கிரைய பத்திரம் பண்ண போறீங்களா? பத்திரப்பதிவு ரூல்ஸ் மாறுது.. யார் யாருக்கு பொருந்தும்: பதிவுத்துறை
சென்னை: பத்திரப்பதிவு சம்பந்தமான புகார்களை பதிவுத்துறைக்கு மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் தெரிவிக்கலாம். லஞ்சம் கேட்பது குறித்த புகாராக இருந்தால், 94984 52110, 94984 52120, 94984 52130 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம். அத்துடன் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம் என்று ஏற்கனவே கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், பத்திரங்களை பதிவு செய்வதில், சார் பதிவாளர்களிடம் குழப்பம் நிலவுவதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.
சார் பதிவாளரால் மறுக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவு பெற்று வரும் பத்திரங்களை தற்காலிக எண் அடிப்படையில் பதிவு செய்ய, புதிய நடைமுறைகளை பதிவுத்துறை பிறப்பித்துள்ளது.

பதிவுத்துறை, பொதுமக்களின் நலன்கருதி பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தருகிறது.. அந்தவகையில், பத்திரப்பதிவு தொடர்பான புகார்களைப் பதிவு செய்ய வேண்டுமானால், பதிவுத்துறை கட்டுப்பாட்டு அறை, வாட்ஸ்அப், தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்கலாம்.
பத்திரப்பதிவு நடைமுறை
அதேபோல, போலி பத்திரப்பதிவு ரத்து கோரி மாவட்ட பதிவாளரிடம் புகார்களை அளிக்கலாம்... சிவில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும்கூட, போலி பத்திரப்பதிவை ரத்து செய்யக் கோரி மாவட்ட பதிவாளரிடம் புகார் அளிக்கலாம் என்று ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் தெளிவுபடுத்தியிருந்தது.
பொதுவாக, வீடு, மனை வாங்குவோர் தாக்கல் செய்யும் கிரைய பத்திரங்களில் ஏதாவது குறைகள் இருந்தால், சார் பதிவாளர்கள் பத்திரங்களை பதிவுக்கு ஏற்க மாட்டார்கள்.. இதுகுறித்து சொத்து வாங்கும் நபர், சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளரிடம் மேல்முறையீடு செய்யலாம். அங்கும் தீர்வு ஏற்படாத நிலையில், கோர்ட்டை நாடலாம். அப்படி கோர்ட்டை நாடும் நிலையில், சம்பந்தப்பட்ட பத்திரங்களை பதிவு செய்ய, நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
பதிவுத்துறை புதிய உத்தரவு
அப்போது, இந்த பத்திரங்களை பதிவு செய்வதில், சார் பதிவாளர்களிடம் குழப்பம் ஏற்படுவதாக தெரிகிறது.. இது தொடர்பாகதான், பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறார். அந்த உத்தரவில் உள்ளதாவது:
"நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் பத்திரங்களை, நிர்வாக மாவட்ட பதிவாளரின் ஆணை பெற்று, அதன் அடிப்படையில், டிஐஜி பரிந்துரை பெற்ற பிறகு, சார் பதிவாளரால் ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும். அதன்பின், திட்ட ஒருங்கிணைப்பாளர் வாயிலாக, கணினியில் அந்த பத்திரம் தொடர்பான விபரங்களை மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
தற்காலிக எண்கள்
இதையடுத்து, ஏற்கனவே பதிவுக்கு மறுக்கும் போது, அந்த பத்திரத்துக்கு அளிக்கப்பட்ட தற்காலிக எண்ணை மீண்டும் ஒதுக்க, சார் பதிவாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பதிவுக்கு தற்காலிக எண் ஒதுக்கப்படாத, தானாக திரும்ப பெறப்பட்ட பத்திரங்களுக்கு, இந்த நடைமுறை பொருந்தாது.
அங்கீகாரமில்லாத மனை தொடர்பான பத்திரங்களுக்கும், இந்த நடைமுறை பொருந்தாது. இந்த நடைமுறைகளை முழுமையாக கடைபிடிக்க, மாவட்ட பதிவாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
-
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே?












Click it and Unblock the Notifications