சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏப்ரல் 10 முதல் கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லரை வியாபாரத்திற்கு தடை விதிப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லறை வியாபார காய்கனி அங்காடிகள் மட்டும் செயல்பட தடை விதிக்கப்படுகிறது என தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Recommended Video

    மீண்டும் Lockdown? தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள்.. முழு விவரம் | Oneindia Tamil

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறுகையில், இந்தியாவில் மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா, சத்தீஸ்கர், டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

    From April 10, Ban in Koyambedu market for Retail traders

    அது போன்று தமிழகத்திலும் சில மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நோய் தொற்றைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கு முற்றிலுமாக தடை விதிப்பதும் ஒரு சில செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிப்பது அவசியமாகிறது.

    எனவே மறு உத்தரவு வரும் வரை கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

    மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால் இதற்கான தடை தொடரும்.

    தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

    நோய் பரவலைக் கருத்தில் கொண்டு திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது.

    ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லறை வியாபார காய்கனி அங்காடிகள் மட்டும் செயல்பட தடை விதிக்கப்படுகிறது. அதே போன்று மாவட்டங்களில் உள்ள வியாபார காய்கனி வளாகங்களில் சில்லறை வியாபார கடைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

    ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியாபார காய்கனி அங்காடிகள் மட்டும் செயல்பட தடை விதிக்கப்படுகிறது என தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறுகையில், இந்தியாவில் மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா, சத்தீஸ்கர், டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

    English summary
    From April 10, Ban in Koyambedu market for Retail traders, announces Tamilnadu Government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X