Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காசிமேட்டில் காற்றோடு வந்த மீன் வரத்து! வஞ்சிரம் இறால் மீன் ஜோர்! சென்னை, திண்டுக்கல் ரேட் சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காசிமேடு சென்னை நகரின் மிகப்பெரிய மீன் மையமாகும்,,, தினமும் அதிகாலை முதல் மீன்கள் வரத்து தொடங்கும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை வரும்போது, மற்ற நாட்களை விட சிறிய மாற்றங்கள் இருக்கும். அந்தவகையில் இன்று விற்பனையான மீன்கள் விலைகளை பற்றி பார்ப்போம்,

ஞாயிற்றுக்கிழமையில் மீன்கள் வரத்து சற்றுக் குறைவாகவே இருக்கும். காரணம், சில விசைப்படகுகள் மற்றும் இயந்திரப் படகுகள் ஞாயிற்றுக்கிழமை கடலுக்கு செல்லாமல் ஓய்வு எடுப்பது. அதனால் அதிக அளவில் மீன் பிடிப்பு இருக்காது. இருந்தாலும் நண்டு, வஞ்சிரம், சங்கரா, சூறை, கேரை, நெய் மீன் போன்ற சில வகை மீன்கள் வரத்து இருக்கும்.

காசிமேடு மீன் விலை

வியாபாரம் குறித்து பார்க்கும்போது, மொத்த வியாபாரம் (wholesale) அதிகாலை நேரத்தில் நடக்கும். ஞாயிற்றுக்கிழமை என்பதால் சில மொத்த வியாபாரிகள் மட்டும் வருவார்கள். ஹோட்டல், கடைகள் குறைவாக ஆர்டர் செய்வதால் மொத்த வியாபாரம் சாதாரண அளவிலேயே இருக்கும்.

சில்லறை விற்பனை ஞாயிற்றுக்கிழமை நல்ல அளவில் இருக்கும். விடுமுறை நாள் என்பதால் குடும்பத்துடன் மீன் வாங்க வருபவர்கள் அதிகம். காலை 6 மணி முதல் 10 மணி வரை கூட்டம் இருக்கும். மதியம் கடந்ததும் விற்பனை குறைய ஆரம்பிக்கும்.

விலை நிலவரம் வரத்தைப் பொறுத்து மாறும். வரத்து குறைவாக இருந்தால் விலை சற்றே அதிகமாக இருக்கும். ஆனால் சில்லறை வாங்குபவர்கள் அதிகம் என்பதால் வியாபாரிகள் விலையை அதிகமாக வைத்துக் கொள்ளும் வாய்ப்பும் உண்டு.

சென்னை மீன்கள்

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் கடந்த வாரம் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பின. இதனால் மீன்களின் வரத்து கணிசமாக அதிகரித்தது. குறிப்பாக, கானாங்கத்த மீன் அதிக அளவில் கிடைத்ததால், அதன் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்ட கானாங்கத்த மீன், நேற்று ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது. வரத்து அதிகரித்ததே இந்த விலை குறைவுக்கு முக்கிய காரணமாகும்.

கானாங்கத்த மீன் மட்டுமின்றி, வஞ்சிரம், சங்கரா, நெத்திலி, வாளை, கடம்பா உள்ளிட்ட பல்வேறு மீன் வகைகளின் வரத்தும் சற்று அதிகமாக இருந்தது. இதனால் கடந்த வாரங்களை ஒப்பிடுகையில் மீன்களின் விலை மிதமான அளவில் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

காசிமேட்டில் கடந்த வாரம் நிலவிய மீன் விலை நிலவரம்:

வஞ்சிரம் கிலோ ரூ.800 முதல் ரூ.900 வரை,

கறுப்பு வவ்வால் ரூ.800–900,

வெள்ளை வவ்வால் ரூ.900–1000,

பாறை மீன் ரூ.500–600,

சங்கரா ரூ.300–400,

நெத்திலி ரூ.300–400,

வாளை ரூ.100–200,

கடம்பா ரூ.300–400,

நண்டு ரூ.350–400,

வரி நண்டு ரூ.500–600,

இறால் ரூ.250–400,

டைகர் இறால் ரூ.800–900 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

குவிந்த மீன் பிரியர்கள்

இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன்களின் வரத்து மேலும் அதிகமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக சில்லறை விற்பனையில் சில மீன் வகைகளின் விலை மேலும் சற்று குறைந்ததாக கூறப்படுகிறது.

அதன்படி, இன்று வஞ்சிரம் கிலோ ரூ.800-க்கும், சங்கரா கிலோ ரூ.400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், இறால் கிலோ ரூ.300-க்கும், பால் சுறா கிலோ ரூ.500-க்கும் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பொதுமக்கள் அதிகளவில் மீன் வாங்க வந்ததால், காசிமேடு பகுதியில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

திண்டுக்கல் மார்க்கெட்

இதனிடையே, திண்டுக்கல் மாவட்டத்திலும் இன்று (டிசம்பர் 28) இறைச்சி மற்றும் மீன் வகைகளின் விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அங்கு ஆட்டிறைச்சி கிலோ ரூ.800 முதல் ரூ.1000 வரையிலும், பிராய்லர் கோழி இறைச்சி ரூ.150 முதல் ரூ.210 வரையிலும், நாட்டு கோழி இறைச்சி ரூ.350 முதல் ரூ.500 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் நண்டு ரூ.400, இறால் ரூ.300, கணவாய் ரூ.400 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பொடி மீன்கள் கிலோ ரூ.150 முதல், பெரிய ரக மீன்கள் கிலோ ரூ.500 வரை விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மொத்தத்தில், மீன் வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்களுக்கு விலை சற்று நிம்மதியான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+