Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாம்பு கடிச்சாதான் விஷம்.. பழனிசாமி பார்த்தாலே.. "என்னா நடிப்பு"- ஈபிஎஸ் மீது கோவை செல்வராஜ் தாக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை : பச்சோந்திக்கு 10 நிறம் தான்.. பழனிசாமி 100 கலர் மாறுவார். பாம்பு கடித்தால் தான் விஷம்.. எடப்பாடி பழனிசாமி பார்த்தாலே விஷம் என கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ்.

தேர்தல் ஆணையத்தின்படி ஓ.பன்னீர்செல்வம் தற்போதும் அதிமுக ஒருங்கிணைப்பாளர்தான், உச்ச நீதிமன்றத்தில் எங்களுக்கு எதிராக ஒன்றும் தீர்ப்பு வரவில்லை என கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. இரு தரப்பினரும் மாறி மாறி கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

நீதிமன்ற தீர்ப்புகள், கட்சி நடவடிக்கைகள் என ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்பினர் பரபரப்பாக இருந்து வரும் நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அவரது ஆதரவாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

கோவை செல்வராஜ் பேட்டி

கோவை செல்வராஜ் பேட்டி

அப்போது பேசிய அவர், "தமிழக அரசு கட்சி அலுவலகத்தை பூட்டியதைத்தான் உச்ச நீதிமன்றத்தில் கண்டித்தனர். சி.வி.சண்முகம் அதை மாற்றிச் சொல்கிறார். ஜூலை 11 கட்சி அலுவலகத்திற்கு எப்போதும் போல தான் பன்னீர்செல்வம் சென்றார். எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களான 400 குண்டர்கள் ஓபிஎஸ் வந்தபோது கல் வீசினர். தாக்கினர். அவர்கள் சண்டையிடாவிட்டால் அமைதியாக சென்று வந்திருப்போம். அலுவலகத்தில் நடந்த சண்டைக்கு காரணம் பழனிசாமிதான்.

ஆணவம் இருக்கக்கூடாது

ஆணவம் இருக்கக்கூடாது

கட்சி அலுவலகத்தை பூட்டக் கூடாது என அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா செய்து போராட்டம் நடத்தினோம். பழனிசாமி தாறுமாறாக பேசுகிறார். தலைவர்களாக இருப்பவர்களுக்கு ஆணவம், அகங்காரம் இருக்ககூடாது. 1988ல் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஆர்எம் வீரப்பனிடம் நிர்வாகிகள் அதிகமாக இருந்தனர். காளிமுத்து, முத்துசாமி, ஆர்எம் வீரப்பன் தனக்கு எதிராக பேசிய வார்த்தைகளை பொறுத்துக் கொண்டார் ஜெயலலிதா. ஆட்சி அமைத்தபிறகு அவர்களுக்கும் வாய்ப்பளித்தார்.

பன்னீர் தான் ஒருங்கிணைப்பாளர்

பன்னீர் தான் ஒருங்கிணைப்பாளர்

ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்கு வருவதாக கூறினாலும் அவரை மன்னித்து ஏற்க மாட்டோம் என எடப்பாடி பேசியுள்ளார். அவர் கட்சியின் நிறுவன தலைவர் அல்ல, கட்சியை வளர்த்தவர் அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. எனவே அவர் அப்படி கூறிய கருத்தை கண்டிக்கிறோம். தேர்தல் ஆணையத்தில் இப்போதும் பன்னீர்செல்வம்தான் ஒருங்கிணைப்பாளர். தேர்தல் ஆணையமே கட்சி தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும். கட்சியின் பெயர், கொடி, சட்டம் வகுப்பது அவர்கள்தான்.

ஈபிஎஸ் எங்கு செல்வார் என 2 மாதத்தில் தெரியும்.

ஈபிஎஸ் எங்கு செல்வார் என 2 மாதத்தில் தெரியும்.


தேர்தல் ஆணையம் மூலம் 2026 ல் டிசம்பர் 7 வரை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்தான். அதை யாராலும் மாற்ற முடியாது. கட்சியை அழிக்கும் விதமாக செயல்படக் கூடாது என்பதால் ஓ.பன்னீர்செல்வம் பொறுமையாக இருக்கிறார். அதிமுக ஆட்சியை ஓபிஎஸ் நடத்துவார். எடப்பாடி பழனிசாமி இனி எங்கு இருப்பார் என 2 மாதத்தில் தெரியும்.

 100 கலர் பச்சோந்தி

100 கலர் பச்சோந்தி

முதலமைச்சர் பதவியை பெற சசிகலாவிடம், சினிமாவில் வடிவேலுவை விட நன்றாக நடித்தார் பழனிசாமி. காலைத் தொட்டு கும்பிடுகிறார், கண்ணீர் விடுகிறார் என நம்பி முதலமைச்சர் ஆக்கினார் சசிகலா. அப்புறம் தான் சசிகலாவுக்கு தெரிந்தது. பச்சோந்திக்கு 10 நிறம் தான். பழனிசாமி 100 கலர் மாறுவார். பாம்பு கடித்தால் தான் விஷம். எடப்பாடி பழனிசாமி பார்த்தாலே விஷம்.

 சிபிசிஐடி-யே சொல்லிடுச்சு

சிபிசிஐடி-யே சொல்லிடுச்சு

கட்சி அலுவலகத்தில் இருந்து ஆவணங்களை தொண்டர்கள்தான் எடுத்து வந்து ஓ.பன்னீர்செல்வத்திடம் கொடுத்தனர். அலுவலகத்திலிருந்து நாங்கள் எடுத்துச் சென்றதாக எடப்பாடி தரப்பினர் கூறிய ஜெ-வின் வெள்ளி வேல் அலுவலகத்தில்தான் இருப்பதாக சிபிசிஐடி கூறிவிட்டது. தாக்கப்பட்ட இடத்தில் இருந்ததால் ஓபிஎஸ் தரப்பினர் சிலரும் அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவர வழக்கில் சேர்க்கப்பட்டனர்.

ஓபிஎஸ்ஸை ஏமாற்றி விட்டனர்

ஓபிஎஸ்ஸை ஏமாற்றி விட்டனர்

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு டிசம்பர் 2021ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பன்னீர் செல்வத்தை ஏமாற்றி கையெழுத்து பெற்றுவிட்டனர். இரு பதவிகளுக்கு ஒற்றை வாக்கு என்ற அடிப்படையில் தேர்தல் நடந்தால் ஏராளமானோர் சசிகலாவிடம் சென்று விடுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேட்டதால் தேர்தல் நடத்தாமல் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் கையெழுத்து பெற்று விட்டு பன்னீர்செல்வத்தை ஏமாற்றிவிட்டனர்.

ஜெயலலிதாவையே நீக்குவார்

ஜெயலலிதாவையே நீக்குவார்

ஜெ-வையே அழிக்கும் அளவு துரோகம் கொண்டவர் பழனிசாமி. விட்டால் ஜெயலலிதாவையே கட்சியை விட்டு நீக்குவார் ஈபிஎஸ். உச்ச நீதிமன்றத்தில் இதுவரை எங்களுக்கு எதிராக எந்த தீர்ப்பும் வரவில்லை. தனது வயதுக்கு ஏற்ற பெருந்தன்மையுடன் பன்னீர்செல்வம் நடந்து கொள்கிறார். எடப்பாடி வழி கட்சியை அபகரிப்பதற்கான தனி வழியாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியை தேடிச் சென்று பார்க்க வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+