சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அன்னிய செலாவணி மோசடி வழக்கு.. எழும்பூர் கோர்ட்டில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜர் ஆன சசிகலா!

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜர் ஆனார்.

Google Oneindia Tamil News

சென்னை: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜர் ஆனார்.

சொத்து குவிப்பு வழக்கில் தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இவர் மீது இன்னும் சில வழக்குகள் வேறு வேறு நீதிமன்றத்தில் உள்ளது.

Foreign exchange fraud case: Sasikala appears through Video call in Egmore court

அதேபோல் அன்னிய செலாவணி மோசடி செய்ததாக சசிகலா மீது சென்னை ஹைக்கோட்டில் 2 வழக்குகள் உத்தரவு.

ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து எலக்ட்ரானிக் உபகரணங்கள் வாங்கியதில் சசிகலா, பாஸ்கரன் இருவரும் அந்நிய செலாவணி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் மீது அமலாக்கத்துறை ஐந்து வழக்குகளை பதிவு செய்துள்ளது.

சசிகலா, பாஸ்கரன் ஆகியோருக்கு சேர்த்து 3 வழக்குகளும். இருவர் மீதும் தனி தனியாக 2 வழக்குகள் வேறு வழக்குகளும் தொடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கில்தான் இன்று சசிகலா சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜர் ஆனார். அவர் பெங்களூர் சிறையில் இருப்பதால் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜர் ஆனார். எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி முன்பு அவர் தனது வாக்குமூலத்தை ஆடியோ மூலம் பதிவு செய்தார்.

ஆனால் நீதிபதி மலர்மதி கேட்ட பல கேள்விகளுக்கு இல்லை, தெரியாது, நினைவில் இல்லை, தொடர்பு இல்லை என்பது போன்ற பதில்களை மட்டுமே சசிகலா அளித்துள்ளார். அதன்பின் கடைசியாக அமலாக்கத்துறை குறுக்கு விசாரணைக்கு மட்டும் சசிகலா ஒப்புக்கொண்டார்.

இந்த வழக்கு ஜனவரி 9ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. ஜனவரி 9ம் தேதி நடக்கும் விசாரணையின் போது சசிகாலாவை நேரில் ஆஜர்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

English summary
Foreign exchange fraud case: Sasikala appears through Video call in Egmore court from Bangalore jail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X