சசிகலாவின் நச் "அசைன்மெண்ட்".. 3 சீனியர்களுடன் ரூட்டை பிடித்த எடப்பாடி பழனிசாமி.. பரபரக்கும் களம்
எடப்பாடி பழனிசாமியின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன என்ற எதிர்பார்ப்பு எழுகிறது
சென்னை: அகன்ற ஆலமரமாய் வேரூன்றி திகழும் கட்சியான அதிமுக, நாளை யாரிடம் செல்ல போகிறது? யார் அக்கட்சியை வழிநடத்த போகிறார்? லட்சக்கணக்கான தொண்டர்களை அரவணைத்து கொண்டு செல்ல போவது யார்? என்ற பெருத்த கேள்வியும் எதிர்பார்ப்பும் தொடர்ந்து எழுந்து வருகிறது.
ஒருவழியாக குருபூஜை விழாவில் கலந்துகொள்ளாமல், அதேசமயம், சசிகலா, ஓபிஎஸ் மூலம் ஏற்படவிருந்த தர்மசங்கடத்தை சாதுர்யமாக தவிர்த்துவிட்டார் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
இதே குருபூஜை விழாவில் தன்னுடைய அரசியல் மறுபிரவேசத்தை அழுத்தமாக பதிவு செய்துவிட்டு, தென்மண்டல அதிமுக நிர்வாகிகளுக்கு பெருத்த பலத்தை தந்துவிட்டு சென்றுள்ளார் சசிகலா.
தென் மாவட்டங்களில் தேவர் சமூகத்தினர் அதிகம் இருப்பதால், சசிகலாவுடன் இணைந்து கட்சியை செழுமைப்படுத்தி, பலப்படுத்தி அடுத்த இன்னிங்ஸை தொடர பிள்ளையார் சுழியை போட்டுள்ளார் ஓபிஎஸ்.

அடுத்து இனி என்னாகும்?
சசிகலாவை "சூரியனை பார்த்து".. என்ற தடித்த வார்த்தை உட்பட அவர் மீது தொடர்ந்து விமர்சனம் வைத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.. இதனால் தென்மாவட்டங்களில் தனக்கான செல்வாக்கை மேலும் இழந்துவருவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.. அதேசமயம் எடப்பாடி பழனிசாமியால் தொடர்ந்து சசிகலாவை எதிர்க்க முடியுமா? ஓபிஎஸ்ஸை சமாதானப்படுத்த முடியுமா? அவரது அடுத்தக்கட்ட நகர்வு எத்தகையதாக இருக்கும்? சசிகலாவின் பிளான் என்ன? என்பது குறித்து நாம் சில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம். அவர்கள் யூகித்து சொன்ன கருத்து இதுதான்

தேவர் சமூகம்
"தென்மண்டலத்தையும், சொந்த சமூகத்தையும் மட்டும் பலப்படுத்துவதால், ஓபிஎஸ்ஸுக்கு வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் உள்ள கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பார்களா என்று தெரியவில்லை.. ஆனால் சசிகலாவுடன் இணக்கமாக செல்வதற்கான அறிகுறிகளை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார்.. சசிகலாவை வைத்து தன் செல்வாக்கை கட்சிக்குள் உயர்த்தி கொள்ள பார்க்கிறாரா? அல்லது சசிகலா தலைமையில் அதிமுகவை ஏற்க ஓபிஎஸ் தயாராகிறாரா என்பதுதான் இங்கு கேள்வியே.

துரோகிகள்
சசிகலாவை பொறுத்தவரையில் ஓபிஎஸ் மீது எந்தவித வெறுப்பையும் இதுவரை காட்டவில்லை.. துரோகியைவிட எதிரியே மேல் என்ற ரீதியிலேயே அணுகக்கூடும்.. எடப்பாடி, ஓபிஎஸ் யாருமே தேவர் ஜெயந்தியில் பசும்பொன்னில் பங்கேற்காத சூழலில் சசிகலா மட்டும் கலந்து கொண்டது அவரது ஆதரவாளர்களை மட்டுமல்ல, அதிமுகவினரையும் உற்சாகமடைய செய்திருக்கிறது.. இதை அடிப்படையாக வைத்தே அதிமுகவை கைப்பற்றுவதற்கான முயற்சிகளை கையில் எடுத்துள்ளார்.
Recommended Video

