ஆசிரியர்கள் மற்றும் கல்வி பணியாளர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளி கல்விதுறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
சென்னை : ஆசிரியர்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குனரகம். ரூ.6 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை ஆசிரியர்களுக்கு கடன் உதவி வழங்கப்படும் என்றும் ஆசிரியர்கள் திருமணம் செய்யவும், புதிய பைக், கார் வாங்கவும் கடன் உதவி அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக ஆட்சிக்கு வந்த உடனேயே 4000 ரூபாய் கொரோனா நிவாரணம் அளிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படியே நிவாரணமும் இரண்டு தவணைகளாக அளித்தார்.
இதேபோல் மகளிர் மற்றும் திருநங்கைகள் அரசு டவுன் பஸ்களில் இலவச பயணம் செய்யலாம் என்று அறிவித்தார். அந்த திட்டமும் அமலில் தற்போது உள்ளது. ஆவின் பால் விலையும் லிட்டருக்கு 3 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் மீது ரத்து
இதேபோல் கடந்த ஆட்சியில் போராடிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிராக கடந்த ஆட்சியில் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையும் ரத்து செய்து அண்மையில முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

கடன் உதவி
இந்நிலையில் ஆசிரியர்களுக்கு இன்னொரு மகிழ்ச்சியான அறிவிப்பினை பள்ளி கல்வி துறை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் ரூ.6 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை ஆசிரியர்களுக்கு கடன் உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பைக் வாங்க, கார் வாங்க கடன்
ஆசிரியர்கள் திருமணம் செய்யவும், புதிய பைக், கார் வாங்கவும் கடன் உதவி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இணை இயக்குனர் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது,. .
கடன் உதவி திட்டத்தை ஆசிரியர்கள் மட்டுமின்றி, கல்வித்துறை பணியாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் மகிழ்ச்சி
அரசு மற்றும் உதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் வழங்கப்பபட இந்த கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் குறைவு என்பதால் இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை ஊழியர்கள் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

அமைச்சர் தகவல்
இதனிடையே பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்விக்கு அண்மையில் பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி, மருத்துவ வல்லூநர்கள் மற்றும் பெற்றோர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும் என்று கூறினார். கடந்த இரண்டு வருடங்களாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தாறுமாறாக அதிகரித்துள்ளது. பலரும் அரசு பள்ளியில் விரும்பி சேர்த்து வருகிறார்கள். இதை தக்க வைக்க உள்கட்டமைப்பை மேம்படுத்தம் பணியில் தமிழக அரசு ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
-
ஆப் லோன்களுக்கு மாற்றாக உள்ள சூப்பர் வழிகள்.. கடன் வாங்கியவர்களுக்கு லட்சக்கணக்கில் லாபம் -
மாசம் 1.7 லட்சம் சம்பளம், கையில் மிஞ்சுவது வெறும் ரூ2520! இளம் தலைமுறை குடும்பங்களின் மறைக்கப்பட்ட கண்ணீர் கதை -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications