சென்னை கடலில் மூழ்கிய 3 பேரை மீட்ட மீனவர்கள்! கரைக்கு வந்தபோது சட்டென கவிழ்ந்த படகு.. பெண் பலி
சென்னை: சென்னை எண்ணூர் கடலில் ராட்சத அலையில் சிக்கி தண்ணீக்குள் இழுத்து செல்லப்பட்ட 3 பேரை மீனவர்கள் படகில் மீட்டு கரை திரும்பினர். அப்போது எதிர்பாரத விதமாக பைபர் படகு கவிழ்ந்தது. இருப்பினும் 3 பேரை மீனவர்கள் மீட்ட நிலையில் பெண் ஒருவர் பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை எண்ணூரில் இன்று திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதற்காக கடலூர் மாவட்டம் விருதாச்சலம் மங்களம் பேட்டையை சேர்ந்த 400 பேர் வந்திருந்தனர். இன்று காலை திருமணம் நடந்தது.
இதையடுத்து திருமண விழாவுக்கு வந்தவர்கள் சென்னை கடற்கரைக்கு சென்றனர். சென்னை எண்ணூர் ராமகிருஷ்ணா கடற்கரைக்கு அவர்கள் சென்றனர்.
கர்நாடக அரசின் பத்திரிகை விளம்பரங்களில் சாவர்க்கர்.. நேரு போட்டோ இல்லை.. வெடித்த சர்ச்சை!

கடலில் மூழ்கிய 3 பேர்
திருமண விழாவுக்கு வந்தவர்களில் 50க்கும் அதிகமானவர்கள் கடற்கரைக்கு சென்றனர். அப்போது சிலர் கடலில் இறங்கி ஆரவாரமாக குளித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக 2 சிறுவர்கள் மற்றும் 48 வயது நிரம்பிய சகினா பி என்ற பெண் ஆகியோர் ராட்சத அலையில் சிக்கினர். இதனால் அவர்கள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். தண்ணீரில் தத்தளித்தபடி உயிருக்கு பேராடினர்.

பைபர் படகில் மீட்பு
இதையடுத்து கடற்கரையில் நின்று கொண்டிருந்த உறவினர்கள் அலறினர். இதையடுத்து மீனவர்கள் தங்களது பைபர் படகுகளில் சென்று உயிருக்கு போராடி கொண்டு இருந்த இரண்டு சிறுவர்கள், சகினா பி ஆகியோரை மீட்டனர். இதையடுத்து அவர்களுடன் பைபர் படகில் கரைக்கு திரும்பினர்.

கவிழ்ந்த படகு- பெண் பலி
இந்த வேளையில் ராட்சத அலையில் சிக்கிய பைபர் படகு கவிழ்ந்தது. இதனால் மீண்டும் 2 இருவர்கள், ஒரு பெண் ஆகியோர் தத்தளித்தனர். இருப்பினும் அவர்களை மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சகினாபி-க்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி எண்ணூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

4 பேரை மீட்கும் பணி
இதேபோன்று சென்னை கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகரை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆட்டோவில் வந்து திருவொற்றியூர் பலகை தொட்டி தொட்டி குப்பம் பகுதியில் கடலில் குளித்தனர். அப்போது நான்கு பேர் மாயமாகினர். தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் மெரினா நீச்சல் வீரர்கள் அவர்களை தேடுவருகின்றனர். ஒரே நாளில் அடுத்தடுத்து நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.