அதிமுக
அதிமுக தலைமை பங்கேற்காத சூழலில் சசிகலா மட்டும் கலந்து கொண்டது அவரது ஆதரவாளர்களையும் உற்சாகமடையச் செய்துள்ளது. இந்த சூழலில் அதிமுகவைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளை வேகப்படுத்தியுள்ளார் சசிகலா... அதற்காக அதிமுகவின் சீனியர் நிர்வாகிகளை தன்பக்கம் இழுக்கும் அடுத்தக்கட்ட பிளானை தொடங்கி இருக்கிறார்.. முக்கியமாக, எம்ஜிஆர் காலத்திலிருந்து யாரெல்லாம் முக்கிய நிர்வாகிகள், பொறுப்பும் அங்கீகாரமும் கிடைக்காமல் ஒதுக்கப்பட்டுள்ளோர் யார்? என்ற பிரத்யேக பட்டியல் தயார் செய்து, அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசியும் வருவதாக தெரிகிறது..

வருத்தம்
அதுமட்டுமல்ல, இந்த 5 வருட காலத்தில் எடப்பாடியால் ஓரங்கட்டப்பட்டவர்கள், அதிருப்தியாளர்கள், எடப்பாடி மீது வருத்தத்தில் உள்ளவர்கள் போன்றோரின் ஆதரவுகளை பெறுவதற்கான பிளானையும் கையில் வைத்துள்ளாராம்.. நடராஜனின் சகோதரர் எம்.ராஜேந்திரனிடம் இதற்கான அசைன்மென்ட்டை தந்திருப்பதாக தெரிகிறது. அதேபோல எடப்பாடியும் தன் பங்குக்கு வேகம் காட்டி வருகிறார்.. வேலுமணி, தங்கமணி, கேபி முனுசாமி போன்ற பொதுக்குழு உறுப்பினர்களை தன் பக்கம் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள்..

விமர்சனம்
இதற்காக குறிப்பிட்ட மாவட்ட செயலாளர்களுக்கு நேரடியாகவே எடப்பாடி போன் போட்டு பேசிவருவதாகவும் தெரிகிறது. இதில், எடப்பாடி மேற்கொள்ளும் பிளான் எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என்று தெரியவில்லை.. காரணம், ஜெயக்குமார், சிவி சண்முகம், முனுசாமி என்று ஒரு சிலரை தவிர, இதுவரை வேறு யாருமே சசிகலாவை பகிரங்கமாக எதிர்க்காமல் உள்ளனர்.. சசிகலாவை விமர்சித்து பேட்டிகூட எதுவும் தரவில்லை..

தாவல்கள்
ஆனால், இந்த டிசம்பர் மாதம் பொதுக்குழுவைக் கூட்டி தன்னை பொதுச் செயலாளராக அறிவிக்க வேண்டிய வேலைகளை எடப்பாடி பழனிசாமியும், சசிகலாவும் இருவருமே தொடங்கி உள்ளதால், இதன் போக்கு எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.. எப்படியும் பொங்கலுக்குள் ஏராளமானோர் சசிகலா பக்கம் தாவக்கூடும் என்றே தெரிகிறது.

ஓபிஎஸ்
அதேபோல எடப்பாடி மீதான அதிருப்தி ஓபிஎஸ்ஸுக்கு அதிகமாகி கொண்டே போகிறது போலும்.. கொங்கு சீனியர்களை மட்டும் வைத்துகொண்டு, கட்சியை கைப்பற்ற தற்போது எடுத்து வரும் முயற்சிகளாகட்டும், தன்னை விட்டுவிட்டு, ஆளுநரை சென்று சந்தித்ததாகட்டும், ஓபிஎஸ்ஸுக்கு வருத்தத்தையே தந்துள்ளது.. அதனால், எடப்பாடி, சசிகலாவுக்கு நடுவில் ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது" என்றனர்.
-
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
குறிவைத்து அடித்த எடப்பாடி பழனிசாமி.. வீழ்த்தப்பட்ட ஜெயக்குமார்.. அதிமுக 2021 தேர்தல் பிளாஷ்பேக் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications