Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெற்றி பெற்றாலும் தோல்வி என்று அறிவிப்பார்கள்... எதையும் சட்டரீதியாக சந்திப்போம் - இபிஎஸ்

அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்ததாக அறிவிக்க வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளதாக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினர் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்ததாக அறிவிக்க வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். அனைத்தையும் சட்டரீதியாக நாங்கள் சந்திக்கத் தயார் என்று தெரிவித்துள்ள அவர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்கு உரியது என்றும் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் பெரும் 60. 70 சதவீத வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகள் அனைத்தும் பிப்ரவரி 22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

பெரும்பாலும் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தாலும் ஒரு சில இடங்களில் சிறு சிறு பூசல்கள் ஏற்பட்டதால் அந்த இடங்களுக்கு மறுவாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. அதன் அடிப்படையில் சென்னையில் 7 வார்டுகள் உட்பட தமிழகத்தில் 5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது.

கள்ள ஓட்டு குற்றச்சாட்டு

கள்ள ஓட்டு குற்றச்சாட்டு

சென்னை ராயபுரம் பகுதியில் 49வது வார்டில் 19ஆம் தேதி ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து கொண்டிருந்தனர். ஏற்கனவே திமுக கோவை சென்னை போன்ற பல்வேறு இடங்களில் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற முயற்சிக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தொடர்ந்து புகார் கூறி வந்த நிலையில், ஆளுங்கட்சியினர் யாரும் கள்ள வாக்குகளை செலுத்தி விடக்கூடாது என்பதிலும் அதை தடுப்பதிலும் முனைப்புக் காட்டி வந்தனர். அதனால் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கு முன்பாகவும் கள்ள ஓட்டு மற்றும் பூத் கைப்பற்றுதல் போன்றவற்றை தடுக்கும் முயற்சியில் ஏராளமான அதிமுகவினர் திரண்டிருந்தனர்.

ஜெயக்குமார்

ஜெயக்குமார்

அப்போது அவர்கள் ஒரு நபரை ஏற்கனவே வேறு ஒரு வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு, மீண்டும் கள்ள ஓட்டு செலுத்த வந்ததாக கூறி சுற்றிவளைத்தனர். இந்த தகவல் தெரிந்து அந்த இடத்திற்கு விரைந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அந்த நபரிடம் வாக்குவாதம் செய்ததுடன், அந்த நபரின் கைகளை கட்டுமாறு கூறினார். சிலர் தொண்டர்கள் அந்த நபரை தாக்க முயன்றபோது யாரும் அவரைத் தாக்க வேண்டாம், சட்டையை கழட்டி கையை மட்டும் கட்டுங்கள் என கூறினார், அரை நிர்வாணப்படுத்தி சாலையில் இழுத்து சென்றார். இதுதொடர்பான வீடியோ நமது சமூக வலைதளத்தில் வைரலானது.

ஜெயக்குமார் மீது வழக்கு

ஜெயக்குமார் மீது வழக்கு

இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அவரது ஆதரவாளர்கள் 95 ஆண், 15 பெண்கள் என 110 நபர்கள் மீது ராயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக அடித்து இழுத்துச் சென்றதில் தண்டையார்பேட்டை போலீசார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

இபிஎஸ் கண்டனம்

இபிஎஸ் கண்டனம்

இதற்கு எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, குற்றவாளிகளை பிடித்துக்கொடுப்பது ஒரு குற்றமா என்று கேட்டார். திமுக ஆட்சி அமைந்த பின்னர் ஒன்பது மாதங்களில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக குற்றம் சாட்டினார். குற்றவாளிகளுக்கு முதல்வரே துணைபோவது வேடிக்கையாக இருப்பதாகவும் கூறினார்.

நல்ல பரிசு

நல்ல பரிசு

அதிமுகவைப் பொறுத்தவரை சட்டரீதியாக எதையும் சந்திக்கத் தயார் என்றும் கூறிய அவர், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மடியில் கனமில்லை வழியில் பயமில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். குற்றவாளிகளை சட்டரீதியாக கண்டுபிடித்து ஒப்படைத்தவர்களுக்கு நல்ல பரிசு கொடுத்துள்ளார் முதலமைச்சர் என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.

வாய்மொழி உத்தரவு

வாய்மொழி உத்தரவு

வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுகவினர் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்ததாக அறிவிக்க வேண்டும் என்று வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். எங்களுக்கு வந்த தகவலின் படி மாவட்ட ஆட்சியர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் வாய் மொழி உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் அலுவலகர்களுக்கு வாய்மொழியாக உத்தரவு அரசாங்கம் ஆணை பிறப்பித்துள்ளதாக செய்தி வந்துள்ளது.

நீதிமன்ற உத்தரவு

நீதிமன்ற உத்தரவு

வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள அதிகாரிகளிடம் திமுக வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வழிமுறைகளை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. முதலில் தபால் வாக்குகளை எண்ண வேண்டும். உயர்நீதிமன்ற நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியர்களும் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். ஒவ்வொரு வார்டிலும் வாக்கு எண்ணிக்கை முடிந்த உடன் வெற்றி பெற்றதாக அறிவித்து சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டார்.

மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும்

மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும்

நடுநிலையோடு ஜனநாயக முறைப்படி வாக்கு எண்ணும் அலுவலகர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மக்கள் தீர்ப்பை மதித்து தேர்தல் அலுவலர்கள் உண்மையாக வெற்றி பெற்றவர்களை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+