சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிஜமாகவே சிக்ஸர்.. டாஸ்மாக்குக்கு எதிராக பறந்த தமிழக அரசு ஆர்டர்! புது சட்டதிருத்தம்! என்னனு பாருங்க

டாஸ்மாக் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது தமிழக அரசு

Google Oneindia Tamil News

சென்னை: டாஸ்மாக் கடைகள் திறப்பை மக்களே தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்ட திருத்தம் கொண்டுவந்துள்ளது... அதற்கான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.. குறிப்பாக கோவில்கள் மற்றும் பள்ளிகள் அருகே டாஸ்மாக் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இது தொடர்பான எத்தனையோ போராட்டங்களை பெண்களே முன்னெடுத்துள்ளனர்.. இதன்காரணமாக பல டாஸ்மாக்குகளை அரசே இழுத்து மூடியுள்ளது..

 டாஸ்மாக்குகள்

டாஸ்மாக்குகள்

தவிர்க்க முடியாத பட்சத்தில், பொதுமக்களுக்கு இடையூறாக சொல்லப்படும் டாஸ்மாக்குகளை ஊருக்கு வெளியே ஒதுப்புறமாக இடம்மாற்ற செய்தும் உத்தரவிட்டது.. காரணம், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், கோவில்கள், பள்ளிகள், கல்லூரிகளின் அருகில் மதுபானக் கடைகள் திறக்கக்கூடாது என்பது தான் அரசின் கொள்கையாக உள்ளது.

 பரிசீலனை

பரிசீலனை

எனினும் சில இடங்களில் இவைகளை செயல்படுத்த முடியாமல் போய்விடுகிறது.. மக்கள் போராட்டம் நடத்திய பிறகு, சில நாட்கள் பரிசீலிப்பிற்காக அத்தகைய டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படுகின்றன. மறுபடியும் அதே இடத்தில் கடைகள் திறக்கப்பட்டு விடுகின்றன.. எனவே, டாஸ்மாக் மாதுபானக் கடைகளை அமைக்கும்போது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் வகையில், அதன் சட்டவிதியில் தமிழ்நாடு அரசு தற்போது திருத்தம் செய்துள்ளது.

கலெக்டர்கள்

கலெக்டர்கள்

அதன்படி மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு, அவர்களிள் ஆட்சேபங்கள் பரிசீலிக்கப்பட்டு அதன்பிறகே, டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படும்.. மக்களின் மாற்று கருத்துகளை பரிசீலிக்காமல் எந்த டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் திறக்க அனுமதி வழங்க கூடாது... இதனை மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்யவேண்டும். மக்கள் எதிர்ப்பை மீறி கடைகள் திறக்கப்பட்டால் 30 நாட்களுக்குள் கலெக்டர் முடிவை எதிர்த்து மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல்முறையீடு செய்யலாம் என்றும் அரசு அந்த சட்டத்திருத்தத்தில் தெரிவித்துள்ளது.

மதுபான கடைகள்

மதுபான கடைகள்

குடியிருப்பு பகுதிகள், பள்ளி கல்லூரி பகுதிகள், பெண்கள் அதிகம் நடமாடும் பகுதிகள், வழிபாட்டு பகுதிகள், மாணவர்கள் அதிகம் கூடும் பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இப்போது கொண்டு வந்துள்ள இந்த சட்டதிருத்தம் மக்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

English summary
good announcement: new legislation to prevent people to open tasmac shops
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X