Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொத்து வாரிசு பிறந்த நொடியே கிடைக்குமா? பரம்பரை சொத்துரிமையை தந்தை தடுக்க முடியுமா? அதிரடி சட்ட நிஜம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பரம்பரை சொத்தில் பிள்ளைகளுக்கான உரிமைகள் உண்டா? ஒரு சொத்து நான்கு தலைமுறைகளாகப் பிரிக்கப்படாமல் என்னாகும்? ஒரு சொத்தின் மீது உரிமை கோருவதற்கு முன்பாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்பதையெல்லாம் பொதுமக்கள் அறிந்து வைத்து கொள்ள வேண்டி உள்ளது.. அவைகளை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

பரம்பரைச் சொத்து விவகாரங்களில் பலரும் கவனிக்க தவறும் முக்கியமான விஷயம், பாகப்பிரிவினை (Partition) ஆகும். ஒரு சொத்து இந்து கூட்டு குடும்ப (HUF) சொத்தாக இருந்து, பிரிக்கப்படாமல் தலைமுறைகளாக வந்திருந்தால்தான் அது பரம்பரை சொத்தாகக் கருதப்படும்...

Ancestral Property Property Rights Inheritance Law Hindu Succession Act Legal Truth Property Law India Family Property Birth Right

ஒருவேளை பாகப்பிரிவினை செய்யப்பட்டு, தந்தைக்கு கிடைத்த பங்கு அவருடைய தனிப்பட்ட சொத்தாக மாறும்.. அதாவது அது சுயார்ஜிதச் சொத்தாகவே கருதப்படும். இத்தகைய நுணுக்கமான மாற்றங்களைச் சாதாரண மக்கள் புரிந்துகொள்வது கடினம்.

பூர்வீக சொத்து - பாகப்பிரிவினை

அதனால் ஒரு சொத்தின் மீது உரிமை கோருவதற்கு முன்பாக அந்தச் சொத்தின் வில்லங்கச் சான்றிதழ் (EC), பட்டா மாறுதல் விவரங்கள் மற்றும் முந்தைய பாகப்பிரிவினை ஆவணங்களைச் சரிபார்ப்பது அவசியம். சட்டங்கள் எவ்வளவுதான் உரிமைகளை வழங்கினாலும், ஒரு குடும்பத்தின் அமைதி கெடாமல் அந்த சொத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது..

அதேபோல, Ancestral Property என்று சொல்லப்படும் பரம்பரைச் சொத்து , Self-acquired Property என்று சொல்லப்படும் சுயார்ஜிதச் சொத்து ஆகிய இரண்டிற்கும் இடையிலான சட்ட வேறுபாடுகளை மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியம்.

பரம்பரை சொத்து

சட்டப்படி, ஒரு சொத்து பரம்பரைச் சொத்து என்று கருதப்படுவதற்கு, அது பொதுவாக இந்து கூட்டு குடும்ப (HUF) சொத்தாக இருந்து, பல தலைமுறைகளாக பிரிக்கப்படாமல் வந்திருக்க வேண்டும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.. 4 தலைமுறை' என்பது ஒரு பொதுவான விளக்கம் மட்டுமே, இறுதி முடிவு ஆவணங்கள் மற்றும் குடும்பப் பிரிவினை நிலையைப் பொறுத்தது.

இத்தகைய சொத்தில் ஒரு குழந்தை பிறந்த உடனே அதற்கு சமமான உரிமை கிடைத்துவிடுகிறது. 2005ம் ஆண்டின் சட்ட திருத்தத்திற்கு பிறகு, இதில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்பதை சுப்ரீம் கோர்ட் பல தீர்ப்புகளில் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, அந்த சொத்து உண்மையில் பரம்பரைச் சொத்தாகவும், ஏற்கனவே பாகப்பிரிவினை செய்யப்படாததாகவும் இருந்தால், தந்தை உயிருடன் இருக்கும்போதே பிள்ளைகள் அதில் தங்களின் பங்கைக் கோர முடியும்.

சுயார்ஜித சொத்து

இருந்தாலும் நடைமுறையில் பலரும் குழப்பமடைவது சுயார்ஜிதச் சொத்து விஷயத்தில்தான். ஒரு தந்தை தனது சொந்த உழைப்பில் வாங்கிய சொத்து அல்லது பாகப்பிரிவினைக்கு பிறகு, அவருக்குக் கிடைத்த பங்கு பொதுவாக அவரின் தனிப்பட்ட சொத்தாகக் கருதப்படும்.. அதில் பிள்ளைகளுக்குப் பிறப்பால் உரிமை கிடையாது.

அத்தகைய சொத்துக்களை தந்தை தனது விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதி வைக்கவோ அல்லது விற்கவோ முழு அதிகாரம் பெற்றுள்ளார். தந்தை உயில் ஏதும் எழுதாமல் இயற்கை எய்தினால் மட்டுமே, அந்த சொத்து பிள்ளைகளுக்கு வாரிசுரிமை அடிப்படையில் வந்து சேரும்.

பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம்

எனவே, குடும்ப உறவுகளில் இவையெல்லாம் ஏற்படுத்தும் தாக்கத்தையும் கவனிக்க வேண்டும். சொத்துரிமை என்பது வெறும் காகித ஆவணம் மட்டுமல்ல, அது ஒரு குடும்பத்தின் பாதுகாப்பையும் சார்ந்தது. பிள்ளைகள் பிறப்பாலேயே உரிமை பெறுகிறார்கள் என்ற சட்டம், பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரத்தை வழங்கியுள்ளது. அதே சமயம், சொத்துக்காகப் பெற்றோரைத் துன்புறுத்தும் போக்குகளும் ஆங்காங்கே நிகழ்வதை மறுக்க முடியாது.

சட்ட நுணுக்கங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் தன்னிச்சையாக முடிவெடுப்பது சில நேரங்களில் தேவையற்ற நீதிமன்ற வழக்குகளுக்கு கொண்டு சென்றுவிடும்.. அதனால் ஒரு சொத்து உண்மையில் பரம்பரைச் சொத்தா அல்லது தந்தையின் தனிப்பட்ட சொத்தா என்பதை ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்துவது மிக முக்கியம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+