ஓயோ ஹோட்டலை மிஞ்சிய பெண்களின் செயல்.. நிஜமாகவே டெல்லி மெட்ரோ ரயில்தானா? வைரல் வீடியோவால் அதிர்ச்சி
டெல்லி: நாட்டின் தலைநகரான டெல்லியின் உயிர்நாடியாக விளங்குவது டெல்லி மெட்ரோ ரயில். தினமும் லட்சக்கணக்கான மக்கள் தங்களது அலுவலகங்களுக்கும், அத்தியாவசிய தேவைகளுக்கும் இந்த ரயிலையே நம்பியிருக்கிறார்கள். ஆனால், சமீபகாலமாக டெல்லி மெட்ரோ ரயில் என்பது பயணிகளுக்கான இடமாக தெரியாமல், சண்டையிடும் கூடமாகவும், சில நேரங்களில் முகம் சுளிக்க வைக்கும் ஆபாச களமாகவும் மாறி வருவது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2 நாட்களாகவே, சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் ஒரு வீடியோ ஒட்டுமொத்த டெல்லியையும் அதிர வைத்துள்ளது. சம்பவத்தன்று, இளம் பெண்கள் சிலர், கும்பலாக ரயிலில் ஏறியிருக்கிறார்கள்.

டெல்லி மெட்ரோ ரயில்
அந்த மெட்ரோ ரயிலில் வழக்கம்போல் கூட்டம் வழிந்து நிறைந்துள்ளது.. இதனால் சீட் பிடிப்பதில் இந்த இளம் பெண்களுக்கும், ஏற்கனவே ரயிலில் நின்று கொண்டு வந்த பயணிகளுக்கும் தகராறு வெடித்துள்ளது.. ஆனால் இந்த ஒரு சாதாரண வாக்குவாதம், அடுத்த சில நிமிடங்களிலேயே தரக்குறைவான வார்த்தைப் போராக மாறியது.
அந்தப் இளம் பெண்கள் தங்களை சுற்றி மற்ற பயணிகள் இருக்கிறார்கள், குழந்தைகள் இருக்கிறார்கள் என்ற எந்தவித அச்சமும், வெட்கமுமின்றி மிகவும் ஆபாசமான கெட்ட கெட்ட வார்த்தைகளில் சக பயணிகளை திட்டினார்கள்.. பிறகு அவர்களை தாக்கவும் முற்பட்டனர். இதை பார்த்து மொத்த பேரும் பயத்தில் உறைந்தனர்..
இளம் பெண்கள் ஆபாச பேச்சு
இந்த வீடியோதான் இணையத்தில் வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்து உள்ளது.. ஏற்கனவே டெல்லி மெட்ரோ ரயில்களில் காதல் ஜோடிகள் வரம்பு மீறி நடந்து கொள்வது பெரும் தலைவலியாக மாறியுள்ளது. "மெட்ரோ ரயில்கள் என்ன ஓயோ (OYO) ஹோட்டல்களா?" என்று கேட்கும் அளவிற்கு, பொது இடமென்று பார்க்காமல் சில ஜோடிகள் செய்யும் ஆபாசச் செயல்கள், குடும்பத்தோடு வருபவர்களையும் முகம் சுளிக்க வைக்கின்றன. இப்போது இந்தப் பெண்களின் ரகளை அந்தப் புகார்களுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
வைரல் வீடியோவை ஆதாரமாகக் கொண்டு டெல்லி காவல்துறை மற்றும் டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் இப்போது களத்தில் இறங்கியுள்ளன. இந்தச் சம்பவம் எந்த தடத்தில் நடந்தது, வீடியோவில் இருக்கும் அந்தப் பெண்கள் யார், அவர்கள் எந்தப் பகுதியில் ஏறினார்கள் என்பதை அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
ஓயோ ஓட்டலா?
பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பது மற்றும் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொள்வது போன்ற பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மெட்ரோ நிர்வாகம் விடுத்துள்ள எச்சரிக்கையில், "பயணிகள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது அடிப்படை ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். சக பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இப்படி பலமுறை டெல்லி மெட்ரோ நிர்வாகமும், காவல்துறையும் பலமுறை எச்சரித்தும் சில பயணிகள் அதை காதிலேயே போட்டுக் கொள்வதில்லையாம்.. அதனால் இந்த தொடர் சம்பவங்கள் டெல்லி மெட்ரோவின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளன. இதுபோன்ற ரகளையில் ஈடுபடுபவர்கள் மீது எடுக்கப்படும் அதிரடி நடவடிக்கை மட்டுமே எதிர்காலத்தில் இது போன்ற அநாகரீகச் செயல்களைத் தடுக்கும் எனச் சமூக ஆர்வலர்கள் சொல்கிறார்கள்..!!!
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications