செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான காண்ட்ராக்டர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு! கரூரில் பரபரப்பு!
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கரூரில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த 4 அமலாக்கத்துறை அதிகாரிகள், கரூரில் சங்கர் ஆனந்த் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய ஆதரவாளர்களான கொங்கு மெஸ் சுப்பிரமணி, சக்த் மெஸ் கார்த்திக் ஆகியோர் வீட்டிலும் சோதனை நடக்கிறது.

துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் இன்று காலை வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், சங்கர் ஆனந்த், கொங்கு மெஸ் சுப்பிரமணி ஆகியோர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், சென்னையிலும் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின்சாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இவர் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறையின் சோதனைக்கு உள்ளாகி பின்னர் சிறையில் அடைக்கப்பட்டு, பின் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களாக கருதப்படும் நபர்களின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications