வரி விலக்கு! தமிழக அரசின் புதிய வரிச்சலுகை – வாகன ஓட்டிகளுக்கு இனி ஜாலி
சென்னை: நீண்ட காலத்தில் செலவுச்சுமை குறைந்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ஒரு நிலையான போக்குவரத்து தீர்வாக மின்சார வாகனங்கள் பார்க்கப்பட்டு வருகின்றன.. இந்நிலையில், வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அது என்ன தெரியுமா?
சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கும் விதமாகவும், பெட்ரோல், டீசலுக்கு பதிலாக பேட்டரியில் ஓடும் வாகனங்கள், சிஎன்ஜி எரிவாயுவில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்தும், மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியபடி உள்ளன. அதனால்தான் மின்சார வாகனங்களை வாங்கி பயன்படுத்தும் ஆர்வம் மக்களிடம் பிரபலமாகி வருகிறது.

மின்சார வாகனங்கள் பயன்பாடுகள்
உலகம் முழுவதுமே தற்போது இ வாகனங்கள் அதிகரித்தபடி உள்ளது.. இந்தியாவிலும் மின்சார வாகனங்களின் தேவை பெருகி கொண்டிருக்கிறது.. இதில் நம்முடைய தமிழகம் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் முன்னிலையில் உள்ளது.. இதற்காகவே பல நிறுவனங்கள் இ-வாகனங்களை உற்பத்தி செய்ய அதீத ஆர்வத்தை காட்டி வருகின்றன.
காரணம், பெட்ரோல், டீசல் வாகனங்களை போல புகை வெளியீடு இல்லாததால் காற்று மாசு மின்சார வாகனங்கள் மூலம் குறைகிறது... இதனால் நகரங்களில் சுவாசக் கோளாறுகள், ஆரோக்கிய பாதிப்புகள் குறைய வாய்ப்பு உள்ளது.
இதற்காகும் செலவும் மிகவும் குறைவாக இருக்கும்... எரிபொருள் விலை உயர்வுகள் மின்சார வாகனங்களை பாதிக்காது.. முக்கியமாக, இந்த வாகனங்களுக்கு வீட்டிலேயே அல்லது சார்ஜிங் ஸ்டேஷன்களில் குறைந்த செலவில் சார்ஜ் போட்டுக் கொள்ள முடியும்... பராமரிப்பும் எளிதாக இருக்கும்.. ஏனென்றால், இன்ஜின் ஆயில், கிளட்ச் போன்ற தேய்மானம் தரும் பார்ட்ஸ்கள் இதில் இல்லை.
தமிழக அரசு வரி சலுகைகள்
அதேபோல இந்த ரக வாகனங்களை இயக்கும்போது சத்தமும் பெரிதாக வராது.. இதனால் ஒலி மாசு குறையும்.. இதுபோக அரசு தரும் சலுகைகள், பதிவு கட்டண குறைப்பு, வரி தள்ளுபடிகள், போன்றவையும் மின்சார வாகனங்களை வாங்குவதையும் பயன்படுத்துவதையும் மேலும் ஊக்குவிக்கின்றன.
எனவேதான், மக்களின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு, மீண்டும் ஒரு அதிரடி அறிவிப்பை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.. தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
"மின்சார வாகனங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த வரி விலக்கு சலுகையானது இன்றுடன் (புதன்கிழமை) முடிவடைகிறது. இந்த நிலையில், இந்த 100 சதவீதம் வரி விலக்கானது வருகிற ஜனவரி 1-ந்தேதி (நாளை) முதல் 2027-ம் ஆண்டு டிசம்பர் 31ந்தேதி வரை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது.
வரி விலக்கு - அரசாணை
இந்த வரி விலக்கு சலுகையானது, இன்றுடன் (புதன்கிழமை) முடிவடைகிறது. இந்த நிலையில், இந்த 100 சதவீதம் வரி விலக்கானது வருகிற ஜனவரி 1-ந்தேதி (நாளை) முதல் 2027-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி வரை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது.
இந்த வரி விலக்கு சலுகையானது, மத்திய மோட்டார் வாகன விதிகளின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள அனைத்து விதமான போக்குவரத்து வாகனங்கள் மற்றும் போக்குவரத்து அல்லாத தனிநபர் பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் போக்குவரத்து அல்லாத தனிநபர் பயன்பாட்டு வாகனங்கள் என அனைத்து வகை மின்சார வாகனங்களுக்கும் பொருந்தும்.
மின்சார வாகனக் கொள்கை
தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாடு கணிசமாக அதிகரித்து வருகிறது. 2025-ம் ஆண்டில் இது சுமார் 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த வேகத்தைத் தக்க
வைக்கவும், 'தமிழ்நாடு மின்சார வாகனக்கொள்கை 2023'-ன் நோக்கங்களை எட்டவும், வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் போக்குவரத்து ஆணையரின் கோரிக்கையை ஏற்று அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் மின்சார வாகனங்களை வாங்குவோர் சாலை வரி செலுத்துவதில் இருந்து முழுமையாக விலக்கு பெறுவர்" என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications