’அக்டோபர் 17’ ஓபிஎஸ்க்கு அடுத்த ஷாக் கொடுக்க எடப்பாடி போடும் பக்கா ப்ளான்! களமிறங்கிய மாஜிக்கள்!
சென்னை : அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பை கிட்டத்தட்ட முற்றிலுமாக ஓரம் கட்டியுள்ள எடப்பாடி பழனிச்சாமி அடுத்ததாக அவருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இன்னும் சில நாட்களுக்குள் அதிமுகவின் பொது செயலாளராக பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகளை செய்ய மூத்த முன்னாள் அமைச்சர்களை களமிறக்கி உள்ளார்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அடுத்ததாக சில மாதங்களில் தேர்தலை சந்தித்து கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளராக பதவி ஏற்பதற்கான தீவிரமான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்.
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தேர்தலை விரைவில் நடத்துவார் என்கின்றனர் அவர் தரப்பு ஆதரவாளர்கள். கடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முழுக்க முழுக்க எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே வகுக்கப்பட்டிருக்கிறது

நிரந்தர பொதுச்செயலாளர்
அதிமுக நிரந்தர பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்படுவதற்கான தேர்தலை விரைவில் நடத்தி பொறுப்பேற்கவும் திட்டமிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி தனது தரப்பில் உள்ள மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்களை களமிறக்கியுள்ளா. தேர்தல் நடத்துவதற்காக ஆணையர்களாக ஏற்கனவே நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் திரைமறைவில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விரைவில் தேர்தல்
கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களான கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன், எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்பி உதயகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எம்பி சிவி சண்முகம் ஆகியோர் தேர்தலை நடத்தி முடிக்கும் பொறுப்பை கையில் எடுத்துக் கொண்டு களப் பணியாற்றி வருகின்றனர். ஜெயலலிதா இருந்தது போல் எடப்பாடி மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்து போட்டியின்றி வெற்றி பெறுவார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

மாஜிக்கள் தீவிரம்
கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொது குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு அடுத்த நான்கு மாதங்களில் அதாவது அப்போதைய தேதி அக்டோபர் 17ஆம் தேதிக்குள் அதிமுகவின் பொது செயலாளர் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் அதற்காக இன்னும் 20 நாட்களை இருக்கும் நிலையில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

பல திட்டங்கள்
தேர்தலை நடத்தி முடித்த கையோடு அடுத்தடுத்து பல அதிரடி முடிவுகளையும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்ற பெயரோடு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் அதிமுகவின் 51 வது ஆண்டு தொடக்க விழா நிகழ்வுகளை தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமாக நடத்த எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு இருக்கிறார். இதை எடுத்து தமிழகம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களிடம் இதற்கான ஏற்பாடுகளை தற்போது இருந்தே செய்ய வேண்டும் எனவும் பொது செயலாளர் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி தலைமைக் கழகத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
-
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
பாஜக தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி.. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
அதிமுக வேட்பாளர் பட்டியல்.. தொகுதி மாறிய முக்கிய தலைகள்.. மாஜி அமைச்சர்கள் புதிய வியூகம்! -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications