• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரபல நடிகை வீடியோ.. "இதுக்கு மேல ஓபனா எப்படி சொல்றது.. கேவலமான வேலைய பண்ணாதீங்க".. என்ன நடந்தது

Google Oneindia Tamil News

சென்னை: நடிகை அம்மு எ அபிராமி ஒரு விழிப்புணர்வு வீடியோவை பதிவிட்டுள்ளார்.. அத்துடன் முக்கிய கோரிக்கை ஒன்றையும் அந்த வீடியோவில் விடுத்துள்ளார்.

விஜய்யின் பைரவா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அம்மு அபிராமி... பிறகு, தீரன் அதிகாரம் ஒன்று, தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ஆனால், ராட்சசன் படத்தில், அம்மு என்ற கேரக்டரில் நடித்து மக்களின் மனதில் இடம்பிடித்தவர்.. அபிராமி என்ற பெயருடன் அம்மு என்ற பெயரும் இதன்மூலம் இவருக்கு ஒட்டிக் கொண்டது.

அம்மா, உன்னை ரொம்ப பிடிக்கும்.. அம்மா, உன்னை ரொம்ப பிடிக்கும்..

ராட்சசன்

ராட்சசன்

எனினும், வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம், திரையுலகில் பெயர் சொல்லும் அளவுக்கு ஃபேமஸ் ஆனார். தற்போது நிறைய படங்களில் பிஸியாக நடித்தும் வருகிறார்.. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.. மிக சிறிய வயது பெண்ணான இவர், என்ன சமைக்க போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், அந்த நிகழ்ச்சியில் ஃபைனல்ஸ் வரை முன்னேறி, ரசிகர்களை அசரடித்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மேலும் அம்மு ஃபேமஸ் ஆகிவிட்டார்..

 ஹீரோயின்கள்

ஹீரோயின்கள்

ஹீரோயினாக நடிக்கும் சான்ஸ்களும் குவிந்து வருகின்றன. இவர் சொந்தமாகவே யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.. அதில், தன்னுடைய டூர் பயணங்கள், தான் பங்கேற்கும் நிகழ்வுகள் குறித்த வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.. இதற்கு ஏராளமான ஃபாலோயர்ஸ்கள் உண்டு.. அப்படித்தான் ஒரு நெட்டிசன் இவரது சேனலை லைக் செய்து, தொடர்ந்து பார்த்து வந்துள்ளார்.. கடைசியில், அம்முவின் சேனல் போலவே, அவர் ஒரு தனியாக சேனலை துவங்கி விட்டார்.. அப்படியே அச்சுஅசல், அம்மு சேனலின் லோகோ உட்பட எல்லாவற்றையும் காப்பி அடித்து, அந்த சேனலை நடத்தி உள்ளார்..

 சப்ஸ்கிரைப்

சப்ஸ்கிரைப்

பார்ப்பதற்கு அந்த சேனல் போலவே இருப்பதால், அம்மு அபிராமியின் சேனல் என்று நினைத்து கொண்டு பலரும் வந்து அந்த நபரின் சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.. அதுமட்டுமல்ல, அப்படி போலியாக தன் சேனலுக்கு வந்த ரசிகர் ஒருவரிடம், ஐபோன் பரிசு கிடைத்திருக்கிறது, 7000 ரூபாய் டெலிவரி சார்ஜ் அனுப்பினால், அதை உங்கள் அட்ரஸுக்கு அனுப்பி வைக்கிறோம் என்று சொல்லி உள்ளார்.. அந்த ரசிகரும், ஐபோனுக்கு ஆசைப்பட்ட்டு, 7 ஆயிரத்தை அனுப்பி வைத்துள்ளார்.. ஆனால், ஐபோன் கடைசிவரை வந்து சேரவேயில்லை..

 நடிகை அம்மு

நடிகை அம்மு

அப்போதுதான் தாம் ஏமாந்துவிட்டோம் என்பதை அறிந்துள்ளார்.. அத்துடன், அந்த சேனல் அம்மு அபிராமியுடையது இல்லை என்பதையும் கண்டுபிடித்து, இந்த விஷயத்தை அம்மு அபிராமியிடமே சொல்லி உள்ளார்.. அதைக் கேட்டு அதிர்ந்து போனார் அம்மு அபிராமி.. தன் சேனலை பார்த்து காப்பி அடித்து, பண மோசடி செய்ததுடன், மறைமுகமாக தன் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தம் அந்த நபரை, பொதுவெளியில் போட்டு கேவலப்படுத்திவிட்டார்..

 ஸ்கிரீன்ஷாட்கள்

ஸ்கிரீன்ஷாட்கள்

இதற்காகவே ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார் அம்மு.. அதில், சில ஸ்கிரீன்ஷாட்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, தயவுசெய்து யாரும் இப்படி ஏமாந்துவிட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.. அம்மு அந்த வீடியோவில், "என் சேனலில் இப்படியெல்லாம் நடந்தது கிடையாது.. அப்படி ஏதாவது அறிவிப்பு என்றாலும், நானே அதிகாரப்பூர்வமாக பேசி வீடியோ வெளியிடுவேனே தவிர, மெசேஜ் மூலமாக எந்த தகவலையும் தெரிவிக்க மாட்டேன்.. என் சேனலின் லோகோவை காப்பியடித்து போலியாக சேனல் உருவாக்கி உள்ளார் அந்த நபர்..

 ஓபனா சொல்றேன்

ஓபனா சொல்றேன்

செல்போன் பரிசு கிடைத்துள்ளதாக, என் ரசிகர் ஒருவரிடம் சொல்லி, 7 ஆயிரமும் வாங்கி உள்ளார்.. அந்த ரசிகரும் நான்தான் பணம் கேட்கிறேன் என்று நினைத்துக் கொண்டு அனுப்பி வைத்துள்ளார். தயவுசெய்து இப்படி கேவலமான வேலை எல்லாம் செய்யாதீங்க.. இதைவிட எப்படி ஓபனாக சொல்றதுன்னு தெரியல.. அடுத்தவங்க காசை அடிக்காதீங்க.. மக்களும், என்ன ஏது என்று தெரியாமல் பணத்தை அனுப்பிடாதீங்க.. விழிப்பா இருங்க" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

English summary
Famous actress ammu abhirami posts shocking video about online spam, what happened to her
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X