நம்மளும் போவோமா? தலையை குனியும் ‘இரட்டை இலை’! மீண்டும் ‘கூவத்தூர்’ பார்முலா? கையிலெடுக்கும் இபிஎஸ்!
சென்னை : ஓபிஎஸ் தரப்புக்கு நிர்வாகிகள் மட்டுமல்லாது தற்போது எம்எல்ஏ ஒருவரும் தாவி இருப்பதால் கடும் அதிருப்தியில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தற்போது இருக்கும் நிர்வாகிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை அவர்களை மீண்டும் ஒரு சொகுசு விடுதியில் தங்க வைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சத்தில் இருக்கும் நிலையில் தற்போது நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மேல்முறையீடு செய்திருந்தாலும் ஓபிஎஸ் தரப்புக்கு நிர்வாகிகள் தாவுவது அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே திண்டுக்கல், சேலம்,ராமநாதபுரம், மதுரை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் பலரும் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து வரும் நிலையில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நேற்று நடந்தது.

அதிமுக விவகாரம்
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி .பன்னீர்செல்வம் ஆகியோர் எதிரும் புதிருமாக செயல்பட்டு வரும் நிலையில் ஓபிஎஸ்க்கு திடீரென ஆதரவு அதிகரித்து வருவதால் குழப்பம் அடைந்துள்ளது இபிஎஸ் தரப்பு. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை சென்னையில் நடிகர் பாக்யராஜ் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அதன் பின்னணியில் என்ன நடந்தது. பக்யராஜ் திடீர் ஆதரவுக்கு என்ன காரணம் என யோசிப்பதற்குள் சென்னை நட்சத்திர விடுதியில் சந்தித்த பாக்யராஜ் அப்போது தனது ஆதரவை ஓபிஎஸ்க்கு தெரிவித்தார்.

உசிலம்பட்டி எம்எல்ஏ
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் வந்து சந்தித்தார். அப்போது வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், பெங்களூரு புகழேந்தி ஆகியோர் இருந்தனர். ஐயப்பனுடன் அதிமுக கட்சி நிர்வாகிகள், அதிமுக வழக்கறிஞர்கள் சிலரும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். ஐயப்பன், மதுரை மாவட்ட உசிலம்பட்டியை சேர்ந்தவர். இவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தீவிர ஆதரவாளர் என்பது குறுப்பிடத்தக்கது.

கடும் அதிருப்தி
இதுவரை எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்த உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு மாறி உள்ளது எடப்பாடி அணியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் மேலும் பலர் தன்னுடன் வர இருக்கிறார்கள் ஆனால் அது பரம ரகசியம் என கூறினார். இதனால் மேலும் பலர் அவருடன் வருவார்கள் என்கின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். இதுவரை நிர்வாகிகள் சென்று வந்த நிலையில் தற்போது முதன் முறையாக எடப்பாடி தரப்பிலிருந்து எம்எல்ஏ ஒருவர் தாவி இருப்பது எடப்பாடி பழனிச்சாமி தரப்பை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது இதனால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.

கூவத்தூர் பார்முலா
தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ள நிலையில் அதன் தீர்ப்பு எப்படி இருக்கும் என தெரியாது. ஆனால் அதற்குள் எம்எல்ஏக்கள் தாவினால் அது ஓபிஎஸ் தரப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் தர வாய்ப்பாக அமைந்துவிடும் என்பதால் எம்.எல்.ஏக்களை தக்க வைப்பதற்காக திட்டம் ஒன்றை கையில் வைத்திருக்கிறார் இபிஎஸ். அதுதான் கூவத்தூர் ஃபார்முலா. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவதற்கு இந்த கூவத்தூர் ஃபார்முலா தான் கை கொடுத்தது. தற்போது தனது எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுக பதவியை கைப்பற்றுவதற்காக மீண்டும் கூவத்தூர் பார்முலாவை கையில் எடுக்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் இதற்காக எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டு பேசும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் இபிஎஸ் ஆதரவாளர்கள்.
-
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
சென்னை சிறுவனுக்கு பாலியல் தொல்லை! கோட் சூட் போட்டோஷூட் நடத்தினால் மட்டும் போதாது! இபிஎஸ் அட்வைஸ்












Click it and Unblock the Notifications