தெற்கு ரயில்வேயில் எக்ஸ்பிரஸ் ரயில்களில் உணவு விலை உயர்வு! இன்று முதல் புதிய விலை அமல்!
தெற்கு ரயில்வேயின் கீழ் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் உணவு விலைப்பட்டியல் மாற்றம்
சென்னை: தெற்கு ரயில்வேயில் எக்ஸ்பிரஸ் ரயில்களில் உணவு விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் புதிய விலை அமலுக்கு வருகிறது.
புளி சாதம், எலுமிச்சை சாதம் ரூ.50 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளதுடன் 2 மெதுவடை சட்னியுடன் வாங்கினால் ரூ.30 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது இதுவரை 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு வடை 15 ரூபாயாக மாற்றப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

உயர்த்தப்பட்ட உணவு வகைகளின் விலை விவரம் வருமாறு:-
2 இட்லி ரூ.20
2 சப்பாத்தி ரூ.20-
பிரெட் சான் வெட்ஜ் ரூ.20,
2 போண்டா சாஸ் உடன் ரூ.20,
2 சமோசா சாஸ் உடன் ரூ.20,
2 மெதுவடை அல்லது பருப்பு வடை சட்னியுடன் தலா ரூ.30
குளிர், சூடான பால் தலா ரூ.20,
ரவா, கோதுமை, சேமியா உப்புமா தலா ரூ.30,
ஆனியன், ரவா ஊத்தாப்பம் தலா ரூ.30,
மசாலா தோசை ரூ.50,
புளி, எலுமிச்சை, தயிர், தேங்காய் சாதம் தலா ரூ.50,
பன்னீர் பக்கோடா ரூ.50,
வெஜ் பர்கர் ரூ.50,
வெஜ் நூடுல்ஸ் ரூ.50,
வெஜ் பிரைடு ரைஸ் ரூ.80-,
பன்னீர் சில்லி, மஞ்சூரியன் தலா ரூ.100,
பன்னீர் கிரேவி ரூ.100 என்ற புதிய விலையில் விற்பனை செய்யப்படும்..
இதேபோல 2 அவித்த முட்டை ரூ.30,
சிக்கன் சான்வெட்ஜ் ரூ.50,
முட்டை கிரேவி ரூ.50,
எக் பிரைடு ரைஸ், நூடுல்ஸ் தலா ரூ.90,
சிக்கன் 65 100 கிராம் தலா ரூ.100
இனிப்பு வகைகளில் ஜிலேபி ரூ.20,
குலோப் ஜாமுன் ரூ.20,
கேசரி ரூ.20,
மேற்கண்ட விலை உயர்வு தெற்கு ரயில்வேயின் கீழ் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு மட்டுமே பொருந்தும். ரயில் நிலையங்களில் உள்ள கடைகளில் எந்த விலை உயர்வும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications