சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்..செங்கோட்டையன் தலைமையில் 106 பேர்.. பெரும்படையை களமிறக்கும் இபிஎஸ்

ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற செங்கோட்டையன் தலைமையில் மிகப்பெரிய படையை களமிறக்கியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

Google Oneindia Tamil News

சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிராக வலிமையான வேட்பாளரை நிறுத்த ஆலோசித்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 106 பேர் கொண்ட வலிமையான தேர்தல் பணிக்குழுவை அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா எதிர்பாராத வகையில் திடீர் மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து காலியாக உள்ள இந்த தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக களமிறங்குகிறார். விசிக,கம்யூனிஸ்ட்டுகள், மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஆதரவுடன் பிரச்சாரம் செய்து வருகிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன். மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனும் நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக கூறி ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கை கொடுத்து வலுப்படுத்தியுள்ளார்.

Erode East by-election Edapadi Palanisamy Announce Election team led by KA Sengottaiyan

தேமுதிக தனியாக வேட்பாளரை களமிறக்கியுள்ளது. அதேபோல நாம்தமிழர் கட்சியும் தனியாக போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. பலமுனை போட்டி நிலவும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணியாகவும் ஓ.பன்னீர் செல்வம் அணி தனியாகவும் போட்டியிடப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஈரோடு இடை த்தேர்தலுக்கான க்கான வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றுவருகிறது. ஈரோடு அருகே வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் ஓட்டலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனையில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கே.சி.கருப்பண்ணன், தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி நிர்வாகி யுவராஜ், தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் விடியல் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழுவை அமைத்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் 106 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கில் இதுதான் நடக்கும்.. களமிறங்கும் படை.. ரிசல்ட்டே தலைகீழாகும்! அடித்து சொன்ன எக்ஸ்பர்ட்ஈரோடு கிழக்கில் இதுதான் நடக்கும்.. களமிறங்கும் படை.. ரிசல்ட்டே தலைகீழாகும்! அடித்து சொன்ன எக்ஸ்பர்ட்

ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஏற்கனவே காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. தொகுதியை எப்படியும் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் வேட்பாளரை அறிவித்து பிரச்சாரத்தையும் துவக்கி விட்டது திமுக. வலிமை வாய்ந்த தேர்தல் பணிக்குழுவையும் அறிவித்துள்ளது. திமுக சார்பில் தேர்தல் பணிக்குழுவில் கே.என்.நேரு, எஸ்.முத்துசாமி, எ.வ.வேலு, கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தா.மோ. அன்பரசன், அர.சக்கரபாணி, மு.பெ. சாமிநாதன், வி.செந்தில்பாலாஜி ஆவடி சா.மு.நாசர், கயல்விழி செல்வராஜ், அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்ட பல அமைச்சர்களுடன் பெரும்படையை களமிறக்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அதற்கு இணையாக வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ள எடப்பாடி பழனிச்சாமி 106 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அறிவித்துள்ளார். தமிழ்மகன் உசேன்,கே.பி.முனுசாமி,திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Erode East by-election Edapadi Palanisamy Announce Election team led by KA Sengottaiyan

ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன், முக்கிய நிர்வாகிகள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் மற்றும் மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர், புகழேந்தி, மருது அழகுராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், 87 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திப்போம் என அழைத்து வருகிறார் ஓ.பன்னீர் செல்வம். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி தயாராக இல்லை. தனியாக தனி அணியினருடன் ஆலோசனை நடத்தி தேர்தல் பணிக்குழுவையும் அறிவித்து விட்டார்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழுவை அமைத்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் . முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 106 பேர் கொண்ட தேர்தல் பணி குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தலைமையில் தமிழ் மகன் உசேன் , கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் , பொன்னையன், தம்பிதுரை, தங்கமணி, வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் ,ஜெயக்குமார் ,சி.வி சண்முகம், செம்மலை ,தளவாய் சுந்தரம், வளர்மதி, செல்லூர் ராஜு தனபால், கே.பிஅன்பழகன், காமராஜ், ஓ.எஸ். மணியன் , கோகுல இந்திரா, சின்னசாமி, சி.விஜயபாஸ்கர் , கடம்பூர் ராஜு , ஆர்.பி. உதயகுமார், ராஜேந்திர பாலாஜி , பெஞ்சமின் , கருப்பசாமி பாண்டியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, உடுமலை ராதாகிருஷ்ணன், ஜக்கையன் , வேணுகோபால், சேவூர் எஸ்.ராமச்சந்திரன் , ராஜன் செல்லப்பா, பாலகங்கா, வைகைச் செல்வன் , செல்வராஜ், மோகன் , கமலக்கண்ணன், ராஜு , விஜயகுமார் , சிவபதி, சொரத்தூர் ராஜேந்திரன் , முக்கூர் சுப்பிரமணியன், செல்ல பாண்டியன், தாமோதரன் உள்ளிட்ட 106 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

English summary
Edappadi Palanisami is planning to field a strong candidate against Congress candidate EVKS Elangovan in the Erode East by-election. He has announced a 106-strong election task force headed by former minister Sengottaiyan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X