தங்கம் விலை.. இனி என்ன நடக்கும்? சீக்ரெட்டை உடைத்த கோல்டு குரு சாந்தகுமார்.. நோட் பண்ணுங்க
சென்னை: மத்திய பட்ஜெட் 2026 தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து 'கோல்டு குரு' சாந்தகுமார் ஒன்இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் உரை ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்த போதே, இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அளவுக்கு பெரும் சரிவு ஏற்பட்டது.

நேற்று பட்ஜெட்டில் பட்ஜெட்டில் எதிர்கால வர்த்தகம் (Futures & Options) மீதான செக்யூரிட்டி டிரான்ஸாக்ஷன் வரி (STT) உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது MCX போன்ற சந்தைகளில் தங்கத்தை வர்த்தகம் செய்பவர்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தும். அதாவது, நீங்கள் லாபத்திற்காகத் தங்கம் வாங்கினாலும், அரசுக்குச் செலுத்தும் வரி முன்பை விட அதிகமாக இருக்கும்.
தற்போது தங்கம் மற்றும் வெள்ளி மீதான அடிப்படை இறக்குமதி வரி 6% ஆக உள்ளது. இதை இன்னும் குறைக்க வேண்டும் என்று நகை வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அரசு இந்த வரியைக் குறைத்தால், கடைகளில் நாம் வாங்கும் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது. ஆனால் குறைக்கப்படவில்லை. அதே சமயம் வரி அதிகரிக்கப்படவில்லை. இதனால் பல தங்க வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். வரி குறையாத காரணத்தால்.. தங்கம் விலையும் பாதிப்பு அடைந்தது.
இறக்குமதி வரி ஏமாற்றம்
இந்த நிலையில் பட்ஜெட் தொடர்பாக 'கோல்டு குரு' சாந்தகுமார் நம்மிடம் அளித்த பேட்டியின் சாராம்சம் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது, இந்த பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி (Import Duty) 6%-லிருந்து குறைக்கப்படும் என்று நகைக்கடை உரிமையாளர்களும் பொதுமக்களும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், நிதியமைச்சர் இதில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஒருவேளை இந்த வரி குறைக்கப்பட்டிருந்தால், ஒரு சவரன் தங்கம் 8,000 முதல் 11,000 ரூபாய் வரை குறைந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என்று சாந்தகுமார் குறிப்பிடுகிறார்.
தங்கம் விலையில் திடீர் சரிவு: என்ன காரணம்?
பட்ஜெட் அறிவிப்புக்கு முன்னதாக வரி குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பால், சந்தையில் தங்கம் விலை சுமார் 9% வரை திடீரென சரிந்தது. இது ஒரு தற்காலிகமான சரிவுதான் என்றும், வரி குறைக்கப்படாததால் விலை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரிக்கிறார்.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு: தங்கப் பத்திர விதிகளில் மாற்றம்
தங்கப் பத்திரங்களில் (SGB) முதலீடு செய்பவர்களுக்கு ஒரு முக்கியமான சட்ட மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் ரிசர்வ் வங்கியிடம் நேரடியாகப் பத்திரங்களை வாங்கி, 8 ஆண்டுகள் முதிர்வு காலம் வரை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வரி விலக்கு அளிக்கப்படும்.
பங்குச் சந்தையில் மற்றவர்களிடமிருந்து வாங்கப்படும் பத்திரங்களுக்கு இனி வரி விலக்கு கிடையாது என்பதை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தங்கம் வாங்க இது சரியான நேரமா?
திருமணத் தேவைக்காக நகை வாங்குபவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு என்று அவர் கூறுகிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரு சவரனுக்கு சுமார் 16,000 ரூபாய் வரை விலை குறைந்துள்ளதால், இப்போது வாங்குவது லாபகரமாக இருக்கும்.
எதிர்காலக் கணிப்பு: 2 லட்சத்தை தொடுமா தங்கம்?
சர்வதேச அரசியல் சூழல் மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகளால், இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலை மீண்டும் கிடுகிடுவென உயர வாய்ப்புள்ளது. 2026 இறுதியில் ஒரு சவரன் தங்கம் 2 லட்சம் ரூபாயையும், ஒரு கிலோ வெள்ளி 6 லட்சம் ரூபாயையும் எட்ட வாய்ப்புள்ளதாக அவர் கணிக்கிறார்.
நிபுணரின் ஆலோசனை
விலை இன்னும் குறையுமா என்று தயங்குபவர்கள், தங்களிடம் உள்ள பணத்தில் 50 சதவீதத்தை இப்போதே முதலீடு செய்யலாம் என்றும், மீதமுள்ள 50 சதவீதத்தை அடுத்த வாரம் நிலவரத்தைப் பார்த்து முதலீடு செய்யலாம் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.
-
தங்க பத்திர திட்டம்: 8 வருஷம் காத்திருந்தால் முழு வரி விலக்கு.. தங்கம் வாங்குபவர்களுக்கு டபுள் லாபம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
Kerala Lottery: கோவை போயிட்டு வரும்போது வாங்கிய டிக்கெட்! பாலக்காட்டில் 10 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி பூரிப்பு -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications