சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எல்லாம் வதந்தி..நம்பாதீங்க..கைலாசத்திலிருந்து.. நித்யானந்தா பற்றி சிஷ்யைகள் பரபரப்பு

இந்து சன்யாசியகளாக இருந்து , அவரிடம் நேரடியாக தீட்சை பெற்ற நானும், சக சன்யாசிகளும் சேர்ந்து, இந்த கைலாசத்தை புனரமைப்பதில் தொடர்ந்து ஈடுபடுவோம், உறுதுணையாக இருப்போம். இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்று நித்யானந்த

Google Oneindia Tamil News

சென்னை: நித்யானந்தாவைப் பற்றி தினம் ஓரு செய்திகள் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் கைலாசத்தை விட்டு ஓடி விட மாட்டோம்...உறுதுணையாக இருப்போம். இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்று அவரது சிஷ்யைகள் கூறியுள்ளனர்.

Recommended Video

    கைலாசத்தை விட்டு ஓடி விட மாட்டோம்...உறுதுணையாக இருப்போம்.

    பெங்களூரு அருகே பிடதியில் ஆசிரமம் அமைத்து அமோகமாக வாழ்ந்து வந்தார் நித்யானந்தா. பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளானார். காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த நித்யானந்தா கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டதாக இணையதளத்தில் தோன்றி அறிவித்தார்.

    அவரது பக்தர்களுக்கு அடிக்கடி இணையதளத்தில் தோன்றி உரையாற்றியும் வருகிறார். இந்த நிலையில் நித்யானந்தா இறந்துவிட்டதாக இணையதளங்களில் செய்தி பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்து நித்யானந்தா தரப்பில் இருந்து சில பதிவுகள் வெளியாகி வருகின்றன.

    என் உடலில் மத்தவங்க ரத்தம் கலக்க கூடாது.. திருவண்ணாமலைக்கு போகணும்.. அடம் பிடிக்கும் நித்யானந்தா? என் உடலில் மத்தவங்க ரத்தம் கலக்க கூடாது.. திருவண்ணாமலைக்கு போகணும்.. அடம் பிடிக்கும் நித்யானந்தா?

     நித்யானந்தா வீடியோ

    நித்யானந்தா வீடியோ

    "நான் இறந்துவிட்டதாக சிலர் புரளிகளை கிளப்பி வருகிறார்கள். நான் தற்போது சமாதியில் இருக்கிறேன். ஆனால் இறக்கவில்லை. பேசும் திறன் இல்லை. சொற்பொழிவாற்ற சில காலம் ஆகும். 27 மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். பிரபஞ்ச சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது என மருத்துவர்கள் ஆய்வு செய்கிறார்கள் என்று கூறியிருந்தார் நித்யானந்தா.

    இன்பம் இன்பம்

    இன்பம் இன்பம்

    அவரது முகநூல் பக்கத்தில் புதிய புதிய கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
    நீ தீவிரமானவன் அல்ல. ஆக ஆசை இல்லை முழுவதுமாக நிறைவடைந்தது மற்றும் அதன் பின்னால் விட்டுச்செல்க..உன் உள்வெளியில் நினைவகம் பொறிக்கப்பட்டது,இல்லாத ஆசைகளின் நினைவுகள்
    முழுமையான நிறைவானவை சம்ஸ்காரங்கள் எனப்படும். இந்த பொறிக்கப்பட்ட நினைவுகளுக்கு சக்தி உண்டு
    உன்னை திரும்பி அதில் பயணிக்க வைக்க பாதை. அது காபியா அல்லது ஷாம்பெயின் ஆக இருந்தாலும் சரி
    அல்லது புகைப்பிடித்தல், நீங்கள் என்ன படைத்தாலும் இதைச் செய்ய வைக்கும் சக்தி உங்களுக்கு இருக்கும்
    மீண்டும் மீண்டும் அதே செயல், நீங்கள் உணரும் வரை அந்தப் பழக்கத்துடன் அல்லது முழுவதுமாக நிறைவேறியது. அந்த இன்பம் அல்லது இன்பம் உங்கள் போதையை நீங்கள் தீவிரமாக அனுபவித்தால் கூட
    ஒரு முறை, ஒரு முறை தான், நீ முழுமையாக இருப்பாய் விடுதலை. அந்த இங்கிராம் உன்னை ஒருபோதும் கேட்காது இனி அந்த பாதையில் பயணிக்க வேண்டும். அது செய்யும் உனக்கு விடுதலை என்று பதிவிட்டுள்ளார் நித்யானந்தா.

    என்னதான் நடக்குது

    என்னதான் நடக்குது

    நித்யானந்தா தினசரியும் வீடியோ பதிவிட்டு வந்த நிலையில் தற்போது கைலாசாவில் என்ன நடக்கிறது என்று அவரது சிஷ்யைகள் வீடியோவாக பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த கைலாசம் என்பது, மொத்த இந்து சனாதனத்தின் கோட்பாடுகள், கலாச்சாரம், இதனுடைய மொத்தத்தின் புனரமைப்பு. பரமசிவனாரே... நேரடியாக திருமேனி தாங்கி வந்து, பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவனாக , இந்த திருப்பணியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்; செய்து முடித்தே தீருவார்... இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை; மாற்றமும் இல்லை.

    உறுதுணையாக இருப்போம்

    உறுதுணையாக இருப்போம்

    இதில் தொடர்ந்து இந்து சன்யாசியகளாக இருந்து , அவரிடம் நேரடியாக தீட்சை பெற்ற நானும், சக சன்யாசிகளும் சேர்ந்து, இந்த கைலாசத்தை புனரமைப்பதில் தொடர்ந்து ஈடுபடுவோம், உறுதுணையாக இருப்போம். இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

    யாராலும் அழிக்க முடியாது

    யாராலும் அழிக்க முடியாது

    நாங்கள் முக்கியமாக ஒன்று கூறிக்கொள்கிறோம். விட்டுட்டு ஓடுவதற்கு, நாங்கள் பாவடை சன்யாசிகள் அல்ல... பரமசிவனிடமிருந்தே நேரடியாக தீட்சை பெற்ற சன்யாசிகள். அதனால், இந்த கைலாசத்தை யாராலும் அழிக்கவும் முடியாது; கைலாசத்தின் புனரமைப்பை நிறுத்தவும் முடியாது. எங்கள் ஞானசர்குருநாதர் பகவான் நித்யானந்தர் அவர்களோடு இணைந்து இதை செய்வோம். தொடர்ந்து இதை செய்வோம், செய்தே முடிப்போம் என்று அந்த பதிவில், நித்யானந்தாவின் பெண் பக்தர்கள் பேசியுள்ளனர்.

    நித்ய சிவபூஜை

    நித்ய சிவபூஜை

    18 வயது இளைஞனை போல இதயம் துடித்து, உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்குவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நித்ய சிவபூஜை தொடர்ந்து நடைபெறுகிறது" என்று ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டு இருந்தார் நித்யானந்தா. இது போல் தொடர்ந்து பேஸ்புக்கில் அவரது பெயரில் பதிவிடப்பட்டு வருகிறது. தற்போது வந்த மருத்துவ பரிசோதனை அறிக்கைகளின் படி தனது உடல் ஆரோக்கிய மானதாக இருக்கும் எனக் கூறியுள்ளார் நித்யானந்தா.

    பயோ மெமரி

    பயோ மெமரி

    தனது ஆசிரமத்தில் நிர்வாகத்தினை சிஷ்யர்கள் பார்த்துக் கொள்வார்கள் எனவும் கூறியுள்ளார் இது குறித்து நித்யானந்தாவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக்கில் புதிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சமாதியின் உள்ளே இருந்து நேரடி 'கவரேஜ்' என குறிப்பிட்டுள்ளார். மேலும் சமாதியில் உண்மையான அர்த்தம் என்னவென்றால் சம+ஆதி. அனைத்தும் சமநிலையை அடைவதாகும். அதாவது என் உடல், மனம், உணர்வுகள், பயோமெமரி, பயோ எனர்ஜி ஆகியவை எல்லாம் சமநிலையை அடைந்து மீண்டும் பழைய நிலையை அடையும்.

    சரியான தூக்கம் இல்லை

    சரியான தூக்கம் இல்லை

    வாதம், பித்தம், கபம் ஆகிய 3 தோஷங்களும் சமமாக இருக்க வேண்டும். இதன் பொருள் என்னவென்றால் உடலில் தேங்கி உள்ள கொழுப்பு மற்றும் ஜீரணமாகாத உணவு பல வடிவங்களில் உடலை விட்டு வெளியேறுகிறது. உடல் முற்றிலும் நச்சு தன்மை பெறுகிறது. அதனால் தான் வெளிப்புற உணவு இல்லை. அல்லது வழக்கமான தூக்கம் இல்லாமல் இருக்கிறேன்.

     உள்ளே இருந்து பதில்

    உள்ளே இருந்து பதில்

    நான் இந்த சமாதி நிலையில் இருக்கும்போது மக்கள் கேட்ட வரங்கள், பிராத்தனைகள், விருப்பங்கள் அனைத்தும் கிடைக்கும். பரமசிவனிடம் இருந்து ஆற்றல் கிடைக்கப்பெற்று அது தீவிரமடைந்து அனைவரின் ஆசைகளையும் நிறைவேற்றும். நான் சமாதியில் இருக்கும்போது மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு உள்ளே இருந்து கொண்டே பதில் அளிக்கப்படுகிறது. நான் அனைவரிலும் ஒன்றாக கலந்துவிட்டேன். நான் சமாதியில் இருக்கும்போது வெறுப்பாளர்கள், எதிரிகள் என்னை தூற்றுவதற்கு சக்தியை இழந்துவிடுவார்கள். ஒவ்வொருவரின் கடந்த கால வாழ்க்கை, நிகழ்கால வாழ்க்கை மற்றும் எதிர்கால வாய்ப்புகள், ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஏற்ப நான் ஒவ்வொவராக பார்க்கிறேன்.

    English summary
    Being a Hindu monk, I and my fellow monks, who were ordained directly by him, will continue to be involved and supportive in restoring this work. The disciples of Nityananda said that there was no alternative.Ma Tattvapriyananda and Ma Nithyanandhita share their views on the ongoing rumours about the SPH's health and the vision of KAILASA
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X