"விரைவில் எல்லா கட்டணத்தை உயர்த்த போறங்க.. அதுக்கு தான் இந்த வெள்ளை அறிக்கை.." பாயும் ஜெயக்குமார்
சென்னை: திமுக ஆட்சியில் பெறப்பட்ட கடனுக்கு அதிமுக ஆட்சியில் வட்டி கட்டியதாகத் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாட்டின் கள நிலவரம் தெரியாமல் படித்துவிட்டு மட்டும் வந்து ஆட்சி செய்தால் சரியாக இருக்காது என்றும் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து மக்கள் அறியும் வகையில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.
அதிமுக ஆட்சியில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதற்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

வெள்ளை அறிக்கை ஏன்
இது குறித்து முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறுகையில், "ஆகஸ்ட் 13ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பொதுவாக வெள்ளை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்வதுதான் மரபு. பட்ஜெட்டுக்கு ஒரு சில நாட்கள் இருக்கும் சூழ்நிலையில் இப்போது வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டிய சூழ்நிலை வந்துள்ளது என்றால் ஒரு விஷயம் நன்றாகத் தெரிகிறது. அதாவது தேர்தல் காலத்தில் ஏகப்பட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளார்கள். இதனை நிறைவேற்ற முடியாததாலேயே இப்படிச் செய்கிறார்கள்.

முரண்பாடுகள் உள்ளன
ஒரு வெள்ளை அறிக்கையைத் தாக்கல் செய்து அடுத்தவர்கள் மீது பழிபோடுவது, நாங்கள் அனைத்தையும் செய்யவேண்டும் என்றுதான் நினைத்தோம். ஆனால் வேறு வழியில்லை என்று சொல்லிவிட்டு பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இதன் மூலம் மக்களைத் திசை திருப்பும் வேலையாகத்தான் இதனை நிச்சயமாகப் பார்க்க முடியும். அந்த அறிக்கையில் நிறைய முரண்பாடுகள் உள்ளது.

ஜெயலலிதா ஆட்சி
திமுக ஆட்சியில் 2010 -11ல் மாநில வருவாய் விகிதம் 8.17 சதவீதம். அதே எங்கள் ஆட்சிக் காலத்தில் இது 8.34 சதவீதமாக இருந்தது. 8.17 பெரியதா, 8.34 பெரியதா? 2006-2011 வரை ஏற்பட்ட பிரச்சினைகள் இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அப்படி எடுத்திருந்தால் ஜெயலலிதாவின் ஆட்சியில் எவ்வாறு அனைத்தையும் சரிசெய்தோம் என்பது தெரியவந்திருக்கும். இதைச் செய்யாமல் உள்நோக்கத்தோடு அடுத்தவர் மீது பழிபோட்டுத் தப்பிக்கும் விஷயமாக அதைச் செய்திருக்கிறார்கள். இப்படி அனைத்து தரவுகளையும் உள்ளடக்கி வெள்ளை அறிக்கை வெளியிட்டிருந்தால் வெள்ளை மனம் கொண்டவர்கள் என்று நிச்சயமாகப் பாராட்டி இருக்க முடியும்.

கட்டணத்தை ஏற்றப்போகிறார்கள்
மக்களைத் திசை திருப்பும் வேலையை திமுக செய்கிறது. எங்கள் அரசு மக்கள் நலன் காத்த அரசு. மக்களின் நாடிதுடிப்பை அறிந்தால்தான் மக்கள் அரசாக நல்ல ஆட்சியைத் தர முடியும். சும்மா படித்துவிட்டு வந்து கள நிலவரம் தெரியாமல் ஆட்சி செய்தால் அது எப்படிச் சரியாக இருக்கும். அதிமுக ஆட்சியில் பேருந்து கட்டணத்தை ஏற்றவில்லை. மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்று அவர் ஒத்துக்கொள்கிறார். அப்படி என்றால் இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள். நாங்கள் விலையை ஏற்ற போகிறோம் என்று சொல்கிறாரா?

வட்டி கட்டினோம்
50 ஆயிரம் கோடி அளவுக்குக் கடன் வாங்கும் நிலையில்தான் நாங்கள் மாநிலத்தை வைத்துவிட்டுச் சென்றுள்ளோம். .கடன் இனிமேல் வாங்க முடியாத அளவுக்கு எதுவும் இல்லை.திமுக ஆட்சியில் 1 லட்சம் கோடி கடன் வாங்கினார்களே. இதற்கு யார் வட்டி கட்டுவது. அதற்கும் நாங்கள்தானே 10 வருடம் வட்டி கட்டினோம். அன்று இருந்த மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் என்ன? இன்றைக்கு இருக்கும் மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் என்ன. ஒவ்வொரு முறையும் நிதிநிலை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யும்போது அதில் எல்லா விஷயங்களையும் குறிப்பிடுகிறோம். இவர் ஏதோ புது விஷயத்தை வெளியிட்டதுபோல காண்பிக்கிறார். மக்களைத் திசை திருப்புகிறார்" என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications