தொடர் கனமழை.. விவசாயிகளுக்காக இதை நீங்க செஞ்சே ஆகணும்.. ஸ்டாலினுக்கு, ஜி.கே.வாசன் கோரிக்கை!
சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சிரமங்களை கவனத்தில் கொண்டு பயிர்க்காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழக அரசு - விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15ஆம் தேதி கடைசித் தேதி என்பதை மழைக்கால சிரமத்தைக் கவனத்தில் கொண்டு நவம்பர் 30ஆம் தேதி வரை பயிர்க் காப்பீடு செய்யக் கால நீட்டிப்பு வழங்க வேண்டும்.தமிழக விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்வதற்கான காலத்தை நீட்டிக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்.

இப்பருவத்திற்கான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் ராபி பருவ வேளாண் பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கு கடைசி நாள் நவம்பர் 15-ம் தேதி. அதாவது நவம்பர் 15ஆம் தேதிக்குள் பாசிப் பயிறு, உளுந்து பயிர் மற்றும் சம்பா நெற்பயிர்களுக்குக் காப்பீடு செய்தால் விவசாயிகளுக்குப் பயன் கிடைக்கும்.தற்போது பெய்து வரும் பருவமழை, கனமழை ஆகியவற்றால் விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் அதிக நஷ்டத்தில் இருக்கின்ற காரணத்தால் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மழை பெய்யும் இவ்வேளையில் விவசாயிகள் பயிர்க் காப்பீடு சம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலரைச் சந்தித்து அடங்கல் வாங்குவதும் சிரமமானது. இந்நிலையில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்யாத விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெற்பயிரை 2021 நவம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு வேளாண்துறை அறிவித்தது. தற்போதைய சூழலில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளுக்குச் சாதகமானதாக இருக்காது.
தமிழகத்தில் கனமழை பெய்யும் இக்காலத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும். எனவே தமிழக அரசு, விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15ஆம் தேதி கடைசித் தேதி என்பதை மழைக்கால சிரமத்தைக் கவனத்தில் கொண்டு நவம்பர் 30ஆம் தேதி வரை பயிர்க் காப்பீடு செய்ய கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications