நல்ல சான்ஸ்..விட கூடாது! ராயப்பேட்டையில் பரபர மீட்டிங்! எம்எல்ஏக்களுக்கு இபிஎஸ் கொடுத்த அசைன்மெண்ட்!
சென்னை : மிகுந்த பரபரப்புகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் இடையே தமிழ்நாடு சட்டசபை இன்று கூடிய நிலையில் அவையில் அதிமுக உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி இன்று நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே இன்று தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.
ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இன்று ஆளுநர் மாளிகையில் இருந்து வருகை தந்த ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து தமிழ் தாய் வாழ்த்துக்கு பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்கத் தொடங்கினார்.

சட்டசபை கூட்டம்
எதிர்பார்த்தது போலவே ஆளுநரின் தமிழ்நாடு குறித்த பேச்சுக்கு சட்டசபையில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. ஆளுநர் உரையை கண்டித்து திமுக கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். இதனால் அவையில் கடும் கூச்சல் குழப்பம் எழுந்ததோடு ஆளுநரின் உரையை புறக்கணித்து திமுக கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதே நேரத்தில் ஆளுநரின் பேச்சுக்கு இடையே அரசு அளித்திருந்த சில வார்த்தைகளை அவர் தவிர்த்து விட்டு பேசியதாக கூறப்படுகிறது.

ஆளுநர் உரை
மேலும் ஆளுநர் தனது போக்குக்கு உரையை வாசித்ததும் கடும் கண்டனங்களை பெற்றது. இதற்கிடையே முதல்வர் ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தபோது ஆளுநர் ஆர்.என்.ரவி சட்ட சபையில் இருந்து வெளியேறினார். ஆளுநர் இருக்கும்போதே முதல்வர் பேசியது அவை நாகரிகத்தை மீறியது என பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் ஆளுநர் உரைக்குப் பிறகு நடைபெற்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் 13-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி
இப்படியான சூழல்களுக்கிடையே 13ஆம் தேதி வரை நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அதிமுக எம்எல்ஏக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசிப்பதற்காக அதிமுக எடப்பாடி தரப்பு எம்எல்ஏக்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ,திண்டுக்கல் சீனிவாசன், எஸ் பி வேலுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எம்எல்ஏக்கள் கூட்டம்
மேலும் செல்லூர் ராஜு ஆர் பி உதயகுமார் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சட்டமன்ற கூட்டத்தொடரில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என எம்எல்ஏக்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. குறிப்பாக தற்போது ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக திமுக அரசு செயல்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக பிரச்சனை எழுப்ப திட்டமிடப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே இதே விவகாரத்தில் எடப்பாடி தரப்பு எம்எல்ஏக்கள் அவையில் மோதல் போக்கை கையாண்ட நிலையில் தற்போதும் அதுபோலவே எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு இருக்கிறது.

முக்கிய பிரச்சினைகள்
இது மட்டுமல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பில் கூடுதல் பணம் வழங்காதது, திமுக கூட்டத்தில் பெண் காவலரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட விவகாரம், மகளிர் உரிமைத் தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்காதது உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப இருப்பதாக கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் மேலும் சில முக்கிய முடிவுகளை எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் அதன்படியே அவர்கள் அவையில் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
-
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
பணக்காரர்களுக்கு மட்டுமே சீட்? ₹10 கோடிக்கு லீடர் தந்த ஷாக்? திமுக, அதிமுக, தவெக கடைசி நேர கண்டிஷன் -
விசித்திரமா இருக்கே.. தமிழ்நாட்டிற்கு தாமதமாக தேர்தல் ஏன்? தேர்தல் ஆணையம் வைத்த பெரிய ‘ட்விஸ்ட்’ -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் LIVE: ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு.. மே 4ம் தேதி ரிசல்ட் -
அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை இடம்? கூட்டணி கட்சிகளுடன் பேச குழு அமைத்த எடப்பாடி -
38 நாட்களில் தமிழ்நாட்டில் தேர்தல்.. இந்த விஷயங்களை மறக்காதீங்க! முடிவை தீர்மானிக்க போவதே இதான் -
முழு கண்ட்ரோல்.. இனி பவர் ஐஏஎஸ்கள் கையில்! இன்று முதல் தேர்தல் விதிகள் அமல்! MCC என்றால் என்ன? -
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
Heavy Rain: அடுத்த ஒரு மணி நேரம் விடாமல் கொட்டப்போகுது மழை.. குமரி, நெல்லைக்கு பறக்கும் அலர்ட்! -
டெல்டாவில்.. முக்கிய தொகுதியிலேயே அடிவாங்கும் திமுக.. சிக்கலில் பெரிய மீன்! இவருக்கே இந்த நிலைமையா? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்?












Click it and Unblock the Notifications