தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.. மொத்தம் 6.20 கோடி வாக்காளர்கள்..சோழிங்கநல்லூர் தொகுதி டாப்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் மொத்தமாக 6.20 கோடி வாக்காளர்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 3.15 கோடி பெண் வாக்காளர்களும், 3.04 கோடி ஆண் வாக்காளர்களும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் 1-ம் தேதியை வாக்காளராக தகுதிப்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
அதற்கு வசதியாக கடந்த நவம்பர் 9ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார். அந்த வாக்காளர் பட்டியலில் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர்.
அவர்களில் 3.03 கோடி ஆண்களும், 3.14 கோடி பெண்களும், 7 ஆயிரத்து 758 மூன்றாம் பாலினத்தவரும் அடங்குவர். இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பது, விவரங்களைத் திருத்துவது, நீக்கம் செய்வது உள்ளிட்ட பணிகளுக்காக ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டது.

சிறப்பு முகாம்
இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதுமட்டுமல்லாமல் 17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததிருந்தது. அவா்களின் பெயர் 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிடும். அதேபோல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக சிறப்பு விண்ணப்பமும் வெளியிடப்பட்டது.

தீவிரமான பணிகள்
தொடர்ந்து, டிசம்பர் 8 வரை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்றன. வாக்காளர் பட்டியலில் பெயா் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டன. இதன்பின்பு, இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்தன.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
இந்தப் பட்டியல் தயாரான நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மாநில அளவிலான வாக்காளர் எண்ணிக்கை விவரங்களை தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் மொத்தமாக 6.20 கோடி வாக்காளர்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 6.20 கோடி வாக்காளர்கள்
அதில் 3.15 கோடி பெண் வாக்காளர்களும், 3.04 கோடி ஆண் வாக்காளர்களும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதியாக சோழிங்கநல்லூர் தொகுதியும், குறைந்த வாக்காளர்கள் உள்ள தொகுதியாக துறைமுகம் தொகுதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 3.82 கோடி வாக்காளர்களின் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இனியும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தவும் வாய்ப்பு உள்ளது என்று தமிழக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications