சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெற்றால்தான் பிள்ளையா.. கொரோனா வார்டில் தாய் வடிவில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மையாளர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: பழங்கால படத்தில் பெற்றால்தான் பிள்ளையா என ஒரு வசனம் வரும். அது இந்த நெருக்கடியான சூழலில் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ தாய் வடிவில் நோயாளிகளை இமை போல் காக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு பொருந்தும். காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண் போலீஸ் அதிகாரிகளும் போற்றுதலுக்குரியவர்களே.

Recommended Video

    2 மாற்று திறனாளி மகன்களுடன் உணவின்றி தவிக்கும் தாய்

    இன்று அன்னையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நம்மை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்திய அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் தினம்தான் இன்று.

    குழந்தையை 10 மாதம் சுமந்து பெற்றெடுத்தால்தான் அன்னை என்றில்லை. ஒருவரை தாய்மை உள்ளத்துடன் சேவை மனப்பான்மையுடன் கவனித்துக் கொண்டாலும் அவர் அன்னைதான்.

    டாஸ்மாக் விவகாரம்- ரஜினியின் மவுனத்தை கலைத்தது கமல்ஹாசனின் மநீமவின் அடுத்தடுத்த பல்க் ஸ்கோர்டாஸ்மாக் விவகாரம்- ரஜினியின் மவுனத்தை கலைத்தது கமல்ஹாசனின் மநீமவின் அடுத்தடுத்த பல்க் ஸ்கோர்

    நெருக்கடி

    நெருக்கடி

    அந்த வகையில் நம்மை பெற்ற தாய்கள் மட்டுமல்லாது இந்த நெருக்கடியான காலகட்டத்தில் நல்ல நாட்களில் கூட தன் குடும்பம், குழந்தைகளுடன் இல்லாது மருத்துவமனையிலேயே தங்கி கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், செவிலியர்களும் தாய்கள்தான்.

    கொரோனா

    கொரோனா

    வேலை வேலை என 24 மணி நேரமும் ஓடி கொண்டிருந்த நிலையில் ஊரே இந்த கொரோனா விடுமுறையை தன் குடும்பத்தினருடன் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் இந்த மருத்துவர்கள் உள்ளிட்டோரே மருத்துவமனையே கதி என இருக்கிறார்கள். தொற்று நோயான கொரோனா பல்வேறு காரணிகள் மூலம் பரவும்.

    உயிர் போகும் நிலை

    உயிர் போகும் நிலை

    இது தெரிந்தும் தங்களது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். ஒரு தாயும் தனது குழந்தை பேறுவின் போது உயிர் போகும் அளவுக்கு வலிக்கும் என தெரிந்தும் பிரசவம் மறுபிறவி என தெரிந்தும் தனது உயிரை பணயம் வைத்து குழந்தையை பெற்றெடுக்கிறாள். எனவே தாய்க்கு சமமாக மருத்துவர்களையும் செவிலியர்களையும் நாம் இந்த நன்னாளில் மதிக்க வேண்டும்.

    துப்புரவு பணியாளர்கள்

    துப்புரவு பணியாளர்கள்

    சுத்தம் சோறு போடும் என்பார்கள். அந்த பணியை செய்வோர் தூய்மை பணியாளர்கள். துப்புரவு பணியாளர்களாக இருந்த இவர்களது பெயர் தூய்மை பணியாளர்கள் என மாற்றப்பட்டது மிகவும் பொருத்தமான ஒன்றே. மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் மருத்துவக் கழிவுகளை இவர்கள்தான் சுத்தம் செய்கிறார்கள். அது போல் ஊரே கொரோனாவுக்கு பயந்து வீட்டுக்குள் இருக்கும் போது குப்பைகளை வீடு வீடாக சென்று சேகரித்து வருகிறார்கள்.

    போலீஸார்

    போலீஸார்

    தெருக்களை சுத்தமாக வைத்துக் கொள்கிறார்கள். தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா வந்துள்ள நிலையில் இவர்களின் பணியும் சிறப்பானதே. அது போல் போலீஸ் பணி என்றால் நேரம் காலம் என்பதே கிடையாது. தற்போது கொரோனா போன்ற நெருக்கடியால் உண்ண கூட நேரமில்லாமல் பெண் போலீஸார் சாலைகளிலும் சந்து பொந்துகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நன்னாளில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், பெண் போலீஸார் ஆகியோருக்கு அன்னையர் தின வாழ்த்துகள்.

    English summary
    Mother's day is celebrated throughout the country. In this day we salute Women doctors, nurses, sanitary workers and policewomen.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X