தங்க நகரம் துபாய்: தங்கம் விலை கம்மியா இருக்க காரணம்? தங்க பிஸ்கட்டுகளில் வரிச்சலுகை பற்றிய உண்மை
சென்னை: துபாய் தங்க நகரம் என்று அழைக்கப்படுவதற்கு என்ன காரணம் தெரியுமா? துபாயில் மட்டும் தங்கம் விலை குறைந்திருக்க என்ன காரணம் தெரியுமா? இதுகுறித்து நிபுணர்கள் சொல்வதென்ன? இவைகளை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!!
துபாய் தங்க நகரம் என்று அழைக்க காரணம், அதன் வெளிப்படையான வர்த்தகக் கொள்கையே முக்கிய காரணம் என்கிறார்கள் நிபுணர்கள்..
இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தங்கம் மீது அதிகப்படியான சுங்க வரி மற்றும் கூடுதல் வரிகள் விதிக்கப்படுகின்றன. ஆனால் துபாயில் தங்கத்திற்கு இறக்குமதி வரி கிடையாது. அங்கு விற்பனை செய்யப்படும் தங்க நகைகள் மீது வெறும் 5% மதிப்பு கூட்டு வரி (VAT) மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

வரிகளே இல்லாத விலையில் தங்கம்
இந்த வரியையும் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் நாடு திரும்பும்போது விமான நிலையத்திலேயே 'VAT Refund' திட்டத்தின் மூலம் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும். இதனால் வரிகளே இல்லாத விலையில் தங்கம் கிடைக்கிறது.. அது மட்டுமல்ல, துபாய் ஒரு சர்வதேச வர்த்தக மையம் என்பதால் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலிருந்து நேரடியாகவும் பெருமளவிலும் தங்கம் அங்கு வருகிறது.
செய்கூலி தள்ளுபடி
இதனிடையே இடைத்தரகர்கள் யாரும் இல்லாததாலும் உலகளாவிய சந்தைப் போட்டி நிலவுவதாலும் செய்கூலி மற்றும் அடிப்படை விலையில் பெரும் தள்ளுபடி கிடைக்கிறது.
இந்தியாவின் பட்ஜெட் 2026-ல் அறிவிக்கப்பட்ட புதிய சுங்க விதிமுறைகளின்படி வெளிநாடுகளில் இருந்து தங்கம் கொண்டு வருவதில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு தங்கம் கொண்டு வருவதற்கு எடையுடன் சேர்த்து அதன் மதிப்பிற்கும் உச்சவரம்பு இருந்தது.
துபாய் தங்கம் விலை
அதாவது ஆண்கள் 20 கிராம் (ரூ. 50,000 வரை) மற்றும் பெண்கள் 40 கிராம் (ரூ. 1 லட்சம் வரை) மட்டுமே கொண்டு வர முடிந்தது. தற்போது தங்கம் விலை உயர்ந்துள்ளதால் இந்த பண வரம்பு நீக்கப்பட்டு எடையை மட்டுமே கணக்கில் கொள்ளும் புதிய முறை அமலுக்கு வந்துள்ளது..
இதன்படி ஒரு ஆண்டுக்கும் மேலாக வெளிநாட்டில் வசித்த இந்தியர்கள் எந்தவிதமான வரியும் இல்லாமல் பெண்கள் 40 கிராம் வரையிலும் ஆண்கள் 20 கிராம் வரையிலும் தங்க நகைகளைக் கொண்டு வரலாம்... அதேபோல 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் 40 கிராம் வரை நகை கொண்டு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.
விலை வித்தியாசம்
இன்று 2026 பிப்ரவரி 11ம் தேதி நிலவரப்படி துபாயில் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் சுமார் 608.50 திர்ஹம் (இந்திய மதிப்பில் சுமார் ₹14,957) என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் இந்தியாவில் இதன் விலை சுமார் ரூ.15,833 ஆக உள்ளது. அதாவது 10 கிராம் தங்கத்திற்கு துபாய்க்கும் இந்தியாவிற்கும் இடையே சுமார் ரூ.8,251 வரை விலை வித்தியாசம் உள்ளது.
22 கேரட் தங்கத்தை பொறுத்தவரை துபாயில் ஒரு கிராம் 563.50 திர்ஹம் (சுமார் ரூ.13,851) ஆக உள்ளது. இந்தியாவில் இது ரூ.14,514 ஆக விற்பனையாகிறது. இந்த விலை வேறுபாடு மற்றும் புதிய வரி விலக்கு முறையினால் துபாயில் தங்கம் வாங்குவது இந்தியர்களுக்கு லாபகரமான ஒன்றாகவே தொடர்கிறது. எனினும் அனுமதிக்கப்பட்ட எடைக்கு மேல் தங்கம் கொண்டு வரும்போது அதற்குரிய சுங்க வரியைச் செலுத்த வேண்டியது அவசியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்..!
அதேபோல துபாயில் தங்கம் வாங்கும் போது விலை மட்டுமல்ல, செய்கூலி பேச்சுவார்த்தை மூலமும் குறைய வாய்ப்பு இருப்பதால் ஒரே டிசைனுக்கே கடை கடையாக விலை மாறுபடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.. மேலும் துபாயில் விற்கப்படும் தங்க நகைகள் Dubai Municipality மற்றும் Dubai Central Laboratory கண்காணிப்பில் இருப்பதால் 22 கேரட், 24 கேரட் தூய்மை குறித்த நம்பகத்தன்மை அதிகம் என்கிறார்கள்..
சுங்க அதிகாரிகள்
அதே சமயம் இந்தியா திரும்பும்போது அனுமதிக்கப்பட்ட எடைக்குள் இருந்தாலும் சுங்க அதிகாரிகள் வாங்கிய ரசீது, தேதி மற்றும் பயண கால விவரங்களை சரிபார்க்கலாம் என்பதால் தங்கம் வாங்கிய ரசீதுகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.. இந்த சலுகை தங்க நகைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதையும், தங்க நாணயம், தங்க பிஸ்கெட் போன்றவற்றுக்கு முழு சுங்க வரி விதிக்கப்படும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்..
அதிலும் இந்த எடை அடிப்படையிலான வரிவிலக்கு ஒரு ஆண்டுக்கு மேல் வெளிநாட்டில் வசித்த இந்தியர்களுக்கு மட்டுமே பொருந்தும், குறுகிய கால சுற்றுலா பயணிகளுக்கு விதிமுறைகள் மாறுபடலாம்.. எனவே விலை வித்தியாசம் இருந்தாலும் பயணச் செலவு, அனுமதிக்கப்பட்ட எடை மற்றும் சுங்க விதிகளை கணக்கில் எடுத்த பிறகே துபாயில் தங்கம் வாங்குவது உண்மையில் லாபமா என்பதை தனிப்பட்ட முறையில் மதிப்பீடு செய்ய வேண்டும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்..!!!
-
Gold Rate Today: காலையிலேயே மிக பெரிய அதிர்ச்சி.. சட்டென எகிறிய தங்கம் விலை.. என்ன இப்படி ஆகிடுச்சு! -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
சவரன் ரூ.1.20 லட்சத்தைத் தாண்டிய தங்கம்.. இப்போது அடகு வைப்பது புத்திசாலித்தனமா? ‘பவுன்’ கணக்கு இதோ -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!!












Click it and Unblock the Notifications