சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாக்களிப்பதற்கு மாலை 6 மணிக்கு மேல் வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் சிஸ்டம்.. தேர்தல் ஆணையம்

Google Oneindia Tamil News

சென்னை: மதுரையில் வாக்களிப்பதற்கு மாலை 6 மணிக்கு மேல் வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் 67,664 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

Election commission says that token will be issued for voters coming after 6 pm

இந்நிலையில் மதுரையில் சித்திரை திருவிழாவையொட்டி வாக்குப் பதிவு இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதசாஹூ கூறுகையில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 1400 பேர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்களிப்பதற்காக மாலை 6 மணிக்கு மேல் வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும்.

வி.வி. பேட் கருவியை பயன்படுத்துவதால் வாக்குப் பதிவில் காலதாமதம் ஏற்படாது. அனைத்து சோதனைகளும் மேற்கொள்ளப்பட்ட பிறகே விவி பேட் கருவி பயன்படுத்தப்படவுள்ளது.

அரியலூரில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட தேர்தல் பணிக்கு வந்த அதிகாரி இன்று பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுவார் என்றார் சத்யபிரதசாஹூ.

English summary
Election Commission says that token will be issued for voters coming after 6pm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X