ஏக்நாத் ஷிண்டே..திமுக ‘பி’ டீம் தான் ஓபிஎஸ்..எல்லாமே சதி! சட்டசபை வாயிலில் குமுறிய எடப்பாடி பழனிசாமி
சென்னை : எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக அதிமுக எடப்பாடி தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், சபாநாயகர் அரசியல் ரீதியாக செயல்படுவதாகவும் எங்களது கருத்துக்களை நியாயமாக தெரிவித்தும் சபாநாயகர் எங்களுக்கு முறையான பதில் கூறவில்லை என எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இரண்டாவது நாளாக இன்று கூடிய போது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதோடு கடுமையாக தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
இந்தி எதிர்ப்பு தீர்மானம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மற்றும் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையங்களின் அறிக்கையை தாக்கல் செய்யப்பட்ட பிறகு பேசலாம் என சபாநாயகர் அப்பாவு கூறியதை ஏற்காமல் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எம்எல்ஏக்கள் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர்.

அதிமுக அமளி
மத்திய அரசுக்கு ஆதரவாக இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்திற்கு எதிராக செயல்படத் திட்டமிட்டுள்ளதாகவும் இரண்டு அறிக்கைகளுக்கு பயந்து 1989இல் நடந்தது போல மீண்டும் நடத்த திட்டமிட்டுள்ளீர்கள் என கடுமையாக பேசிய சபாநாயகர் அப்பாவு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எம்எல்ஏக்களை இரண்டு நாள் சஸ்பெண்ட் செய்தும் அவையிலிருந்து வெளியேற்றவும் உத்தரவிட்டார். பிறகு சஸ்பெண்ட் நடவடிக்கை ஒரு நாளாக குறைக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி
இதை அடுத்து அவையில் இருந்து வெளியேறிய அதிமுக இக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது சபாநாயகர் செயல்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய அவர்," அரசியல் ரீதியாக அதிமுகவை எதிர்கொள்ளாத திமுக சபா நாயகர் பழிவாங்க நினைக்கிறது . பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் நீக்கப்பட்டது செல்லும் என்ற நீதிமன்ற தீர்ப்பை சபாநாயகர் மதிக்கவில்லை.

திமுக பி டீம்
62 அதிமுக எம்எல்ஏக்களும் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்பி உதயகுமாரை தேர்ந்தெடுத்துள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில்தான் முதல்வரோ எதிர்க்கட்சித் தலைவராகவும் முடியும்.திமுக அரசு மீது மக்களிடம் எதிர்ப்பு எழுந்துள்ளதால் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தை திமுக கையில் எடுத்துள்ளது. திமுகவின் பீ டீம்மாக பன்னீர்செல்வம் செயல்பட்டு வருகிறார் . அருணா ஜெகதீசன் ஆணையம், தூத்துக்குடி விசாரணை ஆணையம் ஆகியவற்றை அமைத்ததே நாங்கள்தான் பிறகு ஏன் பயப்பட வேண்டும்.

ஏக்நாத் ஷிண்டே
திமுக தலைவர் ஸ்டாலிடம் ஆலோசனை செய்துதான் சட்டப்பேரவை தலைவர் செயல்படுவதாக நாங்கள் கருதுகிறோம். அரசியல் ரீதியாக அதிமுகவை எதிர் கொள்ளாத திமுக தலைவர் ஸ்டாலின் கொல்லைப்புரம் மூலமாக பழி வாங்குகிறார். திமுக ஆதரவுடன் பன்னீர்செல்வம் முன்கூட்டியே செய்த சதித்திட்டங்கள் அம்பலம் ஆகியுள்ளன. மத்திய பிரதேசத்தில் ஏக்நாத் ஷிண்டே - உத்தவ் தாக்கரே இடையே பிரச்சனை ஏற்பட்டபோது கூட அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்குத்தான் பதவி வழங்க வேண்டும் என நீதிமன்றமே உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் அதை சபாநாயகர் அப்பாவு மீதியுள்ளார் என கடுமையாக குற்றம் சாட்டினார்.
-
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications