விபூதியை தவிர்த்த சியான் விக்ரம்! இது ஒரு பிரச்சினையாங்க? ‘சைக்கோத்தனம்’ பொங்கியெழும் நெட்டிசன்கள்!
சென்னை : 'சியான் 61' படத்தின் பூஜையின் போது அர்ச்சகர் புரோகிதர் கொடுத்த விபூதியை நடிகர் விக்ரம் வேண்டாம் என மறுத்ததாக சமூக வலைதளங்களில் சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில், தற்போது இருக்கும் பிரச்சனைகளில் இதுதான் முக்கியமா எனவும், அது அவரது தனிப்பட்ட விருப்பம் என பலரும் நடிகர் விக்ரமுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். 1990-ல் வெளியான 'என் காதல் கண்மணி' படத்தின் மூலம் தமிழ்த் திரை ரசிகர்களுக்கு அறிமுகமானவர்.

நடிகர் விக்ரம்
இயக்குநர் பாலாவின் 'சேது' அவருக்கு திரை வாழ்வில் திருப்பு முனையாக இருந்தது. அந்த படம் தொடங்கி பல்வேறு படங்களில் மிக மிக வித்தியாசமான கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். குறிப்பாக பிதாமகன் விக்ரமின் வாழ்க்கையில் ஒரு மைல்கல் எனலாம்.

வித்தியாசம்
தொடர்ந்து சங்கர் ஹரி என பலரது இயக்கங்களின் வெற்றிக்கொடி நாட்டி வந்த விக்ரம் சாமி, தில், தூள், பிதாமகன், ஐ, உள்ளிட்ட பல படங்களில் தனது வித்தியாசமான மற்றும் அதிரடி நடிப்பின் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்தார், படத்துக்கு படம் மாறுபட்ட உடலமைப்பு கேரக்டர்களில் வித்தியாசம் காட்டி வந்த அவரை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்.

பா.ரஞ்சித்
கடந்த சில வருடங்களாக அவர் நடித்த படங்கள் அவ்வளவாக கைகொடுக்காத நிலையில், இயக்குனர் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' மற்றும் 'கோப்ரா' ஆகிய படங்கள் அடுத்தடுத்த வெளியாக இருக்கின்றன. அவற்றை பெரிதும் நம்பியுள்ள விக்ரம், பலத்த மற்றும் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கிடையே மெட்ராஸ், கபாலி உள்ளிட்ட பல இடங்களை இயக்கிய முன்னணி இயக்குனரான பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.

விக்ரம் 61
'விக்ரம் 61' என்ற அடைமொழியோடு இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பூஜையுடன் தொடங்கியது. மேலும் விக்ரம் முதன்முறையாக ப.ரஞ்சித் கூட்டணியில் இணைவதோடு, இந்த பா.ரஞ்சித்துடன் முதன் முறையாக இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விபூதி
இந்நிலையில் பட பூஜையில் நடிகர் விக்ரம், இயக்குனர் பா ரஞ்சித், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், நடன இயக்குநர் மாஸ்டர் சாண்டி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட நிலையில், பூஜையில் கலந்துகொண்ட அனைவருக்கும், அர்ச்சகர் மாலை அணிவித்து விபூதி வழங்கினார். அப்போது நடிகர் விக்ரமுக்கும் அவர் விபூதி வழங்க அதனை வேண்டாம் என டீசன்டாக மறுத்துவிட்டார். இதேபோல இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாசும் விபூதி வேண்டாம் என தெரிவித்த நிலையில் நடன இயக்குனர் சாண்டி மற்றும் தனக்கு விபூதி வைத்து விடுமாறு கேட்டார்.

இது தான் பிரச்சனையா ?
தற்போது இந்த வீடியோவை வைத்து பலரும் விக்ரமை கடுமையாக விமர்சித்து வருவது தான் சமூக வலைதளங்களில் பேசி பொருளாகியுள்ளது. நடிகர் விக்ரம் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர் என்பதால் விபூதியை தவிர்த்து விட்டதாக விளக்கம் அளித்து வரும் நிலையில், சிலர் விடாமல் இது குறித்து பேசி வருகின்றனர். எந்த மதமாக இருந்தாலும் விபூதி வைத்துக் கொள்வதும் வைத்துக் கொள்ளாததும் அவரவர் இஷ்டம் தங்கள் நினைப்பதை தான் மற்றவர்கள் செய்ய வேண்டும் என்பது சைக்கோ தனமானது. நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும் போது விக்ரம் விபூதி வைக்காதது தான் பிரச்சனையா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications