ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க
சென்னை: நம்ம ஊரில் ஒரு பழமொழி உண்டு, "தங்கம் என்னைக்குமே கைவிடாது" என்று சொல்வார்கள்.. அது எவ்வளவு பெரிய உண்மை என்பதை இன்று உங்கள் பீரோவில் இருக்கும் பழைய நகைகளின் மதிப்பை வைத்து நீங்களே கணக்கிட்டுப் பார்த்தால் புரிந்து கொள்வீர்கள்.. சரியாக ஒரு 15 வருஷத்துக்கு முன்னால், அதாவது 2011-ம் ஆண்டு வாக்கில் ஒரு சவரன் தங்கத்தின் விலை சுமார் 15,000 முதல் 18,000 ரூபாய்க்குள் தான் இருந்தது.. இப்போது அதன் மதிப்பு எவ்வளவு இருக்கும் தெரியுமா??
கடந்த 10 வருடங்களுக்கு முன்பு யாராவது ஒரு ஒரு லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு நகைக் கடைக்கு சென்றிருந்தால், அவர்களுக்குச் சுமார் 6 சவரன் தங்கம் கையில் கிடைத்திருக்கும்.. அன்று அந்த ஒரு லட்சம் ரூபாயை செலவு செய்தவர்கள், இன்று அந்த நகையை உருக்கினாலோ அல்லது விற்றாலோ அவர்களுக்குக் கிடைக்கப்போகும் தொகை ஒரு மிகப்பெரிய ஆச்சரியம்..

தங்கம் ஜாக்பாட் லாபம்
இன்று 2026ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, ஒரு சவரன் தங்கம் விலை ₹60,000-ஐத் தாண்டி மின்னல் வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது.. அப்படின்னா, அன்று நீங்கள் 1 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய அந்த 6 சவரன் தங்கத்தின் இன்றைய மதிப்பு சுமார் 3.6 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும்.
வெறும் 15 ஆண்டுகளில் உங்கள் பணம் கிட்டத்தட்ட 3.5 மடங்குக்கும் மேலாக வளர்ந்திருக்கிறது.. இதுதான் தங்கத்தில் ஒளிந்திருக்கும் அதிசய வளர்ச்சி சீக்ரெட்.. நீங்கள் அதே ஒரு லட்சம் ரூபாயை ஒரு வங்கியில் நிலையான வைப்பு நிதியாக போட்டிருந்தால் கூட, வட்டி விகிதங்கள் குறைந்து வரும் இந்தச் சூழலில் இவ்வளவு பெரிய லாபம் கிடைத்திருக்குமா என்பது டவுட்தான்.
எனவே, தங்கம் என்பது வெறும் அழகுக்காக அணியும் ஆபரணம் மட்டுமல்ல, அது ஒரு மிகப்பெரிய பொருளாதாரப் பாதுகாப்பு பெட்டகம் ஆகும்..
6 சவரன் தங்க நகை
இப்போக்கு போர் பதற்றம், சர்வதேச பொருளாதாரச் சரிவு என எது நடந்தாலும் உலகமே நம்பும் ஒரே ஒரு முதலீடு தங்கம் மட்டும்தான்.. அதனால்தான் ஈரான் போர் பதற்றம் போன்ற செய்திகள் வரும்போது தங்கம் விலை சரசரவென உயர்கிறது.. 15 வருடத்துக்கு முன்பு வாங்கிய அந்த நகைகள் இன்று ஒரு அவசர தேவைக்காகவோ அல்லது பிள்ளைகளின் உயர்கல்விக்கோ கைகொடுக்கும்போது, அந்த முதலீட்டின் மவுசு நமக்கு தெரியவரும்.
இருந்தாலும் தங்கம் வாங்கும்போது ஒரு முக்கியமான விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும்.. ஆபரணத் தங்கமாக வாங்கும்போது அதற்கு சேதாரம் மற்றும் செய்கூலி என்று ஒரு குறிப்பிட்ட தொகையை நாம் இழக்கிறோம்..
இதையும் தாண்டி தங்கம் இவ்வளவு பெரிய லாபத்தைக் கொடுத்திருக்கிறது என்றால், ஒருவேளை நீங்கள் தங்கக்காசுகளாகவோ அல்லது கோல்டு பாண்ட் (Gold Bond) முறையிலோ முதலீடு செய்திருந்தால் உங்கள் லாபம் இன்னும் கூடுதலாக இருந்திருக்கும்.. 15 வருடங்களுக்கு முன்பு சேமிப்புப் பழக்கம் கொண்டவர்கள் இன்று நிம்மதியாக இருப்பதற்கு இதுதான் காரணம்..
பழைய தங்க நகைகள்
இப்போதும் ஒன்றும் டைம் ஓடிவிடவில்லை.. "தங்கம் விலை ஏறிக்கொண்டே போகிறதே, இனிமேல் எங்கே வாங்கப் போகிறோம்?" என்று நினைப்பவர்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.. இன்று நீங்கள் வாங்கும் ஒரு சவரன் தங்கம், அடுத்த 10 அல்லது 15 ஆண்டுகளில் இதேபோல ஒரு மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும் என்பதில் சந்தேகமே இல்லை.
அதனால் ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொண்டு, ஒரு கிராம் அல்லது அரை கிராம் என்ற அளவிலாவது சிறுக சிறுக சேமிக்கத் தொடங்குங்கள்.. உங்கள் உழைப்பின் பலன் ஒரு தங்கமான எதிர்காலத்தை உங்களுக்கு அமைத்துக் கொடுக்கும்.. உங்கள் கையில் இருக்கும் பழைய நகைகளின் இன்றைய மதிப்பை ஒருமுறை கணக்கிட்டுப் பாருங்கள், அதுவும் உங்களுக்கு ஒரு புதிய சேமிப்பு உத்வேகத்தைக் கொடுக்கும்..!!!
-
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
சட்டுபுட்டுனு அள்ளிப் போடுங்க! தங்கத்தை வாங்கி குவிக்கும் ரிசர்வ் வங்கிகள்.. குறுக்கே வந்த மலேசியா! -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications