ஆளுநர் இருக்கும்போதே அதிரடி தீர்மானம் கொண்டு வந்த முதல்வர்.. திடீரென வெளியேறிய ரவி.. அனல் பறந்த அவை
சென்னை: 2023ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடரில் பங்கேற்ற ஆளுநர் ரவி, முதலமைச்சர் கொண்டு வந்த பரபரப்பு தீர்மானத்தால் கோபமுடன் பாதியிலேயே வெளியேறினார்.
சபை நடவடிக்கை முடிவதற்கு முன்னரே ஆளுநர் ரவி வெளியேறிய நிகழ்வால் சட்டசபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஆளுநர் முழுமையாக படிக்கவில்லை என குற்றஞ்சாட்டிய முதலமைச்சர் ஸ்டலின், இதற்காக கண்டனம் தெரிவித்ததோடு அச்சிடப்பட்ட உரை மட்டுமே அவைக்குறிப்பில் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றினார்.

முதல்நாளே இப்படியா
தமிழக சட்டசபையின் 2023ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் வழக்கம் போல் ஆளுநர் உரை இதில் இடம்பெற்றது. அண்மையில் தமிழ்நாடு குறித்து ஆளுநர் ரவி பேசிய பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேரவை தொடங்கியவுடன் முழக்கங்கள் எழுப்பியதுடன் வெளிநடப்பும் செய்தனர். இதனால் அப்செட் ஆன ஆளுநர் ரவி அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தனது உரையை வாசித்து முடித்தார்.

ஆளுநர் ஷாக்
இதனிடையே அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் பாதி பகுதியை ஆளுநர் ரவி படிக்கவில்லை என குற்றஞ்சாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின் இதற்காக கடும் கண்டனத்தை பதிவு செய்தார். மேலும், அச்சிடப்பட்ட உரையை மட்டுமே அவை குறிப்பில் பதிவு செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தையும் ஆளுநர் அவையில் இருந்தபோதே கொண்டு வந்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ஆளுநர் ரவி ஒரு நொடி ஷாக் ஆனதோடு, அங்கிருந்து கடும் கோபத்துடன் வெளியேறிச் சென்றார்.

தடுக்கவில்லை
இதனிடையே ஆளுநர் ரவி வெளியேறும் போது அவரை தடுக்கவோ, சமாதானப் படுத்தவோ அரசுத் தரப்பில் யாரும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. போனால் போங்க எங்களுக்கு என்ன கவலை என்கிற வகையில் ஆளுநர் வெளியேறும் போதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். முதல்வர் பேசிக்கொண்டிருக்கும் போது ஆளுநர் வெளியேறிய நிகழ்வால் சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாஜகவினர் கூச்சல்
ஆளுநரை அவமரியாதை செய்துவிட்டதாக பாஜகவினர் வரிந்துக் கட்டிக் கொண்டு குரல் கொடுத்தனர். அவர்களுக்கு பதில் கொடுப்பதற்காக திமுக எம்.எல்.ஏ.க்கள் பதிலுக்கு எழுந்து நின்றனர். முதல்வர் அவர்களை நோக்கி அமைதியாக அமருமாறு கேட்டுக்கொண்டதற்கு பின்னர் இருக்கைகளில் அமர்ந்தனர். முதல்நாளே இப்படி என்றால் இனி அடுத்தடுத்த நாட்களில் என்னவெல்லாம் நிகழுமோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications