மாநில அரசு உரையில்.. ஆளுநர் புள்ளி, கமா கூட சேர்க்க முடியாது.. லோக்சபா முன்னாள் செயலாளர் விளக்கம்
சென்னை : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று சட்டமன்றக் கூட்டத்தில், அரசு தயாரித்த உரையின் சில பகுதிகளை தான் உரையாற்றும்போது தவிர்த்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், "மாநில அரசு தயாரித்த உரையை மாற்றி வாசிப்பதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. ஆளுநரால், உரையில் ஒரு ஃபுல் ஸ்டாப், கமா கூட சேர்க்க முடியாது." என லோக்சபாவின் முன்னாள் பொதுச் செயலர் பி.டி.டி. ஆச்சாரி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று வரலாறு இதுவரை கண்டிராத சம்பவங்கள் நடைபெற்றன. ஆளுநர் பேசிய உரையை அவைக்குறிப்பில் ஏற்றக்கூடாது என முதலமைச்சரே தீர்மானம் கொண்டு வந்தார், தேசிய கீதத்திற்கு முன்னதாகவே ஆளுநர் எழுந்து அவையிலிருந்து வெளியேறினார். இதற்கெல்லாம் மூல காரணமாக அமைந்தது, ஆளுநர் தனது உரையில் சில பகுதிகளை வாசிக்காமல் விட்டதே.
தமிழ்நாடு அரசால் தயாரித்து அனுப்பப்பட்ட உரையில் சில பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்த ஆளுநர் ரவி, சில பகுதிகளை சொந்தமாக சேர்த்து உரையாற்றினார். ஆளுநர் உரை முடிந்த பிறகு வழக்கத்திற்கு மாறாக, எழுந்து உரையாற்றினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

தவிர்த்த ஆளுநர்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று சட்டமன்றத்தில் ஆற்றிய உரையில், திராவிட மாடல், சமூகநீதி, பெரியார், அண்ணா, அம்பேத்கர், மாநில மொழிகளை அலுவல் மொழியாக்குவது, தமிழ்நாடு வன்முறையில் இருந்து விடுபட்டுள்ளது உள்ளிட்ட வார்த்தைகளை வாசிக்காமல் தவிர்த்துவிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநர் உரையாற்றும்போது திமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கூச்சல் செய்தனர். ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தபோது அந்த வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.

ப்ரிண்ட் ஆன உரைதான்
வரலாற்றில் முதல்முறையாக ஆளுநர் உரை முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழ்நாடு அரசு தயாரித்த அறிக்கையை படிக்காமல் ஆளுநர் புறக்கணித்தது மிகவும் வருத்தம் அளிப்பதாக தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், அச்சிடப்பட்டதை மீறி ஆளுநர் பேசியதை அவை குறிப்பில் ஏற்றக்கூடாது என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். முதலமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் போதே, தேசிய கீதம் இசைக்கும் முன்பு பாதியிலேயே ஆளுநர் வெளியேறினார். முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்த சபாநாயகர், ஆளுநரின் ஒப்புதலோடு அச்சிடப்பட்ட உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும் என அறிவித்தார்.

ஜனநாயக மரபா?
முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தின்படி அச்சடிக்கப்பட்ட ஆளுநர் உரை சட்டப்பேரவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆளுநர் வெளியேறிய நிலையில் அதிமுக, பாஜக எம்.எல்.ஏ.க்களும் வெளியேறினர். ஆளுநரை அமர வைத்துக் கொண்டு முதலமைச்சர் பேசுவது மரபுக்கு எதிரானது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், சட்டப்பேரவையில் ஆளுநரை அழைத்து அசிங்கப்படுத்தி உள்ளனர், இதுதான் ஜனநாயக மரபா? எனக் கேள்வி எழுப்பினார்.

ஆளுநருக்கு கண்டனம்
சட்டப்பேரவையில் நடந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, இதுவரை பின்பற்றப்பட்ட மரபு மற்றும் விதிகளுக்கு எதிராக ஆளுநர் உரையை வாசித்துள்ளார். ஆளுநர் உரைக்கு ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால், அதில் சிலவற்றை விட்டுவிட்டும், சிலவற்றை சேர்த்தும் வாசித்துள்ளார். மேலும், தேசிய கீதம் இசைக்கும் முன்னரே ஆளுநர் வெளியே சென்றுள்ளார். இதன் மூலம் தேசிய கீதத்தை அவமதிப்பு செய்துள்ளார் என்று குற்றம்சாட்டினார். திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களும், ஆளுநர் தனது உரையை முழுமையாக வாசிக்காததற்கு கடுமையாக கண்டனங்களை முன்வைத்து வருகின்றனர்.

விவாதம்
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்னாமலை, ஆளுநருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். ஆளுநர் உரை திமுக அரசால் எழுதி வழங்கப்பட்ட உரைதான். திமுக அரசு தங்கள் கட்சியின் பொதுக்கூட்ட உரைகளை சட்டமன்றத்தில் ஆளுநர் படிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் நடந்து வரும் சூழலில் ஆளுநர், மக்கள் கருத்துக்கு மாறாக, தமிழ்நாடு அமைதிப் பூங்கா என்று அவரால் எப்படி பொய் சொல்ல முடியும் என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தை அடுத்து, தமிழ்நாடு அரசு அனுப்பிய உரையை ஆளுநர் தன்னிச்சையாக மாற்ற முடியுமா என்ற விவாதங்கள் கடுமையாக எழுந்துள்ளன.

புள்ளி, கமா கூட சேர்க்க முடியாது
இந்நிலையில் இதுதொடர்பாக லோக்சபாவின் முன்னாள் பொதுச் செயலர் பி.டி.டி. ஆச்சாரி ஆங்கில செய்தி ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறுகையில், "மாநில அரசு தயாரித்த உரையை மாற்றி வாசிப்பதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. ஆளுநரால், உரையில் ஒரு ஃபுல் ஸ்டாப், கமா கூட சேர்க்க முடியாது. ஆளுநர் உரையானது, அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை பிரதிபலிக்கும் ஓர் ஆவணம். அதனை அப்படியே வாசிக்க வேண்டும் என்பதுதான் அரசியலமைப்பு நிலைப்பாடு." எனத் தெரிவித்துள்ளார்.

தீர்மானமே தேவையில்லை
மேலும் பேசியுள்ள ஆச்சாரி, "ஆளுநர் உரையின் அச்சிடப்பட்ட பகுதி மட்டுமே சட்டப்பேரவைக் குறிப்பில் பதிவாகும் என்பதால், முதலமைச்சர், ஆளுநர் ஆற்றிய உரையை அவைக்குறிப்பில் ஏற்றக்கூடாது என்ற தீர்மானத்தை முன்வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அது ஆளுநரின் சபை அல்ல. கவர்னர் சட்டசபை உறுப்பினர்களிடம் உரையாற்றுகிறார். சட்ட சபை நடைபெறுவது சபாநாயகர் தலைமையில் தான். தமிழக அரசு இயற்றி, ஆளுநர் ஒப்புதல் அளித்த அறிக்கையைத்தான் சபாநாயகர் அவைக்குறிப்பில் ஏற்றுவார்." எனத் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications