உளவுப் பிரிவு காவலரை காரில் கடத்திய கும்பல்; மிரட்டி "கூகுள் பே" மூலம் ரூ.1 லட்சம் பறிப்பு
சென்னை: சென்னையில் உளவுப்பிரிவு காவலரை காரில் கடத்தி சென்று மயக்க ஊசி்போட்டு, ஒரு லட்சம் பணம் பறித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சூளைமேடு பஜனை கோயில் தெருவில் வசிப்பவர் ரவி (45), டிஜிபி அலுவலகத்தில் உளவுப்பிரிவு தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று தனது வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு பணிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அப்போது அவருக்கு தெரிந்த நபரான அஜய் விக்கி என்பவர், "காரில் லைட் ஹவுஸ் பக்கம் தான் செல்கிறேன்.. வாருங்கள்... உங்களை அங்கு விட்டு விடுகிறேன்.." என கூறியதால், காரில் ஏறியுள்ளார். கார் சிறிது தூரம் சென்றதும், காரில் மேலும் இரண்டு பேர் ஏறியுள்ளனர்.

கையில் ஊசி
கார் சென்று கொண்டிருக்கும் போதே இருவரும் வலுக்கட்டாயமாக ரவியை பிடித்து கையில் ஊசி போட்டதாகவும், கார் சோழிங்கநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்ததாகவும் வழியில் ரவியை தாக்கிய அவர்கள் அரைமயக்க நிலையில் இருந்த அவரிடமிருந்து செல்போனை பிடுங்கி கொண்டு காவலர் ரவியின் அக்கவுண்டில் இருந்து கூகுள் பே மூலம் ஒரு லட்ச ரூபாய் பணத்தை பறித்துள்ளனர்.

காவல்துறையில் புகார்
பிறகு, காவலர் ரவியை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சோழிங்கநல்லூர் அருகே சாலையோரத்தில் தள்ளிவிட்டு சென்றுள்ளனர். மயக்கம் தெளிந்து கண் விழித்த காவலர் ரவி, நேற்றிரவு நுங்கம்பாக்கம் வந்து காவல் உதவி ஆணையரை சந்தித்து இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

சிசிடிவி காட்சிகள்
காவலரை கடத்தி தாக்கியது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை காரில் ஏற்றிய சூளைமேடு பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரிக்கும் பணியில் போலீஸார் இறங்கியுள்ளனர்.

கடத்தல்
கடத்தல் குறித்தும், பணம் பறிப்பு குறித்தும் தீவிர விசாரணைநடப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவலர் ரவியை கடத்தியது தெரிந்த நபர் என்பதால் அவரை பிடிக்கும் பணியிலும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். தெரிந்த நபரைக் கடத்தி பணம் பறித்த நோக்கம் என்ன என்று காவலர் ரவியிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் உளவுப்பிரிவு காவலர் ஒருவரே கடத்தப்பட்டு அவரிடமிருந்து பணம் பறிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications