முதியோர், மாற்றுத்திறனாளிகள் எளிதில் சாமி தரிசனம் செய்யலாம்..அரசு அதிரடி உத்தரவு
திருக்கோவில்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் எளிதில் தரிசனம் செய்ய ஏதுவாக சாய்வு தளங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: திருக்கோயிலுக்கு வருகை தரும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் எளிதில் சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக மரத்தினாலான சாய்வுத்தளங்களை அமைத்திட நடவடிக்கை எடுத்திடவும் சக்கர நாற்காலிகளை கொள்முதல் செய்யவும் முதுநிலை திருக்கோவில்களில் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவிழா காலங்களிலும் கூட்டமான நேரங்களிலும் கோவிலுக்கு வரும் மூத்த குடிமக்களும் மாற்றுத்திறனாளிகளும் சாமி தரிசனம் செய்ய முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். எனவே 48 முதுநிலைத் திருக்கோயில்களிலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் எளிதில் தரிசனம் செய்ய ஏதுவாக திருக்கோயில் வளாகத்தில் மரத்தினாலான சாய்வுத்தளங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்திருந்தார்.

இந்நிலையில் திருக்கோயிலுக்கு வருகை தரும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் எளிதில் சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக மரத்திலான சாய்வுத்தளங்களை அமைத்திட நடவடிக்கை எடுத்திடவும் மேலும், தேவையான எண்ணிக்கையில் மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்காக சக்கர நாற்காலிகளை கொள்முதல் செய்யவும் உடனடி நடவடிக்கை எடுத்திடவும் முதுநிலை திருக்கோயில்களில் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்படும் வகையில் திருக்கோயில்களில் சக்கர நாற்காலி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ற விபரத்தினை பக்தர்கள் எளிதில் அறியும் வகையில் அறிவிப்பு செய்யப்பட வேண்டும்.
திருக்கோயில் நுழைவு வாயில் அருகில் குறைந்தபட்சம் 5 சக்கர நாற்காலிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், திருக்கோயில்களில் இதற்காக தனியாக ஒரு பணியாளர் பொறுப்பில் இருக்க வேண்டும், சக்கர நாற்காலியில் வருபவர்கள் எளிதில் தரிசனம் செய்யும் வகையில் தேவையான இடங்களில் மரப்பலகையிலான சாய்வுத்தளங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications