Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லோரும் சேந்து சதி பன்றாங்க! நாளை அதிமுக சார்பில் உண்ணாவிரதம்! பரபர அறிக்கை விட்ட எடப்பாடி & கோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், இது ஜனநாயக படுகொலை என்றும், இதனை கண்டித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் நாளை ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இரண்டாவது நாளாக இன்று கூடிய போது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதோடு கடுமையாக தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

இந்தி எதிர்ப்பு தீர்மானம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மற்றும் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையங்களின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு பேசலாம் என சபாநாயகர் அப்பாவு கூறியதை ஏற்காமல் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எம்எல்ஏக்கள் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர்.

அதிமுக அமளி

அதிமுக அமளி

மத்திய அரசுக்கு ஆதரவாக இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்திற்கு எதிராக செயல்படத் திட்டமிட்டுள்ளதாகவும் இரண்டு அறிக்கைகளுக்கு பயந்து 1989இல் நடந்தது போல மீண்டும் நடத்த திட்டமிட்டுள்ளீர்கள் என கடுமையாக பேசிய சபாநாயகர் அப்பாவு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எம்எல்ஏக்களை இரண்டு நாள் சஸ்பெண்ட் செய்தும் அவையிலிருந்து வெளியேற்றவும் உத்தரவிட்டார். பிறகு சஸ்பெண்ட் நடவடிக்கை ஒரு நாளாக குறைக்கப்பட்டது.

எடப்பாடி அணி வெளியேற்றம்

எடப்பாடி அணி வெளியேற்றம்

இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், இது ஜனநாயக படுகொலை என்றும், இதனை கண்டித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் நாளை ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்," தமிழ் நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற ஜனநாயக படுகொலையைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இடைக்காலப் பொதுச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும், ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம், நாளை (19.10.2022 - புதன் கிழமை), சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற உள்ளது.

உண்ணாவிரத போராட்டம்

உண்ணாவிரத போராட்டம்

இப்போராட்டத்தில், அனைத்து கழக சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கழக அமைப்பு ரீதியான சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஏற்பாடுகள் தீவிரம்

ஏற்பாடுகள் தீவிரம்

இந்த ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு உரிய அனுமதி கேட்டு, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தளவாய்சுந்தரம், கழக அமைப்புச் செயலாளரும், தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் வாரியத் தலைவருமான ஆதிராஜாராம் ஆகியோர் நேரில் வழங்கி உள்ளனர்." என கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+