வீட்டுக்கு வரும் கத்தார்.. தமிழக அமைச்சரின் “குட் நியூஸ்”! அரசு கேபிளில் கால்பந்து உலகக்கோப்பை ஃப்ரீ
சென்னை: கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடர் போட்டியை அரசு கேபிளில் இலவசமாக பார்க்க ஸ்போர்ட் 18 சேனலை கூடுதல் கட்டணம் செலுத்தாமல் பார்க்கலாம் என அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்து உள்ளார்.
ஆனால், இந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரை தொலைக்காட்சியில் இலவசமாக பார்க்க முடியவில்லை என பலரும் வருத்தம் தெரிவித்து வந்தனர்.
உலகக்கோப்பை கால்பந்து தொடரை இந்தியாவில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான உரிமத்தை வியாகாம் நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் 18 நிறுவனம் பெற்று இருக்கிறது.

தனியார் தொலைக்காட்சி
அதன் தொடர்ச்சியாக ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியில் கால்பந்து தொடர்போட்டி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், டென் ஸ்போர்ட்ஸை சப்ஸ்கிரைப் செய்து வைத்து இருக்கும் கேபிள் டிவி சந்தாதாரர்களால் உலகக்கோப்பை தொடரை கண்டுகளிக்க முடியவில்லை.

மகிழ்ச்சி செய்தி
கேபிள்களிலும் டிடிஎச்களிலும் இந்த தொலைக்காட்சியை பார்க்க சிறப்பு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் அரசு கேபிளை பயன்படுத்தி வரும் கால்பந்து ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை தற்போது வெளியிட்டு இருக்கிறது தமிழ்நாடு அரசு.

அமைச்சர் மனோ தங்கராஜ்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள தமிழ்நாடு தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், "தமிழ்நாட்டில் பெருகிவரும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு நற்செய்தி. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களின் கோரிக்கையை ஏற்று, கத்தாரில் நடைபெற்று வரும் FIFA WORLD CUP 2022 கால்பந்து போட்டிகளை அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் SPORTS 18 சேனலில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி கண்டுகளிக்கலாம்." என்று பதிவிட்டு இருக்கிறார்.

பிபா உலகக்கோப்பை
உலகில் அதிக நாடுகளால் விளையாடப்படும் விளையாட்டாக கால்பந்து உள்ளது. அதே அதிக பணம் புழங்கும் விளையாட்டும் கால்பந்துதான். அந்த வகையில் பிபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இதனை விளையாட்டு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு கண்டுகளிப்பார்கள்.

கத்தார் உலகக்கோப்பை
தற்போது 2022 பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் அரேபிய நாடான கத்தாரில் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் அங்கு நடந்து முடிந்து உள்ளது. தற்போது 32 அணிகளுக்கு இடையேயான குரூப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

8 குழுக்கள்
குரூப் ஏவில் கத்தார், ஈகுவடா, செனெகல், நெதர்லாந்து அணிகள் இடம்பெற்று உள்ளன. இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ் அணிகள் பி பிரிவிலும், சி பிரிவில் அர்ஜெண்டினா, சவூதி அரேபியா, மெக்சிகோ, போலந்து அணிகளும், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனீசியா அணிகள் டி பிரிவிலும் உள்ளன.

32 அணிகள்
குரூப் இ-யில் ஸ்பெயின், கோஸ்டா ரிகா, ஜெர்மனி, ஜப்பான் அணிகளும், பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரேஷியா ஆகிய அணிகள் குரூப் எஃப் பிரிவிலும், ஜி குரூப்பில் பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன் ஆகிய அணிகளும், போர்சுகல், கானா, உருகுவே, தென் கொரியா ஆகிய அணிகள் எச் பிரிவிலும் இடம்பெற்று உள்ளன.

உள்கட்டமைப்பு
உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கு கடந்த 12 ஆண்டுகளில் 8 கால்பந்து மைதானங்கள், நெடுஞ்சாலைகள், நட்சத்திர விடுதிகள், விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் சேவை, சுரங்க பாதைகள் என பல்வேறு உள்கட்டமைப்புகளை அமைத்து நாட்டையே மாற்றி இருக்கிறது கத்தார் அரசு. இதற்காக 220 பில்லியன் டாலர்களை அந்நாட்டு அரசு செலவிட்டு இருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications