழ்ச்சி. பழிவாங்கும் நோக்கத்தோடு இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காலங்காலமாக நடந்து வருகிறது.

தருமபுரம் ஆதீனம் விவகாரம்
அங்கே தங்கியிருந்து பல்லக்கு தூக்குபவர்கள், பாரம்பரியமாக நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். ஆதீன எல்லைக்குள் தான் நடக்கிறது. இதற்கு தடை செய்ய அதிகாரம் இல்லை. ஆனால், திட்டமிட்டு அரசியல் காரணங்களுக்காக பட்டின பிரவேச நிகழ்ச்சியை தடை செய்தது கண்டிக்கத்தக்கது. இது குறித்து கருத்து தெரிவித்த மதுரை ஆதீனத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தது கண்டிக்க தக்கது. ஆன்மிகத்தில் அரசு தலையிடுவதை ஏற்று கொள்ள முடியாது.

தீபாவளி வாழ்த்து
முதல்வர் பொதுவானவர். அவர் எந்த கட்சியையும், மதத்தையும் சாராதவர். பல்வேறு மதங்களை சேர்ந்த பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும். தீபாவளிக்கு வாழ்த்து சொல்லவில்லை என கேள்வி எழுப்பினோம். அதற்கு பதில் கிடைக்கவில்லை. முதல்வர் பொதுவானவராக இருக்க வேண்டும் என்பது எங்களது விருப்பம். மக்களின் விருப்பமும் கூட.

மக்களுக்கு பாதுகாப்பு இல்லை
திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு கிடையாது. ரவுடிகள் சுற்றுலா செல்வது போல உலா வருகின்றனர். போதை பொருட்கள் அனைத்து பகுதிகளிலும் சர்வ சாதாரணமாக விற்பனையாகிறது. தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் அதிகளவு விற்பனையாகின்றன. கடந்த ஓராண்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது. ஊழல் இல்லாத துறை இல்லை. அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது. திறமையற்ற அரசு என ஓராண்டில் நிரூபணம் ஆகியுள்ளது" என பேசினார்.
-
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications