சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பாகற்காய் என்ன விலைங்க" மைலாப்பூர் மார்கெட்டில் பார்த்து பார்த்து காய்கறி வாங்கிய நிர்மலா சீதாராமன்

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோ இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இப்போது தமிழகம் வந்து உள்ளார். அவர் இப்போது சென்னையில் உள்ளார்.

இதனிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோவை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

திமுக நாகரீக அரசியல் செய்வதால்.. ஸ்டாலின் புகழ் நாடு முழுக்க விஸ்வரூபம் எடுத்துள்ளது! டிஆர்பி ராஜாதிமுக நாகரீக அரசியல் செய்வதால்.. ஸ்டாலின் புகழ் நாடு முழுக்க விஸ்வரூபம் எடுத்துள்ளது! டிஆர்பி ராஜா

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

சென்னை வந்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மைலாப்பூர் மார்கெட்டில் காய்கறி வாங்கினார். அங்கிருந்த காய்கறி வியாபாரிகள் உடனும் அவர் கலந்துரையாடினார். மேலும், அங்குச் சிலர் காய்கறி வாங்க வந்திருந்த நிலையில், அவர்கள் உடனும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தார். இது தொடர்பான வீடியோவை தான் அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.

பாகற்காய்

பாகற்காய்

அந்த வீடியோவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அங்கிருந்து சர்க்கரை வள்ளிக் கிழங்குகளை வாங்குவது தெரிகிறது. மேலும், அவர் அங்கிருந்த சில பாகற்காய்களையும் வாங்கி உள்ளார். இது தொடர்பான படங்களையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அது இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவுக்கு பலரும் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்தியப் பொருளாதாரம்

இந்தியப் பொருளாதாரம்

முன்னதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சென்னையில் சிறப்புக் குழந்தைகளுக்கான மையத்தைத் திறந்து வைத்ததது குறிப்பிடத்தக்கது. மற்ற வளரும் நாடுகளைப் போலவே இந்தியா பொருளாதாரமும் கொரோனா பரவலுக்கு பின் இப்போது சிக்கலை எதிர்கொண்டு உள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாகவே பணவீக்கம் அதிகமாக உள்ளது. இந்த பணவீக்கத்திற்குக் காய்கறி விலையும் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

பணவீக்கம்

பணவீக்கம்

இந்தியாவில் இப்போது சில்லறை பணவீக்கம் அதிகமாக உள்ளது. ரிசர்வ் வங்கியின் கொள்கைப்படி நாட்டின் பணவீக்கம் 6 சதவிகிதத்தைத் தாண்டி இருக்கக் கூடாது. ஆனால், கடந்த ஓராண்டாகவே அது 6ஐ தாண்டியே உள்ளது. குறிப்பாகக் கடந்த மாதம் இது 7 சதவீதத்திற்கு மேல் சென்றது. உணவு மற்றும் காய்கறிகளின் விலைகள் மேலும் அதிகரித்தால் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்று பன்னாட்டு நிதி நிறுவனமான டாய்ச் வங்கியின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடவடிக்கை தேவை

நடவடிக்கை தேவை

இது தொடர்பாகப் பொருளாதார வல்லுநர் கௌசிக் தாஸ் சில நாட்களுக்கு முன்பு கூறுகையில், "கடந்த மாதம் நுகர்வோர் பணவீக்கம் 7.4ஆக உள்ளது. முன்பு ஆகஸ்ட் மாதம் இது அதிகபட்சமாக 7ஐ எட்டிய நிலையில், செப் மாதம் அதையும் தாண்டி உள்ளது. எனவே பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறி இருந்தார்.

English summary
Finance Minister Nirmala Sitharaman buys vegetagles with in Mylapore market: Nirmala Sitharaman latest in in Mylapore market.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X