சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

’அம்மா மறைந்த நன்னாளில்’டெல்லிக்கு பறந்த எடப்பாடி! பச்சை சிக்னலாமே? இனி அதிமுக ‘ரிமோட்’ அவர் கையில்!

Google Oneindia Tamil News

சென்னை : அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக பல்வேறு விவகாரங்கள் நடைபெற்று வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இன்று தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பிரதிநிதியாக பங்கேற்றுகிறார். இதையடுத்து வருங்காலங்களில் அதிமுகவின் அதிகாரம் முழுவதும் அவர் கைக்கே வரும் என உற்சாகமாக இருக்கின்றனர் அவர் தரப்பு நிர்வாகிகள்.

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தில் விவகாரம் விசாரணைக்கு வந்தாலும் ஓபிஎஸ்-க்கு ஆதரவாகவே முடிவுகள் எடுக்கப்படும் என டெல்லி தலைமை உறுதி அளித்துள்ளதாகவும், தனக்கு ஆதரவாக பாஜக தலைமை இருப்பதால் ஓபிஎஸ் மற்றும் அவர் தரப்பு ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர்

இந்த நிலையில் தான் தற்போது பாஜக தலைமை கொடுத்த திடீர் திருப்பத்தால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உற்சாகமடைந்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கடுமையாக அதிர்ச்சி அடைந்துள்ளது. ஜி 20 மாநாடு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் நடைபெற வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

டெல்லியில் முதல்வர் ஸ்டாலின்..இந்தியில பெயர் இருக்கே! கவனிச்சீங்களா? கொளுத்தி போடும் திருச்சி சூர்யா டெல்லியில் முதல்வர் ஸ்டாலின்..இந்தியில பெயர் இருக்கே! கவனிச்சீங்களா? கொளுத்தி போடும் திருச்சி சூர்யா

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக இரட்டை தலைமையே தொடர வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வலியுறுத்தி வரும் நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக இபிஎஸ் அண்ட் கோ உற்சாகத்தில் ஆழ்ந்திருக்கும் அதே நேரத்தில் தேனி தரப்பு கடும் அப்செட் அடைந்திருக்கிறது. அதிமுகவில் பாஜக ஆதரவு தங்களுக்குத் தான் இருக்கிறது என கூறி வந்த நிலையில் டெல்லி மேலிடம் இப்படி திடீர் முடிவு எடுக்க என்ன காரணம் என தெரியாமல் புலம்பி வருகின்றனர்.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் இருக்கும் நிலையில் இன்னும் சில நாட்களில் அது தொடர்பான தீர்ப்பு வர இருக்கிறது தீர்ப்பு ஏதாவது ஒரு தரப்புக்கு சாதகமாக வந்தாலும் விவகாரம் அதோடு முடியப்போவதில்லை. காரணம் மேல் முறையீடு தேர்தல் ஆணையத்தில் முறையீடு என அடுத்தடுத்த நகர்வுகள் இருக்கும். பொதுவாக அரசியல் கட்சிகளை பொறுத்த வரை தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவுதான் இறுதி முடிவாக இருக்கிறது.

எடப்பாடிக்கு அழைப்பு

எடப்பாடிக்கு அழைப்பு

எனவே இருதரப்புமே நிச்சயம் தேர்தல் ஆணையத்திலும் நேருக்கு நேர் மல்லுக்கட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் பாஜக தலைமையின் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பதுதான் நீண்ட கால விவாதமாக இருக்கிறது. ஏற்கனவே கூறியது போல ஓ.பன்னீர்செல்வம் பாஜக தலைமையின் ஆதரவு தனக்கு தான் இருக்கிறது என மிக உறுதியாக இருந்தார். இந்த நிலையில் ஜி 20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக தலைமை என பாஜக கருதுகிறது என்கின்றனர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள்.

அதிமுக அதிகாரம்

அதிமுக அதிகாரம்

நிர்வாகிகள், தொண்டர்கள், எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லாத ஓ.பன்னீர்செல்வத்தினால் எந்த பலனும் இல்லை எனவே எடப்பாடி தரப்பிலேயே ஆதரவு கையை நீட்டி விடலாம் என பாஜக கருதுகிறது எனவும் இதனால் தான் ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கவில்லை என்கின்றனர் எடப்பாடி ஆதரவு நிர்வாகிகள். பாஜகவில் இந்த நகர்வு பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இது எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி எனவும் வரும் காலங்களில் அதிமுகவில் அதிகாரம் முழுவதும் அவர் கையிலே இருக்கும் என்கின்றனர் சேலம் ரத்தத்தின் ரத்தங்கள்.

English summary
Edappadi Palaniswami is participating in a consultative meeting chaired by Prime Minister Narendra Modi today in the capital Delhi as a representative of the AIADMK. After this, the administrators of AIADMK are excited that he will get all the power in his hands in the future.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X